திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3800 | இராமாநுச நூற்றந்தாதி || 24 | மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால்
எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே | பதவுரை Show / Hideமுன நாள்கள் எல்லாம், Muna Naalgal Ellam - கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம் பல் உடல் தொறும், Pal Udal Thorum - பல பல சரீரங்கள் தோறும் மொய்த்த வெம் தீ வினையால் மூத்து, Moyththa Vem Thee Vinaiyaal Mooththu - ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து அதனால், Adhanaal - அத்தாலே எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - மிக்க பரிதாப மடைந்தேன்; பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள், Poy Thavam Poattrum Pulai Samayangal - கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள் நிலத்து அவிய, Nilaththu Aviy - இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி கைத்த, Kaiththa - நிரஸித்தருளின மெய் ஞானத்து, Mei Gnanaththu - உண்மை ஞான முடையரான இராமாநுசன் என்னும் கார் தன்னை, Iraamaanusan Ennum Kaar Thannai - எம்பெருமானாராகிற காள மேகத்தை இன்று கண்டு, Indru Kandu - இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று உயர்ந்தேன், Uyarnthen - சிறந்தவனானேன். |