திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3819 | இராமாநுச நூற்றந்தாதி || 43 | சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்க்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே | பதவுரை Show / Hideபடியில் உள்ளீர், Padiyil Ullir - இப்பூமியிலுள்ளவர்களே! யான் உமக்கு உரைக்கின்றனன், Yaan Umakku Uraikkindranan - நான் உங்களுக்கு (ஒரு ஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றால்) அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின், Aram Seerum Urugalaiyai Thurakkum Perumai Iraamaanuchan Endru Sollumin - தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திரு நாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்) திருவும், Thiruvum - பக்திப் பெருஞ்செல்வமும் உணர்வும், Unarvum - ஞானமும் சுரக்கும், Surakkum - மேன் மேலும் பெருகும் சோல புகில், Sola Pugil - அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே வாய் அமுதம் பரக்கும், Vaai Amudham Parakkum - வாக்கிலே அம்ருத ரஸம் வியாபிக்கும் இரு வினை, Iru Vinai - மஹா பாபங்கள் பற்று அற ஓடும், Pattru Arai Oodum - அடியோடே போய் விடும். |