திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3816 | இராமாநுச நூற்றந்தாதி || 40 | சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே | பதவுரை Show / Hideசேமம் நல்வீடும், Semam Nalveedu - (அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம் பொருளும், Porulum - அர்த்தமும் தருமமும், Dharumamum - தர்மமும் சீர்ய நல் காமமும், Seerya Nal Kaamamum - மிகவுஞ் சிறந்த காமமும் என்ற இவை, Endra Ivai - ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை நான்கு என்பர், Naanthu Enbar - நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்; நான்கினும், Naanthinum - இந்த நான்கு புருஷார்த்தங்களுள் காமம், Kaamam - காமமாவது கண்ணனாக்கே ஆமது, Kannanaakke Aamuthu - எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது; அறம் பொருள் வீடு, Aram Porul Veedu - தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும் இதற்கு என்று, Idharku Endru - இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று வாமநன் சீலன் இராமாநுசன், Vamanan Seelan Iraamaanusan - வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார் இந்த மண்மிசை உரைத்தான், Indha Manmichai Uraiththaan - இவ் வுலகத்தில் அருளிச் செய்தார் |