திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 47 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (மூங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷணமாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது ஸகல கருமங்களும் தீயினில் தூசாயொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸக்தியுமில்லை என்றாயிற்று) | வேதப்பிரான் பட்டர் முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான் | பதவுரை Show / HideMunnai vinai, முன்னை வினை - முன்னே செய்த பாபங்களெல்லாம் Agala, அகல - ஒழிவதற்காக Moongil kudi Amudhan, மூங்கில் குடி அமுதன் - மூங்கிற்குடி என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுதனாருடைய Pon am kazhal, பொன் அம் கழல் - பொன்போல் அழகிய Kamalapothu irandum, கமலப்போது இரண்டும் - பாதாரவிந்தங்களிரண்டையும் Ennudaiya sennikku, என்னுடைய சென்னிக்கு - எனது தலைக்கு Ani aaga, அணி ஆக - ஆபரணமாக Serthinen, சேர்த்தினேன் - பொருந்தவைத்துக் கொண்டேன் Yaan, யான் - இப்படி அமுதனாருடைய திருவடிகளைச் சூடப் பெற்ற அடியேன் Then pulatharkku, தென் புலத்தார்க்கு - தெற்கு திக்கிலுள்ளாரான யமகிங்கரர்கட்கு Ennukku, என்னுக்கு - எதுக்காக Kadavu udaiyen, கடவு உடையேன் - ப்ராப்தி யுடையேன்? |
| தனியன் 48 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (விஷயாந்தரங்களின் அனுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் யாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து, அவற்றில் நசையற்றுத் தம்மைவந்து அடி பணிகின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய், இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானார் விஷயமாக, பகவத் பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனார் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய பிரபந்தத்தை ஓதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்றார்) | வேதப்பிரான் பட்டர் நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே | பதவுரை Show / HideNenjame, நெஞ்சமே - மனமே Nayam tharu, நயம் தரு - விஷயங்களால் தரப்படுகிற Per inbam ellaam, பேர் இன்பம் எல்லாம் - சிற்றின்பங்கள் யாவும் Pazhuthu endru, பழுது என்று - வ்யர்த்தங்களென்று (அவற்றை விட்டொழித்து) Nanninar paal, நண்ணினர் பால் - தம்மை ஆச்ரயித்தவர்கள் விஷயத்தில் Sayam tharu keerthi, சயம் தரு கீர்த்தி - ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான Ramanusa muni, இராமானுச முனி - எம்பெருமானாருடைய Thaal inai mel, தாள் இணை மேல் - இரண்டு திருவடிகள் விஷயமாக Uyarndha gunathu, உயர்ந்த குணத்து - சிறந்த குணசாலியான Thiruvarangathu amudhu, திருவரங்கத்து அமுது - திருவரங்கத் தமுதனார் Ongum anbaal, ஓங்கும் அன்பால் - கொழுந்து விட்டோங்கிய பக்தியினாலே Iyambum, இயம்பும் - அருளிச்செய்த Kalithurai anthaadhi, கலித்துறை அந்தாதி - கட்டளைக் கலித்துறையினால் அமைந்த நூற்றந்தாதியை Odha, ஓத - அத்யயநம் செய்ய Isai, இசை - ஸம்மதித்திருக்கக் கடவை |
| தனியன் 49 | இராமாநுச நூற்றந்தாதி - தனியன் || (பொருள் வேதங்களுக்கு முரண்பட்ட உபதேசங்களைக் கூறும் ஆறு சமயங்களையும் மிகவும் எளிதாக வென்ற யதிராஜனே! உனது திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் தொண்டு புரிந்தபடி உள்ளவரும், உம்மிடம் மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய திருவரங்கத்தமுதனார், தனது விரிவான சொற்கள் கொண்டு உனது பெருமைகள் மற்றும் திருநாமங்களை விரிவாக உரைத்தார். அந்தச் சொற்கள் இரவும் பகலும் எனது நாவில் நிலைத்து நிற்கும்படி நீரே அருளவேண்டும். இதுவே எனது விண்ணப்பம் ஆகும்) | அமுதனார் சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமானுச! இதென் விண்ணப்பமே | பதவுரை Show / HideAru samayam, அறு சமயம் - அப்ராமாணிகங்களான அறுமதங்களையும் Vellum, வெல்லும் - கண்டித்தருளின Parama, பரம - ஆரியரான Iramanusa, இராமானுச - எம்பெருமானாரே! Unadhu adi pothukku, உனது அடி போதுக்கு - தேவரீருடைய பாதாரவிந்தங்களிலே Thondu seiyum, தொண்டு செய்யும் - வாசிக கைங்கர்யம் பண்ணுகிற Nal anbar, நல் அன்பர் - பரம பக்தர்கள் Sollin thogai kondu, சொல்லின் தொகை கொண்டு - சப்த ராசிகளைக் கொண்டு Ethum, ஏத்தும் - துதிக்கிற Un namam ellam, உன் நாமம் எல்லாம் - தேவரீருடைய திருநாமங்களெல்லாம் Enthan navilulle, என்தன் நாவிலுள்ளே - எனது நாவிலே Allum pagalum, அல்லும் பகலும் - அஹோராத்ரமும் Amarum padi, அமரும் படி - பொருந்தியிருக்கும் படி Nalku, நல்கு - க்ருபை செய்தருள வேணும் Idhuve en vinnappam, இதுவே என் விண்ணப்பம் - இவ்வளவே அடியேன் செய்யும் விஞ்ஞாபனம் |
| 3777 | இராமாநுச நூற்றந்தாதி || 1 | பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே | பதவுரை Show / Hideநெஞ்சே!, Nenje - ஓ மனமே! பூ மன்னு மாது, Poo Mannu Maathu - தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி பொருந்திய மார்பன், Porundhiya Maarban - (அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய திருமார்பை யுடையனான பெருமானுடைய புகழ் மலிந்த பா, Pugazh Malintha Paa - திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே மன்னு மாறன், Mannu Maaran - ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய அடி, Adi - திருவடிகளை பணிந்து, Panindhu - ஆச்ரயித்து உய்ந்தவன், Uyndhavan - உஜ்ஜீவித்தவரும் பல் கலையோர் தாம் மன்ன வந்த, Pal Kalaiyore Thaam Mann Vantha - ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானுடைய சரணாரவிந்தம், Saranaravindham - திருவடித் தாமரைகளை நாம் மன்னி வாழ, Naam Manni Vaazha - நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக அவன் நாமங்களே, Avan Naamangalye - அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே சொல்லுவோம், Solluvoam - ஸங்கீர்த்தநம் பண்ணுவோம் |
| 3778 | இராமாநுச நூற்றந்தாதி || 2 | கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே | பதவுரை Show / Hideகள் ஆர் பொழில் தென் அரங்கன், Kal Aar Pozhil Then Arangan - தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய கமலம் பாதங்கள், Kamalam Paathangal - தாமரை போன்ற திருவடிகளை நெஞ்சில் கொள்ளா, Nenjin Kollaa - தமது நெஞ்சிலே வையாத மனிசரை நீங்கி, Manisarai Neengi - மனிதர்களை விட்டொழித்து, குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன், Kuraiyal Piraan Adi Keezh Villadha Anban - திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய மிக்க சீலம் அல்லால், Mikka Seelam Allaal - சிறந்த சீல குணத்தைத் தவிர ஒன்று, Onru - வேறொன்றையும் என் நெஞ்சு உள்ளாது, En Nenju Ulladhu - எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது; எனக்கு உற்ற பேர் இயல்வு, Enakku Utra Peer Iyavvu - எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு ஒன்று அறியேன், Onru Ariyeen - ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன். |
| 3779 | இராமாநுச நூற்றந்தாதி || 3 | பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே | பதவுரை Show / Hideபேர்இயல் நெஞ்சே!, Peeriyal Nenjee - மிகவும் கம்பீரமான மனமே! உன்னை அடிபணிந்தேன், Unnai Adhipanindhen - உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்; பேய் பிறவி, Pei Piravi - ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான பூரியரோடு உள்ள சுற்றம், Pooviyarodu Ulla Suttam - நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை புலர்த்தி, Pularthi - போக்கடித்து பொருவு அரு சீர், Poruvu Aru Seer - ஒப்பற்ற குணங்களை யுடையவரும் ஆரியன், Aariyan - சிறந்த அநுஷ்டாக முடையவரும் செம்மை, Semmai - (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான இராமாநுச முனிக்கு, Iramanusa Munikku - எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு உடையார், Udaiyar - பக்தி பண்ணுவதையே பரம புருஷார்க்தமாக வுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய அடிக் கீழ், Adik Keel - திருவடிகளின் கீழே என்னை, Ennai - (பரம நீசனாயிருந்த) என்னை சேர்த்ததற்கே, Sertthatharkae - கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்) |
| 3780 | இராமாநுச நூற்றந்தாதி || 4 | என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே | பதவுரை Show / Hideஊழி முதல்வனையே, Oozhi Muthalvanaiye - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே பன்ன, Panna - (எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி பணித்த, Paniththa - (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த பரன் இராமாநுசன், Paran Iramanusan - ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார் புவியில், Puviyil - இந்தப் பூமியிலே என்னை ஒரு பொருள் ஆக்கி, Ennai Oru Porul Aakki - (அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து, Marul Surandha Munnai Pazhai Vinai Veer Aruththu - அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி பாதமும், Paadhamum - தமது திருவடிகளையும் என் சென்னி, En Chenni - எனது தலையிலே தரிக்க வைத்தான், Tharikka Vaiththaan - நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு) எனக்கு, Enakku - அடியேனுக்கு ஏதும் சிதைவு இல்லை, Aedhum Sithaivu Illai - எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை. |
| 3781 | இராமாநுச நூற்றந்தாதி || 5 | எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே | பதவுரை Show / Hideஎனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று, Enakku Utra Selvam Iramanusan Endru - ‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று இசைய கில்லா, Isaiya Killa - அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத மனக் குற்றம் மாந்தர், Manak Kutram Manthar - துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர் பழிக்கில், Pazhikkil - (இந்நூலைப்) பழிப்பவர்களானால் புகழ், Pugazh - (அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்; அவன், Avan - அவ்வெம்பெருமானாருடைய மன்னிய சீர் தனக்கு, Manniya Seer Thanakku - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு உற்ற, Utra - தகுதியான அன்பர், Anbar - தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள் பத்தி ஏய்ந்த இயல் விது என்று, Pathi Aeyndha Iyala Vidhu Endru - இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி) அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார், Avan Thirunamagal Saatrum En Paa Inam Kutram Kaanagillaar - அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள். |
| 3782 | இராமாநுச நூற்றந்தாதி || 6 | இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே | பதவுரை Show / Hideஈன் கவிகள், Een Kavigal - விலக்ஷணரான கவிகள் அன் பால், An Paal - ப்ரீதியினாலே இயலும் பொருளும், Iyalaum Porulum - சப்தமும் அர்த்தமும் இசைய, Isaiya - நன்கு பொருந்தும் படியாக தொடுத்து, Thoduthu - கவனம் பண்ணி பாடல்களிலே பக்தி இல்லாத, Bhakti Illadha - பக்தியற்றதான என் பாவி நெஞ்சால், En Paavi Nenjaal - என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே அவன் தன், Avan Than - அவ்வெம்பெருமானாருடைய மயல், Mayal - வ்யாமோஹம் தலையெடுத்து வாழ்த்தும் இராமானாசனை பயிலும், Vaazhthum Iraamaanachanaip Payilum - துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற பெரு கீர்த்தி, Peru Keerthi - அளவற்றகீர்த்திகளை மொழிந்திட, Mozhindida - பேசுவதாக மதி இன்மையால் முயல்கின்றன, Mathi Inmaiyaal Muyalginthana - புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன். |
| 3783 | இராமாநுச நூற்றந்தாதி || 7 | மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே. | பதவுரை Show / Hideமொழியை கடக்கும், Mozhiyai Kadakkum - வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான பெரு புகழான், Peru Pugazhaan - பெரிய புகழை யுடையவரும் முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும், Muk Kurumbu Aam Vanjak Kuzhiyai Kadakkum - கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும் நம், Nam - நமக்கு நாதருமான கூரத்து ஆழ்வான், Kooraathu Azhvaan - கூரத்தாழ்வானாடைய சரண், Saran - திருவடிகளை கூடிய பின், Koodiya Pin - நான் ஆச்ரயித்த பின்பு பழியை கடத்தும், Pazhaiyai Kadaththum - ஸர்வபாப நிவர்த்தகரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ் பாடி, Pugazh Paadi - நற் குணங்களைப் பாடி அல்லா வழியை கடத்தல், Allaa Vazhaiyai Kadaththal - ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான எனக்கு, Enakku - அடியேனுக்கு இனி, Ini - இனி மேலுள்ள கால மெல்லாம் யாதும் வருத்தம் அன்று, Yaadum Varuththam Andru - ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்) |
| 3784 | இராமாநுச நூற்றந்தாதி || 8 | வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திரு விளக் கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுச னெம் இறையவனே | பதவுரை Show / Hideவருத்தும், Varuththum - வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை மாற்ற, Maatra - போக்குவதற்காக எம் பொய்கைப்பிரான், Em Poigai Piraan - நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார் அன்று, Andru - முற் காலத்தில் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து, Maraiyin Kuruththin Porulaiyum Senthamizh Thannaiyum Kootti Ondra Thiriththu - வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒருதிரியாக்கி எரித்த திரு விளக்கை, Eritha Thiru Vilakkai - ஜ்வலிக்கக் செய்த (முதல் திருவந்தாதி யாகிற) திருவிளக்கை தன் திரு உள்ளத்தே, Than Thiru Ullaththae - தமது திருவுள்ளத்தே இருத்தும், Iruththum - வைத்துக் கொண்டிரா நின்ற பரமன் இராமாநுசன் எம் இறையவன், Paraman Iraamaanusan Em Iraivan - மஹா வைபவசாலியான எம்பெருமானார் எம் இறையவன், Em Iraivan - நமக்கு ஸ்வாமி |
| 3785 | இராமாநுச நூற்றந்தாதி || 9 | இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞான மென்னும்
நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறைய வைத் தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே | பதவுரை Show / Hideஇறைவனை, Iraivanai - ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை காணும், Kaanum - ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான இதயத்து, Idhayaththu - ஹ்ருயத்திலுள்ள இருள் கெட, Irul Keda - அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது நசிக்கும்படியாக ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய, Gyaanam Ennum Nirai Vilakku Ettriya - ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச்செய்த பூதத் திருவடி, Puthath Thiruvadi - பூதத்தாழ்வாருடைய தாள்கள், Thaalgal - திருவடிகளை நெஞ்சத்து, Nenchatthu - தமது திருவுள்ளத்திலே உறைய வைத்து, Uray Vaitthu - சாச்வதமாக ஸ்தாபித்து ஆளும், Aalum - (அவற்றையே) அநுபவிக்கின்ற இராமானுசன், Iraamanusan - எம்பெருமானாருடைய புகழ், Pugazh - திவ்ய குணங்களை ஒதும், Odhum - இடைவிடாது அநுஸந்திக்கின்ற நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்கள் தாம் இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இப் பூ மண்டலத்திலே மறையினை, Maraiyinai - வேதங்களை காத்து, Kaathu - ரக்ஷித்து மன்ன வைப்பவர், Manna Vaippavar - என்றைக்கும் அழிவில்லாதபடி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள் |
| 3786 | இராமாநுச நூற்றந்தாதி || 10 | மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள்
