திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3798 | இராமாநுச நூற்றந்தாதி || 22 | கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே | பதவுரை Show / Hideகார்த்திகையானும், Kaarthikayaanum - ஸுப்ரஹமண்யனும் கரி முகத்தானும், Kari Mukaththaanum - கணபதியும் கனலும், Kanalum - (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும் முக் கண் மூர்க்தியும், Mook Kan Moorkthiyum - சிவனும் மோடியும், Modiyum - துர்க்கையும் வெப்பும், Veppum - ஜ்வரதேவதையும் முதுகு இட்டு, Mudhuku Ittu - முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன் மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட, Moo Ulagum Pooththavane Endru Poatrida - “மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற வாணன் பிழை பொறுத்த, Vaanan Pizhai Poruththa - (அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின தீர்த்தனை, Theerththanai - பாவநனான ஸர்வேச்வரனை ஏத்தும், Aeththum - நித்யம் துதிக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் சேமவைப்பு, En Than Saemavaippu - எனக்கு ஆபத் தநம். |