| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3775 | திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10 | சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10 | சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய் முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே! சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய் பரம், Param - மேற்பட்டதாய் நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே! சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய் சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே! சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது அற, Ara - தீரும்படியாக சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே! |