சென்னியிற் சூடும் திரு வுடையா ரென்றும் சீரியரே | பதவுரை Show / Hideமன்னிய, Manniya - ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற பேர் இருள், Pera Irul - (அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது மாண்ட பின், Maanda Pin - முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு, கோவலுள் ஆயனை, Kovalul Aayanai - திருக் கோவலூரில் ஆயனாரை மா மலராள் தன்னொடும், Maa Malaraal Thannodum - பிராட்டியோடு கூட கண்டமை, Kandamai - தாம் ஸேவித்த படியை காட்டும், Kaattum - “திருக் கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி தமிழ் தலைவன், Tamizh Thalaivan - தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை போற்றும், Poatrum - புகழுமவரான இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார் திறத்தில் அன்பு பூண்டவர், Anbu Poondavar - பக்தியை யுடையவர்களினது தாள், Thal - திருவடிகளை சென்னியில் சூடும் திரு உடையார், Chennaiyil Soodum Thiru Udaiyar - சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வ முடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள். |
| 3787 | இராமாநுச நூற்றந்தாதி || 11 | சீரிய நான்மறைச் செம் பொருள் செந் தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்,சரணாம் பதுமத்
தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை, என்னால் சொல் லொணா திக் கடலிடத்தே | பதவுரை Show / Hideசீரிய நால்மறை செம் பொருள், Seeriya Naalmarai Sem Porul - சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்விய பொருள்களை செம் தமிழால், Sem Tamizhal - அழகிய தமிழ்ப்பாசுரங்களினால் அளித்த, Alitha - அருளிச் செய்தவரும் சரணாம் பதுமம் தார் இயல் சென்னி, Saranam Pathumam Thar Iyala Chennai - திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப் பட்ட திரு முடியை யுடையரான இராமாநுசன் தன்னை, Iramanusan Thannai - எம்பெருமானாரை சார்ந்தவர் தம், Sarnthavar Tham - ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய பார் இயலும் புகழ், Par Iyalaum Pugazh - பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான பாண் பெருமாள், Pan Perumal - திருப் பாணாழ்வாருடைய காரியம் வண்மை, Kaariyam Vanmai - அநுஷ்டாந வைலக்ஷண்யமானது இக் கடல் இடத்து, Ik Kadal Idathu - கடல் சூழ்ந்த இப் பூமியில் என்னால் சொல்ல ஒணுது, Ennal Solla Onuthu - (இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது. |
| 3788 | இராமாநுச நூற்றந்தாதி || 12 | இடங் கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ
தடங்கும் இதயத் திராமானுசன்,அம் பொற் பாத மென்றுங்
கடங் கொண் டிறைஞ்சும் திரு முனிவர்க் கன்றிக் காதல் செய்யாத்
திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே | பதவுரை Show / Hideஇடம் கொண்ட கீர்த்தி, Idam Konda Keerthi - பூமி யெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான மழிசைக்கு இறைவன், Mazhisaiyukku Iraivan - திரு மழிசைப் பிரானாடைய இணை அடி போது, Inai Adi Podhu - உபய பாதார விந்தங்கள் அடங்கும், Adangum - குடி கொண்டிருக்கப் பெற்ற இதயத்து, Idhayaththu - திரு வுள்ளத்தை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாடைய அம் பொன் பாதம் என்றும், Am Pon Paatham Endrum - மிகவும் அழகிய திருவடிகளை என்றும், Endrum - எக் காலத்திலும் கடம் கொண்டு இறைஞ் சும் திரு, Kadham Kondu Irainchum Thiru - இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான முனிவர்க்கு அன்றி, Munivarkku Andri - மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு காதல் செய்யா, Kaadhal Seyyaa - அன்பு பூண்டிரா திடங் கொண்ட ஞானியாக்கே, Thidang Konda Gnaaniyagke - மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான் அடியேன் அன்பு செய்வது, Adiyean Anbu Seyvathu - அடியேன் பக்தனாயிருப்பேன் |
| 3789 | இராமாநுச நூற்றந்தாதி || 13 | செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கு அணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறெனக்கே | பதவுரை Show / Hideசெய்யும், Seyyum - (தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற தம்மாலே) செய்யப்பட்ட தாய் பசும் துளவம், Pasum Thulavam - பசுமை தங்கிய திருத் துழாய் மயமாய் தொழில், Thozhil - வேலைப் பாடுகளை யுடைத்தான மாலையும், Maalaiyum - பூ மாலைகளையும் செம் தமிழில், Sem Tamizh Il - அழகிய தமிழ்ப் பாஷையிலே பெய்யும், Peyyum - உண்டாகப் பட்டதாய் மறை, Marai - வேதஸத்ருசமான தமிழ் மாலையும், Tamizh Maalaiyum - திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும் பேராத சீர் அரங்ககத்து ஐயன் கழற்கு அணியும், Peraadha Seer Arangakathu Ayyan Kazharku Aniyum - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவமான பரன், Paran - தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற பெரியவருடைய தாள் அன்றி ஆதரியா, Thaal Andri Aadhariya - திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத மெய்யன், Meiyyan - ஸத்யசீலரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய சரணே, Sarane - திருவடிகளே எனக்கு, Enakku - அடியேனுக்கு வேறு கதி, Veru Kathi - விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம், |
| 3790 | இராமாநுச நூற்றந்தாதி || 14 | கதிக்குப் பதறி வெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை யற்றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுச னென்னைச் சோர்விலனே | பதவுரை Show / Hideகொல்லி காவலன், Kolli Kavalan - குல சேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப் பட்டதாய் கலை சொல் பதிக்கும், Kalai Sol Pathikkum - சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை பாடும் பெரியவர், Padum Periyavar - பாடுகின்ற பெரியோர்களது பாதங்களே, Padangale - திருவடிகளையே துதிக்கும், Thuthikkum - ஸ்தோத்ரம் செய்பவராய் பரமன், Paraman - உத்க்ருஷ்டரான இராமானுசன், Iraamanusan - எம்பெருமானார் என்னை சோர்விலன், Ennai Sorvilan - என்னை விட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபத்துக்காக வருந்தி கதிக்கு பதறி, Kathikku Pathari - அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும் கடலும், Kadalum - கடல்களிலும் (நின்று கொண்டு) எல்லாம் கொதிக்க, Ellam Kothikka - எல்லா அவயங்களும் தவம் செய்யும் கொள்கை, Thavam Seyyum Kolgai - தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை அற்றேன், Attren - விட்டொழித்தேன் |
| 3791 | இராமாநுச நூற்றந்தாதி || 15 | சோராத காதல் பெருஞ் சுழிப்பால், சொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத் திராமானுசன் றன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே? | பதவுரை Show / Hideசோராத காதல் பெரு சுழிப்பால், Soradha Kadhal Peru Suzhippal - ஒரு நாளும் குறைவு படாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே தொல்லை மாலை ஒன்றும் பாராது, Thollai Malai Ondrum Paradhu - நித்யனான எம்பெருமான் படியைச் சிறிதும் நிரூபியாமல் அவனை, Avanai - அவ் வெம்பெருமானை நோக்கி பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன், Pallandu Endru Kappidum Panmaiyan - பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய தாள் பேராத உள்ளத்து, Thal Peradha Ullaththu - திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய பிறங்கிய சீர், Pirangiya Seer - மிக்க திருக் குணங்களை சாரா, Sara - தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத மனிசரை, Manisarai - மநுஷ்யர்களை சேரேன், Seren - பற்ற மாட்டேன் இனி, Ini - இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு எனக்கு என்ன தாழ்வு, Enakku Enna Thalvu - அடியேனுக்கு என்னகுறை?. |
| 3792 | இராமாநுச நூற்றந்தாதி || 16 | தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே
ஆள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுச னென்னும் மா முனியே | பதவுரை Show / Hideஅரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையை, Arangarmouli Soozhkindra Maalaiyai - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூ மாலையை சூடி கொடுத்தவள், Soodi Koduththavala - தனது திருக் குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல், Thol Arulal Vaazhkindra Vallar - அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான இராமாநுசன் என்னும் மாமுனி, Iramanusan Ennum Mamuni - ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்) தாழ்வு ஒன்று இல்லா மறை, Thalvu Ondru Illa Marai - ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது தாழ்ந்து, Thazhndu - (குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற தலம், Thalam - முழுதும் பூமி யெங்கும் கலியே ஆள்கின்ற நாள், Kalaiye Aalkindra Naal - கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே வந்து, Vandhu - இங்கே வந்தவதரித்து அளித்தவன் காண்மின், Aliththavan Kaanmin - (அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர். |
| 3793 | இராமாநுச நூற்றந்தாதி || 17 | முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை வந் தெய்தினரே | பதவுரை Show / Hideகலை பரவும் தனி ஆனையை, Kalai Paravum Thani Aanaiyai - ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற கண்ணமங்கை நின்றானை, Kannamangai Nindraanai - திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப் பெருமாளைக் குறித்து உலகில், Ulagil - இவ்வுலகில் தண் தமிழ் செய்த, Than Tamil Seitha - ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின நீலன் தனக்கு, Neelan Thanakku - திருமங்கையாழ்வார் பக்கல் இனியானை, Iniyanai - ப்ரேம முடையவராய் எங்கள், Engal - எங்களுக்குத் தலைவரான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை வந்து எய்தினர், Vandu Eythinar - வந்து பணிந்த மஹான்கள் துயரங்கள் முந்திலும் முனியார், Thuyarangkal Mundhilum Muniyar - தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள் இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார், Inbangkal Moyththidinum Manam Kaniyar - ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள் |
| 3794 | இராமாநுச நூற்றந்தாதி || 18 | எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற் குதவும் இராமானுச னெம் உறு துணையே | பதவுரை Show / Hideஎய்தற்கு அரிய மறைகளை, Eyththarku Ariya Maragalai - அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை இன் தமிழ் ஆயிரத்தால், In Tamil Aayiraththal - இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால் செய்தற்கு உலகில் வரும், Seiththarku Ulagil Varum - அருளிச் செய்வதற்காக இவ்வுலகில் வந்துதித்த சடகோபனை, Sadagopanai - நம்மாழ்வாரை சிந்தை உள்ளே, Chinthai Ullae - தமது ஹ்ருதயத்தினுள்ளே பெய்தற்கு இசையும், Peyththarku Isaiyum - த்யானிப்பதற்கு இணங்கின பெரியவர், Periyavar - ஸ்ரீ மதுரகவிகளுடைய சீரை, Seerai - ஜ்ஞாநாதி குணங்களை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும், Uyirgal Ellam Uyththarku Uthavum - ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் எம் உறு துணை, Em Uru Thunai - எமக்கு உற்ற துணை |
| 3795 | இராமாநுச நூற்றந்தாதி || 19 | உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே | பதவுரை Show / Hideஉறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும், Uruperu Selvamum Thandaiyum Uyar Guruvum - சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும் வெறி தரு பூமகள் நாதனும், Veri Tharu Poovagal Nadhanum - மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று, Maran Vilangiya Seer Nerai Tharum Sem Tamil Aaraname Endru - நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச் செய்த செந்தமிழ் வேதமே யென்று இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற, I Neel Nilathor Aridhar Nindra - இப் பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் எனக்கு, Enakku - அடியேனுக்கு ஆர் அமுது, Ar Amuthu - பரம போக்யர் |
| 3796 | இராமாநுச நூற்றந்தாதி || 20 | ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர் கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங் கொள் நாத முனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசனென்றன் மா நிதியே | பதவுரை Show / Hideஆரம் பொழில், Aram Pozhil - சந்தனச் சோலைகளை யுடைய தென் குருகை, Then Kurugai - அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த) பிரான், Piran - மஹோபகாரகரான ஆழ்வாருடைய அமுதம் திருவாய், Amudham Thiruvai - பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரம் தமிழன் இசை, Eeram Tamizhan Isai - ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின் இசையை உணர்ந்தோர்கட்கு, Unarnthorkadku - அறிந்தவர்களுக்கு இனியவர் தம், Iniyavar Tham - இஷ்டராயிருப்பவர்களுடைய சீரை, Seerai - குணங்களை பயின்று, Payinru - அப்யஸித்து உய்யும் சீலம் கொள், Uyum Seelam Kol - ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான நாதமுனியை, Nadhamuniyai - நாத முனிகளை நெஞ்சால், Nenjal - தம் திருவுள்ளத்தாலே வாரி பருகும், Vaari Parugum - அபிநிவேசத்தோடு அனுபவிக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் மா நிதி, En Than Maa Nidhi - எனக்கு அக்ஷயமான நிதி. |
| 3797 | இராமாநுச நூற்றந்தாதி || 21 | நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம்
கதி பெற் றுடைய இராமானுச னென்னைக் காத்தனனே | பதவுரை Show / Hideதூய் நெறி சேர், Thuy Neri Ser - பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு இறைவன், Iraivan - தலைவரான யமுனைத் துறைவன், Yamunai Thuraivan - ஆளவந்தாருடைய இணை அடி ஆம் கதி, Inai Adi Aam Gathi - உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை பெற்று, Petru - பெற்று (அதனாலே) உடைய, Udaiya - உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியா யிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்னை காத்தனன், Ennai Kaaththanan - என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு) இனி, Ini - இனி மேல், நிதியை பொழியும் முகில் என்று, Nithiyai Pozhiyum Mukil Endru - “நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று துதி கற்று, Thuthi Kattru - ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு உலகில், Ulagil - இவ்வுலகத்தில் நீசர் தம், Neesar Tham - நீசராயிருப்பவருடைய வாசல் பற்றி, Vaasal Patri - வாசலைப் பற்றி நின்று துவள்கின்றிலேன், Thuvazhkindrileen - வருந்த மாட்டேன் |
| 3798 | இராமாநுச நூற்றந்தாதி || 22 | கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே | பதவுரை Show / Hideகார்த்திகையானும், Kaarthikayaanum - ஸுப்ரஹமண்யனும் கரி முகத்தானும், Kari Mukaththaanum - கணபதியும் கனலும், Kanalum - (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும் முக் கண் மூர்க்தியும், Mook Kan Moorkthiyum - சிவனும் மோடியும், Modiyum - துர்க்கையும் வெப்பும், Veppum - ஜ்வரதேவதையும் முதுகு இட்டு, Mudhuku Ittu - முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன் மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட, Moo Ulagum Pooththavane Endru Poatrida - “மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற வாணன் பிழை பொறுத்த, Vaanan Pizhai Poruththa - (அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின தீர்த்தனை, Theerththanai - பாவநனான ஸர்வேச்வரனை ஏத்தும், Aeththum - நித்யம் துதிக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் சேமவைப்பு, En Than Saemavaippu - எனக்கு ஆபத் தநம். |
