திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3849 | இராமாநுச நூற்றந்தாதி || 73 | வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்
தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே | பதவுரை Show / Hideதன் வண்மையினாலும், Than Vanmaiyin Alalum - தம்முடைய ஔதார்ய குணத்தாலும் மா தகவாலும், Maa Thakavalum - பரம க்ருபையாலும் மதி புரையும் தண்மையினாலும், Madi Puraiyum Thanmaiyin Alalum - சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும் இத் தரணியோர்கட்கு, Ith Tharaniyorkadku - இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை, Unmai Nal Jnanam Uraitha Raamanusanai - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை உன்னும் திண்மை அல்லால், Unnum Thinmai Allaal - சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர தேர்ந்திடில், Therndhidil - ஆராயமளவில் எனக்கு மற்று ஒர் நிலை இல்லை, Enakku Matru Or Nilai Illai - அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை. |