திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3780 | இராமாநுச நூற்றந்தாதி || 4 | என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே | பதவுரை Show / Hideஊழி முதல்வனையே, Oozhi Muthalvanaiye - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே பன்ன, Panna - (எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி பணித்த, Paniththa - (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த பரன் இராமாநுசன், Paran Iramanusan - ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார் புவியில், Puviyil - இந்தப் பூமியிலே என்னை ஒரு பொருள் ஆக்கி, Ennai Oru Porul Aakki - (அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து, Marul Surandha Munnai Pazhai Vinai Veer Aruththu - அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி பாதமும், Paadhamum - தமது திருவடிகளையும் என் சென்னி, En Chenni - எனது தலையிலே தரிக்க வைத்தான், Tharikka Vaiththaan - நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு) எனக்கு, Enakku - அடியேனுக்கு ஏதும் சிதைவு இல்லை, Aedhum Sithaivu Illai - எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை. |