| 3799 | இராமாநுச நூற்றந்தாதி || 23 | வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே! | பதவுரை Show / Hideநல் அன்பர், Nal Anbar - விலக்ஷண பக்தி யுடையவர்கள் வைப்பு ஆய வான் பொருள் என்று, Vaippu Aaya Vaan Porul Endru - “எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை இரு நிலத்தில், Iru Nilathil - இந்தப் பெரிய வுலகத்திலே ஒப்பார் இலாத உறு வினையேன், Oppaar Ilaadha Uru Vinaiyen - ஒப்பற்ற மஹா பாபியான அடியேன் வஞ்சம் நெஞ்சில் வைத்து, Vanjam Nenchil Vaiththu - (என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே வைத்து முப்போதும் வாழ்த்துவன், Muppodhum Vazhththuvan - ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்; இது, Idhu - மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது அவன், Avan - அவ் வெம்பெருமானானாருடைய மொய் புகழ்க்கு, Moy Pugazhkkum - சிறந்த கீர்த்திக்கு என் ஆம், En Aam - என்னாகுமோ? (அவத்யமமோ?) |
| 3800 | இராமாநுச நூற்றந்தாதி || 24 | மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால்
எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே | பதவுரை Show / Hideமுன நாள்கள் எல்லாம், Muna Naalgal Ellam - கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம் பல் உடல் தொறும், Pal Udal Thorum - பல பல சரீரங்கள் தோறும் மொய்த்த வெம் தீ வினையால் மூத்து, Moyththa Vem Thee Vinaiyaal Mooththu - ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து அதனால், Adhanaal - அத்தாலே எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - மிக்க பரிதாப மடைந்தேன்; பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள், Poy Thavam Poattrum Pulai Samayangal - கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள் நிலத்து அவிய, Nilaththu Aviy - இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி கைத்த, Kaiththa - நிரஸித்தருளின மெய் ஞானத்து, Mei Gnanaththu - உண்மை ஞான முடையரான இராமாநுசன் என்னும் கார் தன்னை, Iraamaanusan Ennum Kaar Thannai - எம்பெருமானாராகிற காள மேகத்தை இன்று கண்டு, Indru Kandu - இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று உயர்ந்தேன், Uyarnthen - சிறந்தவனானேன். |
| 3801 | இராமாநுச நூற்றந்தாதி || 25 | காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே | பதவுரை Show / Hideகார் எய் கருணை இராமாநுச!, Kaar Ey Karunai Iraamaanusa - மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே! நான், Naan - அடியேன் அல்வலுக்கு நேரே உறைவு இடம், Alvalukku Neere Uraivu Idam - துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்; என்னை, Ennai - இப்படிப்பட்ட அடியேனை நீ வந்து உற்றபின், Nee Vandu Utrapin - ஸ்வீகரித் தருளின பின்பு உன் சீரே, Un Seere - தேவரீருடைய கல்யாண குணங்களே உயிர்க்கு உயிர் ஆய், Uyirkku Uyir Aay - ஆத்மாவுக்கு தாரகமாய் அடியேற்கு, Adiyeerkku - அடியேனுக்கு இன்று தித்திக்கும், Indru Thithikkum - இன்று ரஸியா நின்றது; நின் அருளின் தன்மை, Nin Arulin Thanmai - தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை இ கடல் இடத்தில், I Kadal Idathil - கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில் ஆரே அறிபவர், Aare Aripavar - அறியக் கூடியவர்கள் ஆருமில்லை. |
| 3802 | இராமாநுச நூற்றந்தாதி || 26 | திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே | பதவுரை Show / Hideஎன் செய்வினை ஆம், En Seivinaik Aam - என்னாலே செய்யப் பட்ட வினையாகிற மெய் குற்றம் நீக்கி, Mei Kuttram Neekki - நிலை நின்ற தோஷங்களைப் போக்கி விளங்கிய, Vilangiya - (இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான மேகத்தை, Megathai - பரம உதாரராய் திக்கு உற்ற கீர்த்தி, Thikku Utra Keerthi - திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை மேவும், Maevum - பொருந்தி யிருக்கின்ற நல்லோர், Nallor - விலக்ஷணர்கள் எக் குற்றவாளர், Ek Kuttravalar - யாதொரு குற்றத்தை யுடையராகவும் எது பிறப்பு, Edhu Pirappu - யாதொரு ஜன்மத்தையுடையராகவும் எது இயல்பு ஆக, Edhu Iyalthu Aaga - யாதொரு சரிதையை யுடையவராகவும் நின்றோர், Ninruor - முன்பு நின்றார்களோ, அக் குற்றம், Ak Kuttram - அந்தக் குற்றமும் அப் பிறப்பு, Ap Pirappu - அந்த ஜன்மமும் அ இயல்வே, A Iyalve - அந்த சரிதையுமே நம்மை, Nammai - நம்மை ஆள் கொள்ளும், Aal Kollum - அடிமைப் படுத்திக் கொள்ளவற்று. |
| 3803 | இராமாநுச நூற்றந்தாதி || 27 | கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே! | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! கொள்ள குறைவு அற்று இலங்கி, Kolla Kuraiyvu Attru Ilangi - கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி கொழுந்துவிட்டு ஓங்கிய, Kozhundhuvittu Ongiyaa - மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான உன் வள்ளல் தனத்தினால், Un Vallar Thanatthinaal - தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே வல் வினையேன் மனம், Val Vinaiyen Manam - மஹா பாபியான எனது நெஞ்சிலே நீ புகுந்தாய், Nee Pugundhai - (தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று; இது, Idhu - (வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது, வெள்ளை, Vellai - பரிசுத்தமாய் சுடர் விடும், Sudar Vidum - பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள உன் பெரு மேன்மைக்கு, Un Peru Menmaikku - தேவரீருடைய ப்ரபாவத்திற்கு இழுக்கு என்று, Izhukku Endru - அவத்யாவஹம் என்று என் தனி நெஞ்சம், En Thani Nenjam - எனது துணையற்ற நெஞ்சானது தள்ளுற்று இரங்கும், Thallutru Irangum - தளர்ந்து ஈடுபடா நின்றது. |
| 3804 | இராமாநுச நூற்றந்தாதி || 28 | நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே! | பதவுரை Show / Hideநெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை, Nenjin Kadai Konda Kanjanai - நெஞ்சிலே கல்மிஷத்தை யுடையனா யிருந்த கம்ஸனை காய்ந்த, Kaayndha - முடித்த நிமலன், Nimalan - ஹேயப்ரத்ய நீகனாய், நங்கள் பஞ்சி திருவடி, Nangal Panji Thiruvadi - ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான பின்னை தன் காதலன், Pinnai Than Kaadhalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய பாதம் நண்ணு, Paatham Nannu - திருவடிகளை ஆச்ரயியாத வஞ்சர்க்கு, Vanjarkku - ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு அரிய, Ariya - துர்லபரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ் அன்றி, Pugazh Andri - குணங்களை யொழிய (மற்றொன்றை) என் வாய், En Vaai - என் வாக்கானது கொஞ்சி பரவகில்லாது, Konji Paravagilladhu - குலாவி ஏத்த மாட்டாது; இன்று கூடியது வாழ்வு, Indru Koodiyadhu Vazhvu - இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது என்ன, Enna - ஆச்சரியமானது |
| 3805 | இராமாநுச நூற்றந்தாதி || 29 | கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப் பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத், தன் பத்தி யென்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே? | பதவுரை Show / Hideதென் குருகை பிரான், Then Kurugai Piraan - நம்மாழ்வாருடைய பாட்டு என்னும், Paatu Ennum - பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய் வேதம், Vedham - வேத ரூபமாய் பசும் தமிழ் தன்னை, Pasum Tamil Thannai - செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த, Than Pathi Ennum Veettin Kan Vaiththa - தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ், Pugazh - கல்யாண குணங்களை மெய் உணர்ந்தோர், Mei Unarnthoor - உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய ஈட்டங்கள் தன்னை, Eettangal Thannai - கோஷ்டிகளை என் நாட்டங்கள் கண்டு, En Naatthangal Kandu - என் கண்களானவை ஸேவித்து இன்பம் எய்திட, Inbam Eydhida - ஸூகிக்கும் படியாக கூட்டும் விதி, Kootum Vidhi - அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது என்று கூடுங்கொல், Endru Koodungol - என்றைக்கு வாய்க்குமோ? |
| 3806 | இராமாநுச நூற்றந்தாதி || 30 | இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில்
மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே | பதவுரை Show / Hideதொல் உலகில், Thol Ulagil - ‘அநாதியான இவ் வுலகத்தில் மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின், Man Pal Uyirkadku Irayavan Mayin - நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’ என மொழிந்த, En Mozhindha - என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த அன்பன், Anban - பரம காருணிகராய் அனகன், Anagan - நிர்த் தோஷரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்னை ஆண்டனன், Ennai Andanan - என்னை அடிமை கொண்டருளினார்; இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என், Inbam Tharu Peru Veedu Vandu Eydhil En - ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன? எண் இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என், En Irandha Thunbam Tharu Pala Nirayam Soozhil En - அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன? |
| 3807 | இராமாநுச நூற்றந்தாதி || 31 | ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் கால மெல்லாம் மனமே!
ஈண்டு பல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமானுசனைப் பொருந்தினமே | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சே! நூள் ஆய், Nool Aay - நாள்களாகவும் திங்கள் ஆய், Thingal Aay - மாதங்களாகவும் ஆண்டுகள் ஆய், Aandugal Aay - வருஷ்ங்களாகவும் நிகழ் காலம் எல்லாம், Nigal Kaalam Ellam - நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும் ஈண்டு பல் யோனிகள் தோறும், Eendu Pal Yoonigal Thoram - திரண்டு பல்வகைப் பட்ட யோனிகள் தோறும் உழல்வோம், Uzhalvom - தட்டித் திரிந்த நாம் இன்று ஒர் எண் இன்றியே, Indru Or En Indriye - இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா) காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம், Kaan Thagu Thol Annal Then Aththiyoorar Kazhal Inai Kkeezh Poondha Anbu Aalan Raamanusanai Porundhinam - கண்ணாரக் காணத் தக்க தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,) |
| 3808 | இராமாநுச நூற்றந்தாதி || 32 | பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே | பதவுரை Show / Hideசெறு கலியால், Seru Kaliyall - (தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே வருந்திய, Varundhiya - துக்கப்பட்ட ஞாலத்தை, Naalaththai - பூமியை வண்மையினால் வந்து எடுத்து அளித்த, Vanmaiyinaal Vandu Eduthu Aliththa - தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும் அரும் அளித்த, Arum Aliththa - சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும் எங்கள், Engal - எமக்கு ஸ்வாமியுமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை அடைபவர்க்கு, Adaipavarkku - ஆச்ரயிக்கு மவர்களுக்கு பொருந்திய தேசும், Porundhiya Desum - ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம் பொறையும், Poraiyum - க்ஷமாகுணமும் திறலும், Thiralum - ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும் புகழும், Pugazhum - கீர்த்தியும் நல்ல திருந்திய ஞானமும், Nalla Thirundhiya Gnanamum - பரம விலக்ஷணமான அறிவும் செல்வமும், Selvamum - பக்தியாகி றஸம்பத்தும் சேரும், Serum - தானே வந்துசேரும். |
| 3809 | இராமாநுச நூற்றந்தாதி || 33 | அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும்
படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே | பதவுரை Show / Hideஅடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன், Adai Aar Kamalaththu Alar Magal Kaelvan - தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய கை ஆழி என்னும் படையோடு, Kai Aazhi Ennum Padaiyodu - திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே நாந்தகமும், Naanthakamum - நாந்தகவாளும் படர் தண்டும், Padar Thandum - ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா நின்ற கதையும் ஒண் சார்ங்கம் வில்லும், On Sargngam Villum - அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும் புடை ஆர் புரி சங்கமும், Pudai Aar Puri Sangamum - ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து, Indhap Bhoomiyai Rakshikkaikaga Inth Nilaththu - இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின |
| 3810 | இராமாநுச நூற்றந்தாதி || 34 | நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே | பதவுரை Show / Hideஇராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய நயம் புகழ், Nayam Pugazh - கல்யாணகுணங்களானவை நிலத்தை செறுத்து உண்ணும் நீசம், Nilaththai Seruththu Unnum Neesam - பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான கலியை, Kaliyai - கலிபுருஷனாடைய நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும், Ninaippu Ariya Pelathai Seruththum - இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம் பிறங்கியது இல்லை, Pirangiyathu Illai - பிரகாசிக்கவில்லை; என் பெய் வினை, En Pey Vinaik - என்னாலே செய்யப்பட்ட பாவங்களை தென் புலத்தில், Then Pulathil - யமலோகத்தில் பொறித்த, Poriththa - எழுதிவைத்த அப் புத்தகம் சும்மை, Ap Puththagam Summaa - அந்த புஸ்தகக் கட்டுகளை பொறுக்கிய பின், Porukkiya Pin - கொளுத்திவிட்டபின்பு நலத்தை பொறுத்தது, Nalaththai Poruththathu - விளக்கம் பெற்றன. |
| 3811 | இராமாநுச நூற்றந்தாதி || 35 | நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே? | பதவுரை Show / Hideஒரு தெய்வம், Oru Deivam - வேறொரு தெய்வத்தை நயவேன், Nayaven - விரும்பமாட்டேன் நால் நிலத்தே, Naal Nilaththae - இவ் வுலகில் சில மானிடத்தை, Sila Maanidaththai - சில நீச மனிதர்களைக் குறித்து புயலே என, Puyale Enna - ‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி கவி போற்றி செய்யேன், Kavi Poattri Seyyen - கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்; பொன் அரஙகம் என்னில், Pon Arangakam Ennil - ‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே மயல் பெருகும், Mayal Perugum - அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய மன்னா மா மலர்த் தாள், Mannaa Maa Malarth Thaal - பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை அயரேன், Ayarein - மறக்க மாட்டேன்; அயரேன், Ayarein - கொடிய பாவங்கள் என்னை, Ennai - என்னை இன்று, Indru - இன்று முதலாக எவ்வாறு அடர்ப்பது, Evvaru Adarppathu - எப்படி ஆக்ரமிக்கக் கூடும்? |
| 3812 | இராமாநுச நூற்றந்தாதி || 36 | அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே | பதவுரை Show / Hideஅடல் கொண்ட நேமியன், Adal Konda Nemiyan - (ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய் ஆர் உயிர் நாதன், Ar Uyir Nathan - ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான் அன்று, Andru - அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில் ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப, Aranach Sol Kadal Konda On Porul Kandu Alippa - வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க பின்னும், Pinnum - அதற்குப் பின்பும் காசினியோர், Kasinivor - பூமியிலுள்ளவர்கள் இடரின் கண் வீழ்ந்திட, Idarin Kan Vizhndhida - ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க, தானாம், Thanam - (எம்பெருமானாராகிற தாமும் அ ஒன் பொருள் கொண்டு, A On Porul Kondo - (முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு அவர் பின்படரும் குணன், Avar Pinpadarum Gunam - அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய வடி இது, Vadi Ithu - ஸ்வபாவம் இது. |
| 3813 | இராமாநுச நூற்றந்தாதி || 37 | படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர்
கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே | பதவுரை Show / Hideபடி கொண்ட கீர்த்தி, Padi Konda Keerthi - உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான இராமாயணம் என்னும், Iramayanam Ennum - ஸ்ரீ ராமாயண மென்கின்ற பக்தி வெள்ளம், Bhakti Vellam - பக்தி ஸமுத்திரம் குடி கொண்ட கோயில், Kudi Konda Koyil - நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய குணம் கூறும் அன்பர், Gunam Kurum Anbar - திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய கடி கொண்ட மா மாலர்த் தாள், Kadi Konda Maa Malarth Thal - மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில் உள்ளம் கலந்து, Ullam Kalandu - நெஞ்சு பொருந்தி கனியும், Kaniyum - ஸ்நேஹித்திருக்கின்ற நல்லோர், Nallor - மஹாநுபவர்கள் அடி கண்டு கொண்டு, Adi Kandu Kondo - (இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து கொண்டு உகந்து, Ugandhu - ஆதரித்து என்னையும், Ennaiyum - அடியேனையும் அவர்க்கு, Avarkku - அவ்வெம்பெருமானார்க்கு ஆள் ஆக்கினர், Aal Aakkinar - ஆட் படுத்தினார்கள் |
| 3814 | இராமாநுச நூற்றந்தாதி || 38 | ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே | பதவுரை Show / Hideஎன்னை, Ennai - (நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை இன்று, Indru - இன்றைக் தினத்தில் ஆக்கி, Aakki - ஒரு பொருளாக்கி அடிமை, Adimai - சேஷத்வத்தில் நிலைப்பித்தனை, Nilaippiththanai - நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்) முன்பு, Munbu - முற்காலமெல்லாம் அவமே போக்கி, Avame Pokki - வீணாகப் போக்கி புறந்து இட்டது, Purandhu Ittathu - வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது என் பொருளா, En Porulaa - என்ன நிமித்தாக? புண்ணியர் தம், Punniyar Tham - (தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய வாக்கில் பிரியா, Vaakkil Priyaa - வாக்கை விட்டுப் பிரியாத இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! தெரிவு அரிது, Therivu Aridhu - அறிய முடியாததாக நின்றது; இந்த நுண் பொருள், Indha Nun Porul - இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை உரையாய், Uraiyaai - தேவரீரே அருளிச் செய்ய வேணும் |
| 3815 | இராமாநுச நூற்றந்தாதி || 39 | பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே | பதவுரை Show / Hideபொருள் என்றும், Porul Endrum - த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும் புதல்வர் என்றும், Puthalvar Endrum - புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும் பூமி என்றும், Bhoomi Endrum - க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி) மருள் கொண்டு, Marul Kondu - அறிவு கெட்டு இளைக்கும் நமக்கு, Ilaiyum Namakku - வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு இருள் கொண்ட, Irul Konda - அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை மாற்றி, Maatri - போக்கடித்து தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள், Than Eeru Il Peru Pugazhe Therulum Therul - தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை தந்து, Thandu - அருளித்தருளி இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் செய்யும் சேமங்கள், Seyyum Semangal - செய்கிற க்ஷேமங்களானவை நெஞ்சே, Nenchae - ஒ மனமே! மற்று உளார் தரமோ, Mattru Ular Tharamo - மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.) |
| 3816 | இராமாநுச நூற்றந்தாதி || 40 | சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே | பதவுரை Show / Hideசேமம் நல்வீடும், Semam Nalveedu - (அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம் பொருளும், Porulum - அர்த்தமும் தருமமும், Dharumamum - தர்மமும் சீர்ய நல் காமமும், Seerya Nal Kaamamum - மிகவுஞ் சிறந்த காமமும் என்ற இவை, Endra Ivai - ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை நான்கு என்பர், Naanthu Enbar - நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்; நான்கினும், Naanthinum - இந்த நான்கு புருஷார்த்தங்களுள் காமம், Kaamam - காமமாவது கண்ணனாக்கே ஆமது, Kannanaakke Aamuthu - எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது; அறம் பொருள் வீடு, Aram Porul Veedu - தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும் இதற்கு என்று, Idharku Endru - இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று வாமநன் சீலன் இராமாநுசன், Vamanan Seelan Iraamaanusan - வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார் இந்த மண்மிசை உரைத்தான், Indha Manmichai Uraiththaan - இவ் வுலகத்தில் அருளிச் செய்தார் |
| 3817 | இராமாநுச நூற்றந்தாதி || 41 | மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே | பதவுரை Show / Hideஎங்கள் மாதவனே, Engal Maadhavane - நமக்கு நாதனான திருமால் தானே மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, Manmichai Yoonigal Thorum Pirandhu - (இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம், Kanura Nirkilum Kaanagilla Ulagorkal Ellam - எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும் அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே, Annal Iraamaanuchan Vandhu Thornthiya Appozhudhe - ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு, Nanna Aru Gyaanam Thalaik Kondu - பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று நாரணற்கு ஆயினர், Naaranarku Aayinargal - ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப் பட்டனர். |
| 3818 | இராமாநுச நூற்றந்தாதி || 42 | ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே | பதவுரை Show / Hideமா மலராள் நாயகன், Maa Malaraal Naayagan - லக்ஷ்மீ பதியான அரங்கன், Arangan - பெரிய பெருமாள் எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும், Ella Uyirkadkum Naadhan Ennum - ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும் தூயவன், Thuyavan - பரம பரிசுத்தரும் தீது இல், Theethu Il - எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்; ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை, Aayi Izhaiyaar Kongai Thangum Akkadhala Alaru Azhundhimayum En Aaviyai - அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான், Thol Arul Surandhu Vandhu Indru Eduththaan - இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார். |
| 3819 | இராமாநுச நூற்றந்தாதி || 43 | சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்க்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே | பதவுரை Show / Hideபடியில் உள்ளீர், Padiyil Ullir - இப்பூமியிலுள்ளவர்களே! யான் உமக்கு உரைக்கின்றனன், Yaan Umakku Uraikkindranan - நான் உங்களுக்கு (ஒரு ஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றால்) அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின், Aram Seerum Urugalaiyai Thurakkum Perumai Iraamaanuchan Endru Sollumin - தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திரு நாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்) திருவும், Thiruvum - பக்திப் பெருஞ்செல்வமும் உணர்வும், Unarvum - ஞானமும் சுரக்கும், Surakkum - மேன் மேலும் பெருகும் சோல புகில், Sola Pugil - அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே வாய் அமுதம் பரக்கும், Vaai Amudham Parakkum - வாக்கிலே அம்ருத ரஸம் வியாபிக்கும் இரு வினை, Iru Vinai - மஹா பாபங்கள் பற்று அற ஓடும், Pattru Arai Oodum - அடியோடே போய் விடும். |
| 3820 | இராமாநுச நூற்றந்தாதி || 44 | சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே | பதவுரை Show / Hideஅகல் இடத்தோர், Akal Idaththoor - விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள், சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும், Sola Ar Tamil Oru Moondrum - சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும் சுருதிகள் நான்கும், Surudhigal Naanthum - நான்கு வேதங்களையும் எல்லை இல்லா அறம் நெறி யாவும், Ellai Illaa Aram Nerai Yaavum - கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும் தெரிந்தவன், Therindhavan - அறிந்தவராயும், எண் அரு சீர், Enn Aru Seer - எண்ண முடியாத குணங்களையுடையவராயும் நல்லார் பரவும், Nallaar Paravum - ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய திருநாமம், Thirunamam - திரு நாமத்தை நம்பி கல்லார், Nambi Kallaar - (என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை; எதுபேறு என்று காமிப்பரே!, Edhu Peru Endru Kaamipparae - நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ! |
| 3821 | இராமாநுச நூற்றந்தாதி || 45 | பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! நின் சரண் அன்றி, Nin Saran Andri - தேவரீருடைய திருவடிகளைத் தவிர மற்று பேறு ஒன்றும் இல்லை, Mattru Peru Ondrum Illai - உபேயம் வேறொன்று மில்லை; அப் பேறு அளித்தற்கு, Ap Peru Aliththarku - தேவரீர் திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு அச் சரண் அன்றி, Ach Saran Andri - அத் திருவடிகள் தவிர மற்று ஆறு ஒன்றும் இல்லை, Mattru Aaru Ondrum Illai - வேறு உபாயம் ஒன்று மில்லை; என்ற இப் பொருளை, Endra Ip Porulai - என்கிற இவ் வுண்மைப் பொருளை |
| 3822 | இராமாநுச நூற்றந்தாதி || 46 | கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே | பதவுரை Show / Hideகூறும் சமயங்கள் ஆறும் குலைய, Koorum Samayangkal Aarum Kulaiya - மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி குவலயத்தே, Kuvalayatthae - இப் பூ மண்டலத்திலே மாறன் பணித்த மறை, Maan Paniththa Marai - நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை உணர்ந்தோனை, Unarnthoonai - கற்று அறிந்தவராயும் மதியிலியேன் தேறும்படி, Madhiyiliyeen Theerumpadi - ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக என் மனம் புகுந்தானை, En Manam Pugunthaanai - என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும் திசை அனைத்தும் ஏறும் குணனை, Thisai Anaiththum Aarum Gunanai - எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை இறைஞ்சினம், Irainjinam - வணங்கினோம். |
| 3823 | இராமாநுச நூற்றந்தாதி || 47 | இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே! | பதவுரை Show / Hideஇறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று, Irainjappadum Paran Eesan Arangan Enru - ‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று இ உலகத்து, I Ulagatthu - இப் பூ மண்டலத்திலே அறம் செப்பும், Aram Seppum - ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய் அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் அரு வினையின் திறம் செற்று, En Aru Vinaikkin Thiram Settru - என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி பகலும் இரவும் விடாது, Pagalum Iravum Vidathu - ஸர்வ காலத்திலும் என் தன் சிந்தை, En Than Sindhai - என் ஹ்ருதயத்தினாள்ளே நிறைந்து, Niraindhu - பரிபூர்ணராகி ஒப்பு அற இருந்தான், Oppu Aru Irundhaan - (இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்; எனக்கு, Enakku - இப்படிப்பட்ட அருளைப் பெற்ற எனக்கு ஆரும் நிகர் இல்லை, Aarum Nigar Illai - ஒப்பாவார் ஆருமில்லை. |
| 3824 | இராமாநுச நூற்றந்தாதி || 48 | நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே? | பதவுரை Show / Hideபுன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச, Punmaiyiloor Parugam Perumai Raamaanusa - மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே! நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு, Nigar Inri Nindra En Neesathai - என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு நின் அருளின் கண் அன்றி, Nin Arulin Kan Andri - தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர புகல் ஒன்றும் இல்லை, Pugal Ondrum Illai - வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை அருட்கும், Arutkum - தேவரீருடைய அந்த க்ருபைக்கும் அஃதே புகல், Ahdhe Pugal - (என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே) இருவோமுக்கும் பயன் ஆனபின், Irivomukkum Payan Anapin - அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு இனி, Ini - இனி மேலும் பழுதே, Pazhudhe - வியர்த்தமான அகலும் பொருள் என்ன, Akalam Porul Enna - பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன? |
| 3825 | இராமாநுச நூற்றந்தாதி || 49 | ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே | பதவுரை Show / Hideபூ கமலம் தேன், Poo Kamalam Then - தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது நதி பாய், Nadhi Pai - ஆறாகப் பெருகப் பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைய தென் அரங்கன், Then Arangan - ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய கழல், Kazhal - திருவடிகளை சென்னி வைத்து, Sennai Vaiththu - சிரஸா வஹித்துக் கொண்டு தான் அதில் மன்னும், Thaan Athil Mannum - தாம் அத் திருவடிகளிலேயே ப்ரவணா யிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் இ தலத்து உதித்து, I Thalathu Uthiththu - இப் பூமியிலே திருவவதரித்ததனால் செம்மை அறம் நெறி, Semmai Aram Nerii - ருஜூவான தர்ம மார்க்கமானது ஆனது, Anathu - ஸத்தை பெற்றது; பொய்ம்மை அறு சமயம், Poymmai Aru Samayam - பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும் பொன்றி போனது, Pondri Ponathu - நாசமடைந்தன; வெம் கலி இறந்தது, Vem Kali Irandhathu - கொடிய கலியுகமும் மாண்டது |
| 3826 | இராமாநுச நூற்றந்தாதி || 50 | உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே | பதவுரை Show / Hideபரவு தொல் சீர், Paravu Thol Seer - உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும் எதி தலை நாதன், Edhi Thalai Nadhan - யதிகளுக்குத் தலையான நாயகருமான இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய இணை அடி, Inai Adi - திருவடி யிணைகள் உத்தமர் சிந்தையுள் உதிப்பன, Uttamar Sindhaiyul Uthippan - உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை; ஒன்னலர் நெஞ்சம், Onnalaar Nenjam - பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது அஞ்சி கொதித்திட, Anji Kothithida - பயப்பட்டுப் பரிதவிக்கும்படி மாறி நடப்பன், Maari Nadappan - மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன; கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த, Kollai Van Kuttram Ellam Pathitha - அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற என் புன் கவி, En Pun Kavi - என்னுடைய க்ஷுத்ரமான கவனமாகிய பா இனம் பூண்டன, Paa Inam Poondana - பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை. |
| 3827 | இராமாநுச நூற்றந்தாதி || 51 | அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற் காலத்தில் அடியை தொடர்ந்து, Adiyai Thodarndu - திருவடிகளை அவலம்பித்து எழும், Ezhum - செருக்கிக் கிளர்ந்த ஐவீர்கட்கு ஆய், Aivirkadku Aayi - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு) பாரதப் போர், Bharatap Por - பாரத யுத்தத்திலே முடிய, Mudiya - (துரியோதநாதிகள்) மாளும் படியாக பரி நெடு தேர், Pari Nedu Ther - குதிரை பூண்ட பெரிய தேரை விடும், Vidum - நடத்தின கோனை, Konai - ஸர்வேஸ்வரனை முழுது உணர்ந்த, Muzhuthu Unarntha - (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட அடியார்க்கு, Adiyarkku - பாகவதர்களுக்கு அமுதம், Amudham - பரம போக்யமான இப் படியில், Ip Padiyil - இப் பூ மண்டலத்தில் வந்து பிறந்தது என்னை ஆள, Vandhu Pirandhadhu Ennai Aala - வந்து அவதரித்தது (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்; |
