| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3754 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.) 11 | நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல் நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11 | அல்லல் நில்லா,Allal nillaa - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய் நீள் வயல் சூழ்,Neel vayal soozh - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான திருப்பேர் மேல்,Thirupper mel - திருப்பேர் நகர் விஷயமாக நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,Nallaar palarvaal kurukoorch sadagopan - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்,Sol aar tamizh aayiraththul ivai paththum vallaar - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான தொண்டர் ஆள்வது,Thondar aalvadhu - பாகவதர் களானவர்கள் ஆளுமிடம் சூழ்பொன் விசும்பு.,Soozh pon visumbu - பரமபதமாகும் |