திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3826 | இராமாநுச நூற்றந்தாதி || 50 | உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே | பதவுரை Show / Hideபரவு தொல் சீர், Paravu Thol Seer - உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும் எதி தலை நாதன், Edhi Thalai Nadhan - யதிகளுக்குத் தலையான நாயகருமான இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய இணை அடி, Inai Adi - திருவடி யிணைகள் உத்தமர் சிந்தையுள் உதிப்பன, Uttamar Sindhaiyul Uthippan - உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை; ஒன்னலர் நெஞ்சம், Onnalaar Nenjam - பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது அஞ்சி கொதித்திட, Anji Kothithida - பயப்பட்டுப் பரிதவிக்கும்படி மாறி நடப்பன், Maari Nadappan - மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன; கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த, Kollai Van Kuttram Ellam Pathitha - அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற என் புன் கவி, En Pun Kavi - என்னுடைய க்ஷுத்ரமான கவனமாகிய பா இனம் பூண்டன, Paa Inam Poondana - பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை. |