திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3857 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3857இராமாநுச நூற்றந்தாதி || 81
சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன் சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே
பதவுரை Show / Hide
உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி, Un Than Thunai Adikeezh Soarvu Indri - தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால், Thondu Pattavar Paal - சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு, Saarvu Indri Nindra Enakku - பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று, Indru - இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தான் இணைகள், Arangan Seyya Thaan Ingaigal - பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா, Pervu Indri Peruththum Iraamaa Nuchaa - ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!
இனி, Ini - இப்படியான பின்பு
தெரிவுறில், Therivuril - ஆராயுமளவில்
உன், Un - தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு, Seer Onriya Karunaikku - சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை, Maaru Illai - ஒப்பு இல்லை