| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3773 | திருவாய்மொழி || 10-10 முனியே (மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.) 8 | பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8 | உயிர் ஆய், uyir aay - கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் பயன் அவை ஆய், payan avai aay - கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய், im moovulagum mutra peruthooru aay - இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய் தூற்றில் புக்கு, thootril pukku - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து முற்ற கரந்து ஒளித்தாய், mutra karandhu oliththai - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய் என் முதல் தனி வித்தே ஓ, en mudhal thani vithe o - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே! என் தனிபேர் உயிரை உன்னை , en thaniper uyirai unnai - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை பெற்று இனி போக்குவனோ , petru ini pokkuvano - பெற்று வைத்து இனி விடுவேனோ! |