திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3815 | இராமாநுச நூற்றந்தாதி || 39 | பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே | பதவுரை Show / Hideபொருள் என்றும், Porul Endrum - த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும் புதல்வர் என்றும், Puthalvar Endrum - புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும் பூமி என்றும், Bhoomi Endrum - க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி) மருள் கொண்டு, Marul Kondu - அறிவு கெட்டு இளைக்கும் நமக்கு, Ilaiyum Namakku - வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு இருள் கொண்ட, Irul Konda - அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை மாற்றி, Maatri - போக்கடித்து தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள், Than Eeru Il Peru Pugazhe Therulum Therul - தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை தந்து, Thandu - அருளித்தருளி இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் செய்யும் சேமங்கள், Seyyum Semangal - செய்கிற க்ஷேமங்களானவை நெஞ்சே, Nenchae - ஒ மனமே! மற்று உளார் தரமோ, Mattru Ular Tharamo - மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.) |