திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3807 | இராமாநுச நூற்றந்தாதி || 31 | ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் கால மெல்லாம் மனமே!
ஈண்டு பல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமானுசனைப் பொருந்தினமே | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சே! நூள் ஆய், Nool Aay - நாள்களாகவும் திங்கள் ஆய், Thingal Aay - மாதங்களாகவும் ஆண்டுகள் ஆய், Aandugal Aay - வருஷ்ங்களாகவும் நிகழ் காலம் எல்லாம், Nigal Kaalam Ellam - நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும் ஈண்டு பல் யோனிகள் தோறும், Eendu Pal Yoonigal Thoram - திரண்டு பல்வகைப் பட்ட யோனிகள் தோறும் உழல்வோம், Uzhalvom - தட்டித் திரிந்த நாம் இன்று ஒர் எண் இன்றியே, Indru Or En Indriye - இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா) காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம், Kaan Thagu Thol Annal Then Aththiyoorar Kazhal Inai Kkeezh Poondha Anbu Aalan Raamanusanai Porundhinam - கண்ணாரக் காணத் தக்க தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,) |