திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3781 | இராமாநுச நூற்றந்தாதி || 5 | எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே | பதவுரை Show / Hideஎனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று, Enakku Utra Selvam Iramanusan Endru - ‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று இசைய கில்லா, Isaiya Killa - அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத மனக் குற்றம் மாந்தர், Manak Kutram Manthar - துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர் பழிக்கில், Pazhikkil - (இந்நூலைப்) பழிப்பவர்களானால் புகழ், Pugazh - (அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்; அவன், Avan - அவ்வெம்பெருமானாருடைய மன்னிய சீர் தனக்கு, Manniya Seer Thanakku - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு உற்ற, Utra - தகுதியான அன்பர், Anbar - தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள் பத்தி ஏய்ந்த இயல் விது என்று, Pathi Aeyndha Iyala Vidhu Endru - இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி) அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார், Avan Thirunamagal Saatrum En Paa Inam Kutram Kaanagillaar - அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள். |