திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3840 | இராமாநுச நூற்றந்தாதி || 64 | பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே | பதவுரை Show / Hideஎங்கள் இராமநுச முனி வேழம், Engal Iramanusa Muni Vezham - எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது. மாறன், Maan - நம்மாழ்வார் பண், Pan - இசைகளாலே தரு, Tharu - அருளிச் செய்த பசுந்தமிழ் ஆனந்தம், Pasunthamil Anantham - செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம் பாய் மதம் ஆய் விண்டிட, Pai Matham Aayi Vintida - பெருகு மத நீராக ஒழுகப் பெற்று மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி, Meimmai Konda Nal Vedham Kozhu Thandam Aendhi - ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு குவலயத்தே, Kuvalayatthae - இப் பூமண்டலத்திலே மணடி வந்து என்றது, Manadi Vandu Endrathu - உங்களுடைய பிழைப்பு உங்கள் வாழ்வு அற்றது, Ungal Vazhvu Attrathu - உங்களுடைய பிழைப்பு போயிற்று |