| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3752 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இப்பதிகத்திற்கு இதுதான் உயிரான பாட்டு. அடியனை இன்று இவ்வளவாக விஷயீகாரிக்கைக்கும் முன்பு நெடுநாள் உபேகூஷித்திருந்ததற்கும் காரணமருளிச்செய்யவேணுமென்று தமக்குண்டான ஜிஜ்ஞாஸையை வெளியிடுகிறாராயிற்று.) 9 | இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9 | என்னை இன்று பொருள் ஆக்கி,Ennai inru porul aaki - அநாதிகாலம் உபேகூஷிக்கப்படி;டிந்தவென்னை இன்று ஒரு வஸ்துவாகக் கொண்டு தன்னை என்னுள் வைத்தான்,Thannai ennul vaithaan - பரம போக்யனன தன்னைமஹேயமான என்னெஞ்சிலே தானே கொண்டு வைத்தான்; அன்று என்னை புறம்போக புணர்த்தது,Andru ennai purampoga punarthathu - (இன்று இப்படிச் செய்தவனானவிவன்) அநாதிகாலம் நான்கை கழிந்துபோம்படி என்னை உபேகூஷித்திட்டுவைத்தது என்செய்வான்,En seivaan - எதற்காக? குன்று என்ன திகழ்மாகங்கள்,Kunru enna thigazhmaagangal - குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால் சூழப்பட்ட திருபேரான்,Thiruperaan - திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான் ஒன்று,Ondru - இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை எனக்கு அருள் செய்ய,Enakku arul seiya - எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று உண்ர்த்தல் உற்றேன்,Unarththal utren - விஞ்ஞாபிக்கின்றேன். |