திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3784 | இராமாநுச நூற்றந்தாதி || 8 | வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திரு விளக் கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுச னெம் இறையவனே | பதவுரை Show / Hideவருத்தும், Varuththum - வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை மாற்ற, Maatra - போக்குவதற்காக எம் பொய்கைப்பிரான், Em Poigai Piraan - நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார் அன்று, Andru - முற் காலத்தில் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து, Maraiyin Kuruththin Porulaiyum Senthamizh Thannaiyum Kootti Ondra Thiriththu - வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒருதிரியாக்கி எரித்த திரு விளக்கை, Eritha Thiru Vilakkai - ஜ்வலிக்கக் செய்த (முதல் திருவந்தாதி யாகிற) திருவிளக்கை தன் திரு உள்ளத்தே, Than Thiru Ullaththae - தமது திருவுள்ளத்தே இருத்தும், Iruththum - வைத்துக் கொண்டிரா நின்ற பரமன் இராமாநுசன் எம் இறையவன், Paraman Iraamaanusan Em Iraivan - மஹா வைபவசாலியான எம்பெருமானார் எம் இறையவன், Em Iraivan - நமக்கு ஸ்வாமி |