| 3828 | இராமாநுச நூற்றந்தாதி || 52 | பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே | பதவுரை Show / Hideஅறு சமயங்கள், Aru Samayangkal - (வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக பதைப்ப பார்த்தான், Padhaippa Paarthaan - திருக் கண் செலுத்தினார்; இப் பார் முழுவதும், Ip Paar Muzhuvadhum - இப் பூமண்டலம் முழுவதையும் புகழ் கொண்டு, Pugazh Kondo - தமது கீர்த்தியினாலே போர்த்தான், Poorththaan - மூடி விட்டார்; புன்மையினேனிடை, Punmaiyinenaidai - நீசனான அடியேன் பக்கலிலே தான் புகுந்து, Thaan Pugundhu - தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து இரு வினை, Iru Vinai - பெரிய பாவங்களை தீர்த்தான், Theerththaan - போக்கி யருளினார்; தீர்த்து, Theerthu - பாவங்களைப் போக்கினது மன்றியில் அரங்கன், Arangan - ஸ்ரீ ரங்கநாதனுடைய செய்ய தாள் இணையோடு ஆர்த்தான், Seyya Thaal Inaiyodu Aarththaan - அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்; இவை, Ivai - ஆகிய இக் காரியங்களெல்லாம் எம் இராமாநுசன் செய்யும் அற்புதம், Em Iraamaanusan Seyyum Arputham - எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம் |
| 3829 | இராமாநுச நூற்றந்தாதி || 53 | அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே | பதவுரை Show / Hideஎன்னை ஆள வந்த, Ennai Aala Vandha - என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த கற்பகம், Karppagam - உதாரரும் கற்றவர் காமூது சீலன், Kattravar Kaamuthu Seelan - ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும் அற்புதன், Arputhan - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும் செம்மை, Semmai - ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார், கருத அரிய பல் பல் உயிர்களும், Karutha Ariya Pal Pal Uyirgalum - நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும் பல் உலகு யாவும், Pal Ulagu Yaavum - அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும் பரனது என்னும் நல் பொருள் தன்னை, Paranathu Ennum Nal Porul Thannai - எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை இ நானிலேததே, I Naanilaethathe - இவ் வுலகத்திலே வந்து, Vandhu - வந்தவதரித்து நாட்டினன், Naatinann - ஸ்தாபித்தருளினார். |
| 3830 | இராமாநுச நூற்றந்தாதி || 54 | நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே | பதவுரை Show / Hideமண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன், Man Ulavil Eettiya Seelathu Raamaanusan Than - இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய இயல்வு, Iyalvu - ஸ்வபாவத்தை கண்டு, Kandu - பார்த்து, நாட்டிய நீச சமயங்கள் மாண்டன, Naattiya Neesa Samayangal Maandana - (துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன; நாரணனை காட்டிய, Naaranaiyai Kaattiya - ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க வேதம், Vedham - வேதங்களானவை களிப்பு உற்றது, Kalippu Utrathu - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன; தென் குருகை வள்ளல், Then Kurugai Vallar - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த) வாட்டம் இலா, Vaatam Ila - ஒரு குறையுமற்ற வண் தமிழ் மறை, Van Tamil Marai - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி வாழ்ந்தது, Vaazhnthathu - வாழ்வு பெற்றது. |
| 3831 | இராமாநுச நூற்றந்தாதி || 55 | கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே | பதவுரை Show / Hideதொகை இறந்த, Thogai Irandha - கணக்கில்லாத பண் தரு வேதங்கள், Pan Tharu Vedhangal - ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள் பார் மேல், Paar Mel - இப் பூமியிலே நிலவிட, Nilavidha - ஒங்கி வளரும்படி பார்த்தருளும், Paarttarulum - செய்தருளினவரும் கொண்டலை, Kondalai - பரம உதாரரும், கண்டவர் சிந்தை கவரும், Kandavar Sindhai Kavarum - கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற கடி பொழில், Kadi Pozhil - மண மிக்க சோலைகள் சூழ்ந்த தென் அரங்கன், Then Arangan - தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால் குலாவும், Kulavum - கொண்டாடப் படுபவருமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை மேலி கொழும் குடி, Meli Kozhum Kudi - பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் எங்கள் கோக்குலம் ஆம், Engal Kokkulam Aam - எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம். |
| 3832 | இராமாநுச நூற்றந்தாதி || 56 | கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என்
வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே | பதவுரை Show / Hideகோக்குலம் மன்னரை, Kokkulam Mannarai - க்ஷத்திரிய குலத்து அரசர்களை மூ எழு கால், Moo Ezhukal - இருபத்தொரு தலைமுறை யளவும் ஒரு கூர் மழுவால், Oru Koora Mazhuval - கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே போக்கிய, Pokkia - (பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின தேவனை, Devanai - எம்பெருமானை போற்றம், Pottam - துதிக்கின்ற புனிதன், Punitan - பரம பரிசுத்தரும், புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி, Puvanam Engum Aakkiya Keerthi - உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை அடைந்த பின், Adainda Pin - ஆச்ரயித்த பின்பு இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம் மற்று ஒன்றை, Mattru Ondrai - வேறு எந்த விஷயத்தையும் என் வாக்கு, En Vaakku - எனது வாக்கானது உரையாது, Uraiyaadhu - சொல்ல மாட்டாது; என் மனம், En Manam - எனது மனமும் நினையாது, Ninaiyadhu - நினைக்க மாட்டாது. |
| 3833 | இராமாநுச நூற்றந்தாதி || 57 | மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே | பதவுரை Show / Hideமற்று ஒரு பேறு, Mattru Oru Peru - ப்ரயோஜநாந்தரங்களை மதியாது, Madhiyathu - கணிசியாமல் அரங்கன் மலர் அடிக்கு, Arangan Malai Adikku - அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு ஆள் உற்றவரே, Aal Utravarai - அடிமை பட்டவர்களையே தனக்கு உற்றவர் ஆ, Thanakku Utravar Aa - தமக்கு ஆத்ம பந்துக்களாக கொள்ளும், Kollum - திருவுள்ளம் பற்றுகிற உத்தமனை, Uthamanai - உத்தம புருஷராயும் நல் தவர் போற்றும், Nal Thavar Poattrum - ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை ,நானிலத்தே பெற்றனன், Naanilaththae Pettranan - இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்; பெற்ற பின், Pettra Pin - ஆச்ரயித்த பின்பு மற்று ஒரு பேதைமை அறியேன், Mattru Oru Paedhaimai Ariyeen - (வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன் |
| 3834 | இராமாநுச நூற்றந்தாதி || 58 | பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே | பதவுரை Show / Hideபேதையர், Paedhaiyar - (வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள் இது வேதப் பொருள் என்ற உன்னி, Idhu Vedhap Porul Endra Unni - நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு பிரமம் நன்று என்று ஒதி, Brahmam Nandru Endru Othi - ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’ என்று சொல்லி மற்று எல்லா உயிரும் அஃது என்று, Mattru Ella Uyirum Ahthu Endru - அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி உயிர்கள் மெய்விட்டு, Uyirgal Meivittu - ‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம், Aadhi Paranodu Onru Aam Endru Sollum Avv Allal Ellam - ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’ என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம். மெய் மதி கடல், Mei Mathi Kadal - தத்வ ஜ்ஞாநக் கடலாகிய எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் வாதில் வென்றான், Vaathil Vendraan - வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார். |
| 3835 | இராமாநுச நூற்றந்தாதி || 59 | கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே | பதவுரை Show / Hideகடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும், Kadal Alavu Aaya Thisai Ettinullum - நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும் கலி இருளே மிடை தரு காலத்து, Kali Irule Midai Tharu Kaalathu - கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில் இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் (திருவவதரித்து) நால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களின் மிக்க சுடர் ஒளியால், Mikka Sudar Oliyaal - அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு அவ்விருளை துரந்திலனேல், Avvirulai Thurandhilanel - அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால் உயிரை உடையவன் நாரணன் என்று, Uyirai Udaiyavan Narayanan Endru - ‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று உற்று உணர்ந்து, Utru Unarndhu - யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். |
| 3836 | இராமாநுச நூற்றந்தாதி || 60 | உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்-
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே | பதவுரை Show / Hideகுணம் திகழ், Gunam Thigazh - ஆத்ம குணங்களால் விளங்குபவரும் கொண்டல், Kondal - (ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும் எம் குலம் கொழுந்து, Em Kulam Kozhundhu - எங்கள் குலத்துக்குத் தலைவருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும், Unarndha Mei Gnaniyar Yogam Thorum - கற்றுணர்ந்த தத்வ ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும் திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும், Thiruvai Mozhiyin Manam Tharum In Isai Mannum Idam Thorum - திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும், Maa Malaraal Punarndha Pon Marban Porundhum Pathi Thorum - பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும் புக்கு நிற்கும், Pukku Nirkum - எழுந்தருளி யிருப்பார். |
| 3837 | இராமாநுச நூற்றந்தாதி || 61 | கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத்
தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்
தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்
கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே | பதவுரை Show / Hideஅருமுனிவர் தொழும், Arumunivar Thozhum - அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும் தவத்தோன், Thavaththon - ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய தொல் புகழ், Thol Pugazh - நித்யமான கல்யாண குணங்கள் கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால், Kozhundhu Vittu Odi Padarum Vemkool Vinaiyaal - மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே நிரயத்து அழுந்தி யிட்டேனை, Nirayathu Azhundhi Ittena - ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது, Vandhu Aal Kondha Pinnum Sudar Mikku Ezhundhadhu - வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன: அத்தால், Aththal - அதைக் கண்டு இரு நிலம், Iru Nilam - விசாலமான இப் பூமண்டலம் நல்ல அதிசயம் கண்டது, Nalla Adhisayam Kandu - மிக்க ஆச்சரியங் கொண்டது. |
| 3838 | இராமாநுச நூற்றந்தாதி || 62 | இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்
வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே | பதவுரை Show / Hideஎம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு, Manna Maa Thaal Malar Porundha Nilai Udai Punmaiyinorkku - சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான நீசர் களுக்கு ஒன்றும் நன்மை செய்ய, Ondrum Nanmai Seyya - ஒரு விதமான உபகாரமும் செய்யாத பெரு தேவரை, Peru Devarai - பெரிய பெருமாளை போற்றுகின்ற பெரியோர் தம், Periyor Tham - ஆழ்வானாகிற மஹானாடைய சுழல் இன்று பிடித்து, Suzhal Inru Pidithu - திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு இரு வினை பாசம் கழற்றி இருந்தேன், Iru Vinai Paasam Kazhatri Irundhen - புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்; யான், Yaan - இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன் இனி இறையும் வருந்தேன், Ini Irainum Varunthen - இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன். |
| 3839 | இராமாநுச நூற்றந்தாதி || 63 | பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே! | பதவுரை Show / Hideஅறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர், Aru Samayam Chediyai Thodarum Marul Serindhor - பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள் சிதைந்து ஒட, Sithaindhu Oda - பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக வந்து இப்படியை தொடரும், Vandhu Ippadiyai Thodarum - இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற மிக்க பண்டிதன், Mikka Pandithan - மஹா பண்டிதரான இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!, பிடியை தொடரும் களிறு என்னயான், Pidiyai Thodarum Kaliru Ennayaan - யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல யான், Yaan - அடியேன் சீர் பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும், Seer Pirangiya Un Adiyai Thodarum Padi Nalka Vendum - ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும். |
| 3840 | இராமாநுச நூற்றந்தாதி || 64 | பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே | பதவுரை Show / Hideஎங்கள் இராமநுச முனி வேழம், Engal Iramanusa Muni Vezham - எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது. மாறன், Maan - நம்மாழ்வார் பண், Pan - இசைகளாலே தரு, Tharu - அருளிச் செய்த பசுந்தமிழ் ஆனந்தம், Pasunthamil Anantham - செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம் பாய் மதம் ஆய் விண்டிட, Pai Matham Aayi Vintida - பெருகு மத நீராக ஒழுகப் பெற்று மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி, Meimmai Konda Nal Vedham Kozhu Thandam Aendhi - ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு குவலயத்தே, Kuvalayatthae - இப் பூமண்டலத்திலே மணடி வந்து என்றது, Manadi Vandu Endrathu - உங்களுடைய பிழைப்பு உங்கள் வாழ்வு அற்றது, Ungal Vazhvu Attrathu - உங்களுடைய பிழைப்பு போயிற்று |
| 3841 | இராமாநுச நூற்றந்தாதி || 65 | வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே | பதவுரை Show / Hideநம் இராமாநுசன், Nam Ramanujan - ஸ்வாமிஎம்பெருமானார் தந்க ஞானத்தில், Thanka Gnanathil - அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று; மறையவர் தம் தாழ்வு, Maraiyavar Tham Thalvu - வைதிகர்களுடைய குறை என்றும் அற்றது, Endrum Attrathu - இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று தாரணி, Tharani - பூமண்டவமானது தவம் பெற்றது, Thavam Pettrathu - பாக்கியம் பெற்றது; தத்துவம் நூல், Thathuvam Nool - தத்வபரமான சாஸ்திரங்கள் கூழ் அற்றது, Kool Attrathu - ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின; குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு, Kuttram Ellam Pathitha Gunathkinarkku - பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு ஆ நாழ் அற்றது, A Naal Attrathu - அந்தக் குற்றங்கள் தீர்ந்தன; |
| 3842 | இராமாநுச நூற்றந்தாதி || 66 | ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே | பதவுரை Show / Hideமாதவன், Madhavan - திருமால் வானம் கொடுப்பது, Vaanam Koduppathu - மோக்ஷம் அளிப்பது ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு, Gnanam Kanintha Nalam Kondo Naal Thorum Naipavarkku - ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்; வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன், Val Vinaiyen Manathil Eenam Kadintha Ramanujan - மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார் தன்னை எய்தினர்க்கு, Thannai Eydhinarukku - தம்மைப் பற்றினவர்களுக்கு அத்தானம் கொடுப்பது, Athaanam Koduppathu - அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது தன் தகவு என்னும் சரன் கொடுத்து, Than Thagavu Ennum Saran Koduthu - தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே) |
