திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3830 | இராமாநுச நூற்றந்தாதி || 54 | நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே | பதவுரை Show / Hideமண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன், Man Ulavil Eettiya Seelathu Raamaanusan Than - இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய இயல்வு, Iyalvu - ஸ்வபாவத்தை கண்டு, Kandu - பார்த்து, நாட்டிய நீச சமயங்கள் மாண்டன, Naattiya Neesa Samayangal Maandana - (துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன; நாரணனை காட்டிய, Naaranaiyai Kaattiya - ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க வேதம், Vedham - வேதங்களானவை களிப்பு உற்றது, Kalippu Utrathu - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன; தென் குருகை வள்ளல், Then Kurugai Vallar - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த) வாட்டம் இலா, Vaatam Ila - ஒரு குறையுமற்ற வண் தமிழ் மறை, Van Tamil Marai - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி வாழ்ந்தது, Vaazhnthathu - வாழ்வு பெற்றது. |