திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3778 | இராமாநுச நூற்றந்தாதி || 2 | கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே | பதவுரை Show / Hideகள் ஆர் பொழில் தென் அரங்கன், Kal Aar Pozhil Then Arangan - தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய கமலம் பாதங்கள், Kamalam Paathangal - தாமரை போன்ற திருவடிகளை நெஞ்சில் கொள்ளா, Nenjin Kollaa - தமது நெஞ்சிலே வையாத மனிசரை நீங்கி, Manisarai Neengi - மனிதர்களை விட்டொழித்து, குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன், Kuraiyal Piraan Adi Keezh Villadha Anban - திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய மிக்க சீலம் அல்லால், Mikka Seelam Allaal - சிறந்த சீல குணத்தைத் தவிர ஒன்று, Onru - வேறொன்றையும் என் நெஞ்சு உள்ளாது, En Nenju Ulladhu - எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது; எனக்கு உற்ற பேர் இயல்வு, Enakku Utra Peer Iyavvu - எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு ஒன்று அறியேன், Onru Ariyeen - ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன். |