| 3843 | இராமாநுச நூற்றந்தாதி || 67 | சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே? | பதவுரை Show / Hideசரணம் அடைந்த தருமனாக்கு ஆ, Saranam Adaindha Dharumanakku Aa - தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக பண்டு, Pandhu - முற்காலத்திலே நூற்றுவரை, Noorruvarai - துரியோதனன் முதலிய நூறு பேர்களை மரணம் அடைவித்த மாயவன், Maranam Adaivitha Maayavan - சாகும்படி செய்த எம்பெருமான் தன்னை வணங்க வைத்த கரணம் இவை, Thannai Vananga Vaiththa Karanam Ivai - தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை; உமக்கு அன்று, Umakku Andru - உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல; என்று, Endru - என்று இவ்வாறாக உபதேசித்து இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் உயிர்கட்கு, Uyirkadku - ஆத்மாக்களுக்கு அரண் அமைத்திலன் எல், Aran Amaiththilan El - ரக்ஷையைக் கற்பித்தில ராகில் ,ஆர் உயிர்க்கு, Ar Uyirku - இந்த அருமையான ஆத்மாக்களுக்கு மற்று அரண் ஆர், Mattru Aran Ar - வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.) |
| 3844 | இராமாநுச நூற்றந்தாதி || 68 | ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே | பதவுரை Show / Hideமாயன், Maayan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான் அன்று, Andru - முற் காலத்தில் ஐயர், Aiyar - பஞ்ச பாண்டவர்களுடைய தெய்வம் தேரினில், Deivam Therinil - தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு) செப்பிய, Seppiya - அருளிச் செய்த கீதையின், Geethaiyin - பகவத் கீதையினுடைய செம்மை பொருள், Semmai Porul - ஸ்வ ரஸமான அர்த்தத்தை தெரிய, Theriya - (அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி பாரினில், Paarinil - இப் பூமிலே சொன்ன, Sonna - (கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை பணியும், Paniyum - ஆச்ரயித்திருக்கும் நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்களுடைய சீரினில், Seerinil - கல்யாண குணங்களிலே என் ஆவியும் சிந்தையும், En Aaviyum Sindhaiyum - எனது ஆத்மாவும் மநஸ்ஸூம் சென்று பணிந்தது, Sendru Panindhathu - சென்று சேர்ந்து விட்டன; சொல்லில், Sollil - சொல்லுமளவில் இன்று, Indru - இக் காலத்தில் எனக்கு ஆர் நிகர், Enakku Aar Nigar - எனக்கு ஆர் ஒப்பாவார்? |
| 3845 | இராமாநுச நூற்றந்தாதி || 69 | சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே | பதவுரை Show / Hideமுன் நாள், Mun Naal - ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில் சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து, Sindhaiyinodu Karanangal Yaavum Sithaindhu - சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு, Andham Utru Aazhnthathu Kandu - உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து என் தனக்கு, En Thanakku - (அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு அவை, Avai - அந்தக் கரண களேபரங்களை அன்று, Andru - அக் காலத்தில் அருளால் தந்த அரங்கனாம், Arulaal Thanda Aranganam - க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம் தன் சரண் தந்திலன், Than Saran Thandhilan - தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை; எந்தை இராமாநுசன், Endhai Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் தான் வந்து, Thaan Vandhu - தாமாகவே வந்து அது தந்து, Adhu Thandhu - அந்தத் திருவடிகளைத் தந்தருளி இன்று என்னை எடுத்தனன், Indru Ennai Eduththanan - இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார். |
| 3846 | இராமாநுச நூற்றந்தாதி || 70 | என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை
தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே? | பதவுரை Show / Hideஇராமா நுச, Iraamaa Nucha - எம்பெருமானாரே! என்னையும் பார்த்து, Ennaiyum Paarthu - (ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி என் இயல்வையும் பார்த்து, En Iyvalvaiyum Paarthu - (இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில், Ena Il Pal Gunaththu Unnaiyum Paarkkil - எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில் அருள் செய்வதே நலம், Arul Seivadhai Nalam - ( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது; அன்றி, Andri - இதுவொழிய மேலும் ஆராயுமளவில் என் பால் நலம் உளதே, En Paal Nalam Uladhe - என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை) உன்னை சார்ந்தவர், Unnai Sarnthavar - தேவரீரை ஆச்ரயித்தவர்கள் உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர், Un Perum Karunai Thannai En Paarppar - தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.) |
| 3847 | இராமாநுச நூற்றந்தாதி || 71 | சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே | பதவுரை Show / Hideவண்மை, Vanmai - ஔதார்ய முடையரும் எம், Em - எமக்கு ஸ்வாமியும் பெரு தகை, Peru Thagai - பெருந் தன்மை யுடையருமான இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானாரே! எனது நெஞ்சு உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான், Un Thaal Inai Keel Sarnthadhu Anbudhaan - தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும் அத் தாமரை தாள்களுக்கு, Ath Thamarai Thaalgalukku - அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே மிகவும் கூர்ந்தது, Mikavum Koornthadhu - மிகவும் அதிகரித்தது. என் செய்கை, En Seigai - எனது செயலும் உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது, Un Than Gunangalukke Theerndhadhu - தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது; முன் செய் வினை, Mun Sei Vinai - முன்னே செய்த பாவங்களெல்லாம் நீசெய் வினை அதனால் பேர்ந்தது, Neesei Vinai Adhanal Perndhadhu - தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின. |
| 3848 | இராமாநுச நூற்றந்தாதி || 72 | கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே | பதவுரை Show / Hideஇராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் மிக்க வண்மை செய்து, Mikka Vanmai Seidhu - தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி, தீய சமயம கலகரை, Theeya Samayama Kalakarai - தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை கைத்தனன், Kaithanain - ஒழித்து விட்டார்; தூய, Thooja - பரிசுத்தமான முறை நெறி தன்னை, Murai Nerai Thannai - வேத மார்க்கத்தை காசினிக்கு உய்த்தனன், Kaasinikku Uyththanain - பூமியிலே ஸ்தாபித்தருளினார்; என்று உன்னி, Endru Unni - என்று அநுஸந்தித்து உள்ளம் நெய்த்து, Ullam Neyththu - நெஞ்சு கனிந்து அவ்வன் போடு இருந்து, Avvan Podu Irundhu - அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து ஏத்தும், Aeththum - (அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற நிறை புகழோரருடனே, Nirai Pugazh Oorarudane - புகழ் நிறைந்த மஹான்களோடே என்னை வைத்தனன், Ennai Vaiththanain - (என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார். நிறைபுகழோருடனே வைத்தனன்:, Nirai Pugazh Oorudane Vaiththanain - அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம். |
| 3849 | இராமாநுச நூற்றந்தாதி || 73 | வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்
தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே | பதவுரை Show / Hideதன் வண்மையினாலும், Than Vanmaiyin Alalum - தம்முடைய ஔதார்ய குணத்தாலும் மா தகவாலும், Maa Thakavalum - பரம க்ருபையாலும் மதி புரையும் தண்மையினாலும், Madi Puraiyum Thanmaiyin Alalum - சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும் இத் தரணியோர்கட்கு, Ith Tharaniyorkadku - இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை, Unmai Nal Jnanam Uraitha Raamanusanai - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை உன்னும் திண்மை அல்லால், Unnum Thinmai Allaal - சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர தேர்ந்திடில், Therndhidil - ஆராயமளவில் எனக்கு மற்று ஒர் நிலை இல்லை, Enakku Matru Or Nilai Illai - அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை. |
| 3850 | இராமாநுச நூற்றந்தாதி || 74 | தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே | பதவுரை Show / Hideமறையின் திறம் தேரார் என்று, Maraiyin Thiram Therar Endru - (இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று தீயவரை, Theeyavarai - பாவிகளை மாயவன், Maayavan - எம்பெருமான் குறைப்பது, Kuraippathu - தண்டிப்பது கூர் ஆழி கொண்டு, Koora Aazhi Kondu - கூர்மையான தனது திருவாழியாலே; கொண்டல் அனையவண் மை, Kondal Anaiyavan Mai - மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும் ஏர் ஆர் குணத்து, Aer Aar Gunaththu - (மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது, A Ezhil Maraiyil Seradha Varai Sithaippathu - அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்) |
| 3851 | இராமாநுச நூற்றந்தாதி || 75 | செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே | பதவுரை Show / Hideசெய் தலை, Sei Thalai - வயல்களில் சங்கம், Sangam - சங்குகளானவை செழு திரு முத்தம், Sezhu Thiru Muththam - அழகிய முத்துக்களை ஈனும் திரு அரங்கர், Eenum Thiru Arangkar - உண்டாக்கு மிடமான திரு அரங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள் கைத் தலத்து, Kait Thalathu - தமது திருக் கையிலே ஆழியும் சங்கமும் எந்தி, Aazhiyum Sangamum Endhi - திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நமது கண்ணெதிரில் மொய்த்து, Moydhu - வந்து நெருங்கி அலைத்து, Alaiththu - புத்தியைக் கெடுத்து உண்னை விடேன் என்று இருக்கிலும், Unnai Vidaen Endru Irukkilum - உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும் இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானரே நின் புகழே, Nin Pugazhe - தேவரீருடைய திவ்ய குணங்களே என்னை வந்து முற்றம் மொய்த்து நின்று, Ennai Vandu Muttram Moydhu Nindru - என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு அலைக்கும், Alaikkum - ஆகர்ஷிக்கின்றன |
| 3852 | இராமாநுச நூற்றந்தாதி || 76 | நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக்கும்அது, இராமானுச! இவை யீந்தருளே. | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை, Nindra Van Keerthiyum Neel Punalum Nirai - நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள வேங்கடம் பொன் குன்றமும், Vengadam Pon Kuntrum - திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும் வைகுந்தம் நாடும், Vaikundham Naadum - ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும் குவலிய பால் கடலும், Kuvaliya Paal Kadalum - கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும் உன் தனக்கு, Un Thanakku - தேவரீருக்கு எத்தினை இன்பம் தரும், Eththinai Inbam Tharum - எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ உன் இணை மலர் தாள், Un Inai Malar Thaal - தேவரீருடைய உபயபாதாரவிந்தங்கள் என் தனக்கும் அது, En Thanakkum Adhu - எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்; இவை, Ivai - இப்படிப்பட்ட திருவடிகளை. ஈந்தருள், Eendharul - அடியேனுக்குத் தந்தருள வேணும். |
| 3853 | இராமாநுச நூற்றந்தாதி || 77 | ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? | பதவுரை Show / Hideஈயாத, Eeyaadha - (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத இன் அருள், In Arul - விலக்ஷணமான க்ருபையை ஈந்தனன், Eendhanan - அடியேனுக்குச் செய்தருளின வரும் எண் இல் மறை குறும்பை, En Il Marai Kurumbai - எண்ணிறந்த வேத விரோதிமதங்களை அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன், Ammairai Palporulaal Paayndhanan - அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும் கீர்த்தியினால், Keerthiyinaal - தமது கீர்த்தியாலே இப்படி அனைத்தும் எய்ந்தனன், Ippadi Anaithum Eyndhanan - இப்பூமியெங்கும் வியாபித்தவரும் என் வினைகளை, En Vinaigalai - எனது கருமங்களை வேர்பறியகாய்ந்தனன், Verpariyakaayndhanan - வேரோடே அரும் படி போக்கினவரும் வண்மை, Vanmai - ஔதார்யமே வடிவு கொண்ட வருமான இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார்க்கு இனி என் கருத்து, Ini En Karuthu - இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ? |
| 3854 | இராமாநுச நூற்றந்தாதி || 78 | கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே | பதவுரை Show / Hideஎம் இராமாநுச, Em Iraamaanusa - எம்பெருமானைரை! நீ, Nee - தேவரீர் கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, Karutha Ariya Varuthaththinaal Mika Vanchiththu - நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி கருத்தில் புகுந்து, Karuththil Pugundhu - (எனது) நெஞ்சிலே வந்து புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி, Ullil Kallam Kazhatri - உள்ளே யிருந்த ஆத்மாபஹார தோஷத்தைப் போக்கி திருத்தி, Thiruththi - சிக்ஷித்து இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இந்த லோகத்திலே திருமகள் கேள்மனாக்கு, Thirumagal Kaelmanakku - திருமாலுக்கு ஆளாம்படி ஆக்கிய பின், Aakkiya Pin - பண்ணிண பின்பு மற்று ஒர் பொய், Mattru Or Poi - (இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும் பொருள் என் நெஞ்சில், Porul En Nenjinil - என் மனத்தில் பொருத்தப் படாது, Poruththap Padadhu - பொருந்த மாட்டாது. |
| 3855 | இராமாநுச நூற்றந்தாதி || 79 | பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே
ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே | பதவுரை Show / Hideபொய்யை சுரக்கும் பொருளை துரந்து, Poyyai Surakkum Porulai Thurandhu - பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து இந்த பூதலத்தே, Indha Poodhalatthae - இப் பூமியிலே மெய்யை புரக்கும், Meiyyai Purakkum - ஸத்யத்தை ரக்ஷிக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் நிற்க, Nirka - எழுந்தருளி யிருக்கும் போது வையத்து உள்ளோர், Vaiyaththu Ullor - இப் பூமியிலுள்ளவர்கள் நம்மை உய்யக் கொள்ள வல்ல, Nammai Uyya Kolla Valla - நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய வேறு தெய்வம் இங்கு யாது என்று, Veeru Deivam Ingu Yaadhu Endru - வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு) உலர்ந்து, Ularndhu - மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து நல் அறிவு இமந்து, Nal Arivu Imandhu - (எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல் அவமே, Avame - வீணாக ஐயம் படா நிற்பர், Aiyam Pada Nirpar - ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா! |
| 3856 | இராமாநுச நூற்றந்தாதி || 80 | நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே | பதவுரை Show / Hideநல்லார் பரவும் இராமாநுசன், Nallaar Paravum Iraamaanusan - ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய திரு நாமம், Thiru Naamam - திரு நாமத்தை நம்ப வல்லார் திறத்தை, Namba Vallar Thirathai - (தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே மறவாதவர்கள் எவர், Maravaathavargal Evar - மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ, அவர்க்கே, Avarkke - அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே எல்லா இடத்திலும், Ella Idaththilum - ஸகல தேசங்களிலும் என்றும், Endrum - ஸகல அவஸ்தைகளிலும் எத் தொழும்பும், Eth Thozhumbum - ஸகலவித கைங்கரியங்களையும் சொல்லால் மனத்தால் கருமத்தினால், Sollaal Manaththaal Karumaththinaal - மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும் சோர்வு இன்றியே செய்வன், Soarvu Indriye Seivam - பிரியாதே யிருந்து செய்வேன். |
