திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3834 | இராமாநுச நூற்றந்தாதி || 58 | பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே | பதவுரை Show / Hideபேதையர், Paedhaiyar - (வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள் இது வேதப் பொருள் என்ற உன்னி, Idhu Vedhap Porul Endra Unni - நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு பிரமம் நன்று என்று ஒதி, Brahmam Nandru Endru Othi - ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’ என்று சொல்லி மற்று எல்லா உயிரும் அஃது என்று, Mattru Ella Uyirum Ahthu Endru - அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி உயிர்கள் மெய்விட்டு, Uyirgal Meivittu - ‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம், Aadhi Paranodu Onru Aam Endru Sollum Avv Allal Ellam - ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’ என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம். மெய் மதி கடல், Mei Mathi Kadal - தத்வ ஜ்ஞாநக் கடலாகிய எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார் வாதில் வென்றான், Vaathil Vendraan - வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார். |