திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3836 | இராமாநுச நூற்றந்தாதி || 60 | உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்-
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே | பதவுரை Show / Hideகுணம் திகழ், Gunam Thigazh - ஆத்ம குணங்களால் விளங்குபவரும் கொண்டல், Kondal - (ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும் எம் குலம் கொழுந்து, Em Kulam Kozhundhu - எங்கள் குலத்துக்குத் தலைவருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும், Unarndha Mei Gnaniyar Yogam Thorum - கற்றுணர்ந்த தத்வ ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும் திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும், Thiruvai Mozhiyin Manam Tharum In Isai Mannum Idam Thorum - திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும், Maa Malaraal Punarndha Pon Marban Porundhum Pathi Thorum - பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும் புக்கு நிற்கும், Pukku Nirkum - எழுந்தருளி யிருப்பார். |