| 3857 | இராமாநுச நூற்றந்தாதி || 81 | சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே | பதவுரை Show / Hideஉன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி, Un Than Thunai Adikeezh Soarvu Indri - தேவரீருடைய உபய பாதங்களின் கீழே தொண்டு பட்டவர் பால், Thondu Pattavar Paal - சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில் சார்வு இன்றி நின்ற எனக்கு, Saarvu Indri Nindra Enakku - பொருத்த மில்லாமலிருந்த எனக்கு இன்று, Indru - இன்றைத் தினத்தில் அரங்கன் செய்ய தான் இணைகள், Arangan Seyya Thaan Ingaigal - பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா, Pervu Indri Peruththum Iraamaa Nuchaa - ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே! இனி, Ini - இப்படியான பின்பு தெரிவுறில், Therivuril - ஆராயுமளவில் உன், Un - தேவரீருடைய சீர் ஒன்றிய கருணைக்கு, Seer Onriya Karunaikku - சிறந்த திருவருளுக்கு மாறு இல்லை, Maaru Illai - ஒப்பு இல்லை |
| 3858 | இராமாநுச நூற்றந்தாதி || 82 | தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே | பதவுரை Show / Hideதெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது, Therivu Utra Gyaanam Seriya Peraadhu - தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல் வெம் தீ வினையால், Vem Thi Vinaiyal - மிகவுங் கொடியதான கருமத்தாலே உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை, Uru Arra Nanattu Ulalkinra Ennai - உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை ஒரு பொழுதில், Oru Polutil - ஒரு க்ஷண காலத்தில் பொருவு அற்ற கேள்வியனாக்கி நின்றான், Poruvu Arra Kelviyanaki Ninran - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும் தெரிவு உற்ற கீர்த்தி, Terivu Urra Kirtti - ப்ரஸித்தமான புகழை யடையவரும் சீர் முகில் என்னும், Cir Mukil Ennum - (ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்ன புண்ணியனோ, Enna Punniyano - என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.) |
| 3859 | இராமாநுச நூற்றந்தாதி || 83 | சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே | பதவுரை Show / Hideஇராமநுசா, Iramanuca - எம்பெருமானாரே!, சீர் கொண்டு, Cir Kontu - சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய் பேர் அறம் செய்து, Per Aram Seytu - சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து நல் வீடு செறிதும் என்னும், Nal Vitu Ceritume Ennum - பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன், Par Konta Menmaiyar Kuttan Allen - ப்ரஸித்தமான ப்ரபாவத்தை யுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்; உன் பத யுகம் ஆம், Un Pata Yugam Am - தேவரீருடைய உபய பாதங்களாகிற ஏர் கொண்ட வீட்டை, Er Konta Vittai - பரம விலக்ஷணமான மோக்ஷத்தை எளிதினில் எய்துவன், Elitinil Eytuvan - ஸுலபமாக அடைந்திடுவேன்; கார் கொண்ட, Kar Konta - (ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய வண்மை இது, Vanmai Ithu - ஔதார்யம் இப்படிப் பட்டது; கண்டு கொள், Kandu Kol - தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம். |
| 3860 | இராமாநுச நூற்றந்தாதி || 84 | கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே | பதவுரை Show / Hideஎம் இராமாநுசன் தன்னை, Em Iramanucan Tannai - ஸ்வாமி எம்பெருமானாரை இன்று கண்டு கொண்டேன், Inru Kandu Konden - இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்; காண்டலுமே, Kaandalume - இப்படி தெரிந்து கொண்டவளலிலே அவன் தொண்டர் பொன் தாளில், Avan Thondar Pon Thaalil - அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில் தொண்டு கொண்டேன், Thondu Konden - அடிமைப்பட்டேன்; (அதனால்) என் தொல்லை வெம் நோய், En Thollai Vem Noi - எனது பழைய கொடு வினைகளை விண்டு கொண்டேன், Vindu Konden - நீக்கிக்கொண்டேன், அவன் சீர் வெள்ளம் வாரியை, Avan Seer Vellam Vaariyi - அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை வாய் மடுத்து உண்டு கொண்டேன், Vaai Maduthu Undu Konden - வாயார அநுபவிக்கப் பெற்றேன்; இன்னம் உற்றன, Innam Utrana - இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை ஒதில், Othil - சொல்லத்தொடங்கினால் உலப்பு இல்லை, Ulappu Illai - (அதுக்கு) ஒரு முடிவு கிடையாது. |
| 3861 | இராமாநுச நூற்றந்தாதி || 85 | ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை | பதவுரை Show / Hideஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய், Othiya Vegathin Ul Porul Aay - அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்உட்பொருளாயும் அதன் உச்சி மிக்க சோதியை, Adhan Ucchi Mikka Sothiyai - அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை நாதன் என அறியாது, Nadhan Enna Ariyadhu - ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல் உழல்கின்ற தொண்டர், Uzhalginra Thondar - கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய பேதைமை, Pethaimai - அவிவேகத்தை தீர்த்த, Theertha - போக்கடித்த இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை தொழும், Thozhum - ஸேவிக்கின்ற பெரியோர், Periyor - மஹான்களுடைய பாதம் அல்லால், Paadham Allal - திருவடிகள் தவிர என் தன் ஆர் உயிர்க்கு, En Than Aar Uyirkkum - எனது அருமையான ஆத்மாவுக்கு யாது ஒன்றும் பற்று இல்லை, Yadhu Ondrum Patru Illai - வேறு ஏதேனும் புகலிடமில்லை. |
| 3862 | இராமாநுச நூற்றந்தாதி || 86 | பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே | பதவுரை Show / Hideபற்றா மனிசரை பற்றி, Pattra Manisarai Pattri - உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி அப் பற்று விடாது, Ap Pattru Vidathu - அந்தப் பற்றுதலை விடாமல் அவரே உற்றார் என, Avarae Utraar Ena - அவர்களையே உறவினராகக் கொண்டு உழன்று, Uzhandru - அவர்கள் பினனே அலைந்து ஓடி, Odi - அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி இனி நையேன், Ini Naiyen - இனி மேல் துவள மாட்டேன்; ஒள்ளிய நூல் கற்றார், Olliya Nool Kattraar - சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே பரவும், Paravum - கொண்டாடப் படுகிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை கருதும் உள்ளம் பெற்றார் யவர், Karudum Ullam Pettraar Yavar - அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ, அவர், Avar - அந்த மஹான்களே எம்மை, Emmai - நம்மை நின்று ஆளும் பெரியவர், Ninru Aalum Periyavar - சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள். ஒள்ளிய நூல், Olliya Nool - “சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும். |
| 3863 | இராமாநுச நூற்றந்தாதி || 87 | பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்
குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்
புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே | பதவுரை Show / Hideபெரியவர் பேசிலும், Periyavar Pesilum - ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும் பேதையர் பேசிலும், Pethaiyar Pesilum - ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும் தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று, Than Gunangadku Uriya Sol Endrum Udaiyavan Endru Endru - தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி உணர்வில் மிக்கோர் தெரியும், Unarvil Mikkoor Theriyum - சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற வண் கீர்த்தி, Van Keerthi - திவ்ய கீர்த்தியை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் மறை தேர்ந்து, Marai Therndhu - வேதங்களை ஆராய்ந்து உலகில், Ulagil - இவ் வுலகத்தில் புரியும், Puriyum - உபதேசித்தருளின நல் ஞானம் பொருந்தாதவரை, Nal Nyanam Porundhavarai - நல்ல ஞானத்தில் சேராதவர்களை கலி பொரும், Kali Porum - கலி புருஷன் பீடிப்பன். |
| 3864 | இராமாநுச நூற்றந்தாதி || 88 | கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே | பதவுரை Show / Hideகலி மிக்க, Kali Mikka - நிலவளம் மிகுந்த செந்நெல் கழனி, Sennel Kazhani - செந்நெல் கழனிகளை யுடைய குறையல், Kuraiyal - திருக் குறையலூரில் அவதரித்தவராய் கலை பெருமான், Kalai Perumaan - சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய மிக்க ஒலி பாடலை, Mikka Oli Paadalai - அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை உண்டு, Undu - அநுபவித்து தன் உள்ளம் தடித்து, Than Ullam Thadithu - தமது திருவுள்ளம் அதனால் வலி மிக்கம், Adhanal Vali Mikkam - அத்தால் மிடுக்கு அதிகரித்த சீயம், Seeyam - சிங்கம் போன்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார், மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை, Marai Vadhiyaram Puli Mikkadhu Endru Ip Bhuvanathil Vandhamai - வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை போற்றுவன், Poattruvan - புகழ்ந்திடக் கடவேன். |
| 3865 | இராமாநுச நூற்றந்தாதி || 89 | போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே | பதவுரை Show / Hideபோற்ற அரு சீலத்து, Poattr Aru Seelaththu - புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே; நின் புகழ், Nin Pugazh - தேவரீருடைய திருக் குணங்களை தெரிந்து சாற்றுவனேல், Therinthu Sattruvanel - உணர்ந்து பேசுவேனாகில் அது, Adhu - (நீசனாகிய நான் ) பேசுகிறவது தாழ்வு, Thazhvu - (தேவரீருக்கு) அவத்யமாம்; அது தீரில், Adhu Theeril - அப்படி நான் பேசுவது தவிர்த்தல் உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம், Un Seer Thanakku Or Aetram - தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும் என்றே கொண்டு இருக்கிலும், Endrae Kondu Irukkilum - என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும் என் மனம், En Manam - எனது நெஞ்சானது எத்தி அன்றி, Ethi Andri - (தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாது; இதற்கு, Idharku - இவ் விஷயத்திலே என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன், En Ninaivai Endrittu Anjuvan - தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன். |
| 3866 | இராமாநுச நூற்றந்தாதி || 90 | நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே | பதவுரை Show / Hideபிறவியை நீக்கும் பிரானை, Piraviyai Neekum Piraanai - ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும் இ நீள் நிலத்தே, I Neel Nilatthae - இப்பெரிய பூமியிலே எனை ஆள, Enai Aala - என்னை அடிமை கொள்வதற்கே வந்த, Vanda - அவதரித்தவராயுமுள்ள இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை நினையார், Ninaiyaar - சிந்தியா தவர்களாயும், இரு கவிகள் புனையார், Iru Kavigal Punaipaar - (அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும் புனையும் பெரியவர் தாள்களில், Punaikum Periyavar Thaalgalil - (ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில் பூ தொடையல்வனை யார், Poo Thodaiyalvani Yaar - புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள மாந்தர், Maanthar - மனிசர்கள் மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று பிறப்பில் வருந்துவர், Pirappil Varundhuvar - ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள். |
| 3867 | இராமாநுச நூற்றந்தாதி || 91 | மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே | பதவுரை Show / Hideஆகமம் வாதியர், Aagamam Vaathiyar - (சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள் மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று கூறும், Koorum - (சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற அவம் பொருள் ஆம் இருள் சுரந்து, Avam Porul Aam Irul Surandhu - நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்) எய்த்த, Eyththa - கெட்டுப் போன உலகு, Ulaku - உலகத்தவர்களுடைய இருள், Irul - அஜ்ஞாநாந்தகாரமானது நீங்க, Neenga - போகும்படியாக தன், Than - தம்முடைய ஈண்டிய சீர் அருள் சுரந்து, Eendiya Seer Arul Surandhu - விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள், Ella Uyirkadkum Nadhan Arangan Ennum Porul - “எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை சுரந்தான், Surandhaan - வெளியிட்டவரான எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் மிக்க புண்ணியன், Mikka Punniyan - சிறந்த புண்ணியாத்மா |
| 3868 | இராமாநுச நூற்றந்தாதி || 92 | புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே | பதவுரை Show / Hideசெம்மை நூல் புலவர்க்கு, Semmai Nool Pulavarkku - நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும் எண்ண அரு கீர்த்தி இராமாநுச, Enna Aru Keerthi Raamaanusa - அளவிட முடியாத கீர்த்தியை யுடைய இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!, புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன், Punniyam Nonbu Purindhum Ileen - புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை; அடி போற்றி செய்யும், Adi Poatri Seyyum - தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான நுண் அரு கேள்வி, Nun Aru Kelvi - ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை நுவன்றும் இலேன் இன்று, Nuvandrum Ileen Inru - (செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும் என், En - இன்று கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், Kannullum Nenjuullum - அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும் புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை, Pugundhu Nindra Ik Kaaranam Katturai - புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும். |
| 3869 | இராமாநுச நூற்றந்தாதி || 93 | கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே | பதவுரை Show / Hideகிட்டி, Kitti - அடியேன் பக்கல் வந்து நெருங்கி தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி, Than Arul Ennum Oru Vaal Uruvi - தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்) என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த, En Peruvinaiyai Kizhankodu Vetti Kalaindha - எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த இராமாநுசன் என்னும் மெய் தவன், Iramanuchan Ennum Meiya Thavan - எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால் கயவர், Kayavar - துஷ்டர்களான குத்ருஷ்டிகள் கட்டம் பொருளை மறை பொருள் என்று சொல்லும் பெட்டை, Kattam Porulai Marai Porul Endru Sollum Pettai - தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை கெடுக்கும் பிரான் அல்லனே, Kedukkum Piraan Allane - கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ. |
| 3870 | இராமாநுச நூற்றந்தாதி || 94 | தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே | பதவுரை Show / Hideதீது இல் இராமாநுசன், Theethu Il Iramanuchan - எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார் தன்னை சார்ந்தவர்கட்கு, Thannai Sarnthavarkadku - தம்மை வந்து அடைந்த வர்களுக்கு தவம் தரும், Thavam Tharum - சரணாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்; சரியா பிறவி பவம் தரும் தீவினை, Sariya Piravi Bhavam Tharum Theevinai - நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை பாற்றி தரும், Paatri Tharum - போக்கடித் தருள்வர்; பரம் தாமம் என்னும் திவம் தரும், Param Thamam Ennum Thivam Tharum - பரமபதமென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு) யான், Yaan - அடியேன் அவன் சீர் அன்றி, Avan Seer Andri - அவ் வெம்பெருமானாருடைய திருக் குணங்களைத் தவிர்த்து ஒன்றும், Ondrum - வேறொன்றையும் உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன், Ul Magizhndhu Uvandu Arundhen - மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன். |
