திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3843 | இராமாநுச நூற்றந்தாதி || 67 | சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே? | பதவுரை Show / Hideசரணம் அடைந்த தருமனாக்கு ஆ, Saranam Adaindha Dharumanakku Aa - தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக பண்டு, Pandhu - முற்காலத்திலே நூற்றுவரை, Noorruvarai - துரியோதனன் முதலிய நூறு பேர்களை மரணம் அடைவித்த மாயவன், Maranam Adaivitha Maayavan - சாகும்படி செய்த எம்பெருமான் தன்னை வணங்க வைத்த கரணம் இவை, Thannai Vananga Vaiththa Karanam Ivai - தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை; உமக்கு அன்று, Umakku Andru - உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல; என்று, Endru - என்று இவ்வாறாக உபதேசித்து இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் உயிர்கட்கு, Uyirkadku - ஆத்மாக்களுக்கு அரண் அமைத்திலன் எல், Aran Amaiththilan El - ரக்ஷையைக் கற்பித்தில ராகில் ,ஆர் உயிர்க்கு, Ar Uyirku - இந்த அருமையான ஆத்மாக்களுக்கு மற்று அரண் ஆர், Mattru Aran Ar - வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.) |