திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3835 | இராமாநுச நூற்றந்தாதி || 59 | கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே | பதவுரை Show / Hideகடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும், Kadal Alavu Aaya Thisai Ettinullum - நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும் கலி இருளே மிடை தரு காலத்து, Kali Irule Midai Tharu Kaalathu - கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில் இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் (திருவவதரித்து) நால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களின் மிக்க சுடர் ஒளியால், Mikka Sudar Oliyaal - அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு அவ்விருளை துரந்திலனேல், Avvirulai Thurandhilanel - அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால் உயிரை உடையவன் நாரணன் என்று, Uyirai Udaiyavan Narayanan Endru - ‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று உற்று உணர்ந்து, Utru Unarndhu - யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். |