திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3858 | இராமாநுச நூற்றந்தாதி || 82 | தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே | பதவுரை Show / Hideதெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது, Therivu Utra Gyaanam Seriya Peraadhu - தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல் வெம் தீ வினையால், Vem Thi Vinaiyal - மிகவுங் கொடியதான கருமத்தாலே உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை, Uru Arra Nanattu Ulalkinra Ennai - உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை ஒரு பொழுதில், Oru Polutil - ஒரு க்ஷண காலத்தில் பொருவு அற்ற கேள்வியனாக்கி நின்றான், Poruvu Arra Kelviyanaki Ninran - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும் தெரிவு உற்ற கீர்த்தி, Terivu Urra Kirtti - ப்ரஸித்தமான புகழை யடையவரும் சீர் முகில் என்னும், Cir Mukil Ennum - (ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்ன புண்ணியனோ, Enna Punniyano - என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.) |