| 3871 | இராமாநுச நூற்றந்தாதி || 95 | உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே | பதவுரை Show / Hideஉயிர்களுக்கு உள் நின்று, Uyirgalukku Ul Nindru - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு உற்றனவே செய்து, Utranave Seidhu - ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு அவர்க்கு, Avarkku - அவ் வாத்மாக்களுக்கு உயவே பண்ணும் பரனாம், Uyave Pannum Paranaam - உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம் பரிவு இலன் ஆம படி, Parivu Ilan Aama Padi - (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக பல் உயிர்க்கும், Pal Uyirkkum - ஸகல ஆத்மாக்களுக்கும் வீடு அளிப்பான், Veedu Alippaan - மோக்ஷத்தை அருள்வதற்காக எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் விண்ணின் தலை நின்று, Vinnin Thalai Nindru - ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் மண்ணின் தலத்து உதித்து, Mannin Thalathu Uthithu - இப் பூதலத்திலே அவதரித்து உய் மறை நாலும், Uy Marai Naalum - எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும் வளர்த்தனன், Valarthanan - குறைவின்றி வளரச் செய்ய தருளினார். |
| 3872 | இராமாநுச நூற்றந்தாதி || 96 | வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்
குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே | பதவுரை Show / Hideவளரும் பிணி கொண்டவல் வினையால், Valarum Pini Konda Val Vinaiyal - அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது, Mikka Nal Vinaiyil Kilarum Thunivu Kidait Thariyadu - மஹா விச்வாஸம் கிடைக்காததனால் முடை தலை ஊன் தளரும் அளவும், Mudai Thalai Oon Thalarum Alavum - கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில் தரித்தும் விழுந்தும், Thariththum Vizhundhum - ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும் தனி திரிவேற்கு, Thani Thiriverku - துணை யின்றித் திரிகிற எனக்கு இறைவர், Iraivar - ஸவாமிகள் (யாரென்றால், எம் இராமாநுசன் தன்னை உற்றவர், Em Iramanuchan Thannai Utravar - நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள் உளர், Ular - இருக்கிறார்கள். |
| 3873 | இராமாநுச நூற்றந்தாதி || 97 | தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்
தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்
தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து
தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே | பதவுரை Show / Hideஇராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாரானவர், தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து, Thannai Utrar Andri Thannai Utrarai Kunam Sarridum Thanmai Utrar Illai Endru Arinthu - தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி என்னை, Ennai - அடியேனை இன்று, Indru - இன்றைத் தினத்தில் தன் தகவால், Than Thakaval - தமது அருளாலே தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர், Thannai Utra Aal Seyyum Thanmaiyinor - தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய, Manna Thamarai Thal Thannai Utra Aal Seyya - ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி உய்த்தான், Uytthan - வைத்தருளினார். |
| 3874 | இராமாநுச நூற்றந்தாதி || 98 | இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே? | பதவுரை Show / Hideநம் இராமாநுசன், Nam Ramanujan - நம் எம்பெருமானார், சரணம் என்றால், Saranam Endral - உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால் இனிய சுவர்க்கத்திலே இடுமே, Iniya Suvarkkaththile Idume - (சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ? இன்னம், Innam - அல்லது நரகில் இட்டு சுடுமே, Naragil Ittu Sudume - நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ? அவற்றை தொடர்தரு, Avattrai Thodartharu - அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற தொல்லை சுழல் பிறப் பில், Thollai Suzhal Pirap Pil - அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே நடுமே, Nadume - நிறுத்துவரோ? இனி, Ini - மேலுள்ள காலங்களில் நம்மை, Nammai - நம்மை நம் வசத்தே விடுமே, Nam Vachathae Vidume - நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ? மனமே!, Maname - ஒ நெஞ்சே! மேவுதற்கு, Mevudharakku - பேறு பெறும் விஷயமாக நையல், Naiyal - நீ கரையவேண்டா. |
| 3875 | இராமாநுச நூற்றந்தாதி || 99 | தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே | பதவுரை Show / Hideதற்கம் சமணரும், Tharkam Samanarum - தர்க்கம் பண்ணுகிற சமணர்களும் பேய், Pei - பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற சாக்கியர்களும், Saakkiyargalum - பௌத்தர்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும், Thaal Sadayoon Sol Katra Sombarum - ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும் சூனிய வாதரும், Sooniya Vadharum - சூந்நியவாதிகளும் நால் மறையும் நிற்க, Naal Maraiyum Nirka - நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே குறும்பு செய் நீசரும், Kurumbu Sei Neesarum - (அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும் மாண்டனர், Mandanar - ஒழிந்தார்கள்; பொன் கற்பகம் எம் இராமாநுச முனி, Pon Karppagam Em Ramanuja Muni - சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார் நீள் நிலத்தே போந்த பின், Neel Nilatthae Pontha Pin - விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு. |
| 3876 | இராமாநுச நூற்றந்தாதி || 100 | போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! என் நெஞ்சு என்னும் பொன் வண்டு, En Nenju Ennum Pon Vandu - எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது உனது அடி போதில், Unathu Adi Pothil - தேவரீருடையதிருவடித்தாமரைகளில் ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, On Seer Aam Theli Then Undu Amarnthida Vendi - அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி நின் பால், Nin Paal - தேவரீரிடந்தில் போந்தது, Ponthathu - வந்து சேர்ந்தது; அதுவே, Adhuve - அத் திருக் குணங்களையே ஈந்திட வேண்டும், Eendhida Vendum - அளித்தருள வேணும்; இது அன்றி, Idhu Andri - இத் திருக் குணங்களைத் தவிர ஒன்றும், Ondrum - வேறொன்றையும் மாந்த கில்லாது, Mantha Killaadhu - (நெஞ்சு) புஜிக்க மாட்டாது; இனி, Ini - இப்படியான பின்பு மற்று ஒன்று காட்டி, Mattru Ondru Kaatti - வேறொரு விஷயத்தைக் காட்டி மயக்கிடேல், Mayakkidhel - மயக்க வேண்டா |
| 3877 | இராமாநுச நூற்றந்தாதி || 101 | மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே | பதவுரை Show / Hideமயக்கும், Mayakkum - “அஜ்ஞானத்தை விளைக்க வல்ல இரு வினை, Iru Vinai - புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற வல்லியல், Valliyal - விலங்கில் பூண்டு, Poondhu - அகப்பட்டுக் கொண்டு மதி மயங்கி, Madhi Mayangi - அறிவு கெட்டு துயக்கும், Thuyakkum - ப்ரமிச்கச் செய்கிற பிறவியியல், Piraviyial - ஸம்ஸாரத்திலே தோன்றிய என்னை, Thonriya Ennai - சிறந்த அடியேனை துயர் அகற்றி உய கொண்டு, Thuyar Akattri Uya Kondu - துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து நல்கும், Nalkum - அருள் செய்கின்ற இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! என்றது இது, Endrathu Idhu - என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது உன்னை உன்னி நைந்து, Unnai Unni Naindhu - தேவரீரை அநுஸந்தித்து உருகி என்றும் நயக்கு, Endrum Nayakku - எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு இழுக்கு என்பர் நல்லவர், Izhukku Enbar Nallavar - தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். |
| 3878 | இராமாநுச நூற்றந்தாதி || 102 | நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே? | பதவுரை Show / Hideமனம், Manam - எனது நெஞ்சானது உன் குணங்களை உன்னி, Un Gunangalai Unni - தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து நையும், Naiyum - கரைகின்றது; என் நா, En Naa - எனது வாக்கானது இருந்து, Irundhu - நிலை நின்று எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும், Em Aiyan Raamanusan Endru Azhaikkum - எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது. அரு வினையேன், Aru Vinaiyen - மஹா பாபியான என்னுடைய கையும், Kaiyum - கைகளும் தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணு கின்றன; கண், Kan - கண்களானவை காண கருதிடும், Kaan Karudidum - (தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன; கடல்புடைசூழ் வையம் இதனில், Kadalpudaisuzh Vaiyam Idanil - சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே உன் வண்மை, Un Vanmai - தேவரீருடைய ஔதார்ய குணம் என்பால் வளர்ந்தது என், Enpal Valarnthathu En - அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?. |
| 3879 | இராமாநுச நூற்றந்தாதி || 103 | வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்
களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்னொரு காலத்தில் வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய், Valarntha Vem Kobam Madangal Ondru Aay - கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி வாள் அவுணன், Vaal Avunan - வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது கிளர்ந்த, Kilarndha - செருக்கினால் நெறித்திருந்த பொன் ஆகம், Pon Aagam - பொன் போன்ற மார்வை கிழித்தவன், Kizhiththavan - கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானுடைய கீர்த்தி பயிர் எழுந்து, Keerthi Payir Ezhunthu - திருப் புகழ்களாகிற பயிர் வளர்ந்து விளைந்திடும் சிந்தை, Vilainthidum Sindhai - விளையப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் மெய் வினை நோய் களைந்து, En Than Meiya Vinaik Kalanthu - எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - கையிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக நல் ஞானம் அளித்தனன், Nal Gnanam Aliththan - விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார் |
| 3880 | இராமாநுச நூற்றந்தாதி || 104 | கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே! | பதவுரை Show / Hideசெழு கொண்டல், Sezhu Konda - ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற என் இராமாநுச, En Iramaanusa - எம்பெருமானாரே! கண்ணனை, Kannana - எம்பெருமானை கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - உள்ளங்கை நெல்லிக் கனி போலே காட்டி தரினாம், Kaatti Tharinaam - காட்டிக் கொடுத்தாலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன், Un Than Meiyil Pirangiya Seer Anriyaan Vendilan - தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்; நிரயம் தொய்யில், Niraym Thoyyil - ஸம்ஸார நரகக் குழியில் கிடக்கிலும், Kidakkilum - அழுந்திக் கிடந்தேனாகிலும் சோதி விண் சேரிலும், Sothi Vin Cherilum - சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும் இவ் அருள், Iv Arul - (தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை நீ செய்யில், Nee Seyyil - தேவரீர் செய்தருளினால் தான் தரிப்பான், Tharippaan - (ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன். |
| 3881 | இராமாநுச நூற்றந்தாதி || 105 | செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே | பதவுரை Show / Hideசெழு திரை பால் கடல், Sezhu Thirai Paal Kadal - அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில் கண் துயில், Kan Thuyil - பள்ளி கொண்டிராநின்ற மாயன், Maayan - ஸர்வேச்வரனாடைய திரு அடி கீழ், Thiru Adi Keezh - திருவடிகளின் கீழே விழுந்து இருப்பார், Vizhundu Iruppaar - விழுந்து கிடக்கும் மஹான்களுடைய நெஞ்சில் மேவும், Nenjiil Mevum - ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற நல் ஞானி, Nal Nyaani - சிறந்த ஞானியாயும் நல்வேதியர்கள் தொழும் திரு பாதன், Nalvedhiyargal Thozhum Thiru Paadhan - நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை தொழும், Thozhum - ஸேவிக்கின்ற பெரியோர், Periyor - மஹாத்மாக்கள் எழுந்து இரைத்து ஆடும் இடம், Ezunthu Iraithu Aaduum Idam - உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம் அடியேனுக்கு இருப்பு இடம், Adiyenukku Iruppu Idam - அடியேன் வஸிக்குமிடமாகும். |
| 3882 | இராமாநுச நூற்றந்தாதி || 106 | இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே | பதவுரை Show / Hideமாயனாக்கு, Maayanakku - ஸர்வேச்வரனுக்கு இருப்பு இடம், Iruppu Idam - வாஸஸ்தானம் (எவை யென்றால்) வைகுந்தம், Vaikundham - பரமபதமும் வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையும் மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம், Malirunj Cholai Ennum Poruppu Idam - திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்) என்பர் கல்லோர், Enbar Kallor - என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். மாயன், Maayan - (இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன் அவை தன்னொடும், Avai Thannodum - அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது வந்து இருப்பிடம், Vandhu Iruppidam - எம்பெருமானாருடைய இராமாநுசன் மனத்து, Iraamanusan Manathu - திரு வுள்ளத்திலேயாம்; அவன், Avan - அவ் வெம்பெருமானார் தாம் இன்று வந்து, Indru Vandhu - இப்போது வந்து தனக்கு இன்பு உற இருப்பிடம், Thanakku Inbu Ura Iruppidam - தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது என் தன் இதயத்து உள்ளே, En Than Idhayaththu Ullae - அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம். |
| 3883 | இராமாநுச நூற்றந்தாதி || 107 | இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே | பதவுரை Show / Hideஇன்பு உற்ற, Inbu Utra - ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய சீலத்து இராமாநுசா, Seelaththu Iraamanuchaa - எம்பெருமானாரே! சொல்லுவது ஒன்று உண்டு, Solluvadhu Ondru Undu - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு என்பு உற்ற நோய் உடல் தோறும், Enbu Utra Noi Udal Thoram - எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம் பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பதும் இறப்பதுமாகி எண்ண அரிய துன்பு, Enna Ariya Thunbu - எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து உற்ற வீயினாம், Utra Veeyinaam - முடிந்து போனாலும் என்றும், Endrum - எல்லாக் காலங்களிலும் எவ் இடத்தும், Ev Idaththum - எல்லா விடங்களிலும் உன் தொண்டர்கட்கே, Un Thondar Kadtke - தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே அன்பு உற்று இருக்கும், Anbu Utra Irukkum - பக்தனாயிருக்கும் படி படி என்னை ஆக்கி, Padi Ennai Aakki - அடியேனைச் செய்தருளி அங்கு, Angu - அந்த பக்தர்களிடத்தில் ஆள் படுத்து, Aal Paduthu - (அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்; |
| 3884 | இராமாநுச நூற்றந்தாதி || 108 | அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenchae - ஓ மனமே! பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து, Bhakti Ellam Thangiyathu Enna Thazhaithu - பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று, பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ, Pongiya Keerthi Raamanusan Adi Poo - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் நம் தலைமிசையே மன்ன, Nam Thalaimisaiye Manna - நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக, அம் கயல் பாய் வயல் தென் அரங்கன், Am Kayal Pai Vayal Then Arangan - அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய அணி ஆகம் மன்னும், Ani Aagam Mannum - அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய் பங்கயம் மா மலர் பாவையை, Pangayam Maa Malar Paavai - சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை போற்றதும், Poatradhu - வாழ்த்துவோம். |