Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3772 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3772திருவாய்மொழி || 10-10 முனியே (பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்) 7
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7
கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ, kolam malarpaavaikku anbu aagiya en anbeyo - பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே!
நீலம் வரை, neelam varai - நீலமணி மலை யொன்று
இரண்டு பிறை கவ்வி, irandu pirai kavvi - இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு
நிமிர்ந்தது ஒப்ப, nimirndhadhu oppa - எழுந்திருந்தாற் போலே
கோலம் வராகம் ஒன்று ஆய், kolam varaagam ondru aai - எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய்
நிலம், nilam - பூமியை
கோடு இடை கொண்ட, kodu idai konda - எயிற்றிலே கொண்டெடுத்த
எந்தாய், endhaai - எம்பெருமானே!
நீலம் கடல் உடைந்தாய், neelam kadal udaindhaai - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே!
உன்னை பெற்று, unnaai petru - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து
இனி போக்குவனோ, ini pokkuvano - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ!