| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3753 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.) 10 | உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10 | எத்தாய்,Eththaai - எம்பெருமானே! உற்றேன்,Uttren - (உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்; உகந்து பணி செய்து,Ugandhu pani seidhu - திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து உன் பாதம் பெற்றேன்,Un paadham petren - உன்திருவடிகளை அணுகினவானனேன்; ஈதே இன்னம் வேண்டுவது,Eedhe innam venduvadhu - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்; கற்றார்,Katrar - குரு முகமாகக் கற்றவர்களாயும் மறைவாணர்கள்,Maraivaanargal - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vaal - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும் திருப்பொராற்கு அற்றார்,Thiruporaarku atrar - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான் அடியார் தமக்கு,Adiyaar thamakku - பாகவதர்களுக்கு அல்லல் நில்லா,Allal nillaa - அநுபவ விரோதிகள் நில்லாது போம், |