| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3750 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.) 7 | உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7 | வண்டு களிக்கும் பொழில் சூழ்,Vandu kalikkum pozhi soozh - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட திரு பேரான்,Thiru peraan - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான் கண்டு களிப்ப,Kandu kalippa - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான் உண்டு களித்அதற்கு,Undu kalidhu atharkku - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு உம்பர் என் குறை,Umbar en kurai - மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ? மேலைத் தொண்டு உகளித்து,Melai thondu ugaliththu - மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன்,Andhi thozhum sollu petren - அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன். |