திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3862 | இராமாநுச நூற்றந்தாதி || 86 | பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே | பதவுரை Show / Hideபற்றா மனிசரை பற்றி, Pattra Manisarai Pattri - உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி அப் பற்று விடாது, Ap Pattru Vidathu - அந்தப் பற்றுதலை விடாமல் அவரே உற்றார் என, Avarae Utraar Ena - அவர்களையே உறவினராகக் கொண்டு உழன்று, Uzhandru - அவர்கள் பினனே அலைந்து ஓடி, Odi - அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி இனி நையேன், Ini Naiyen - இனி மேல் துவள மாட்டேன்; ஒள்ளிய நூல் கற்றார், Olliya Nool Kattraar - சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே பரவும், Paravum - கொண்டாடப் படுகிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை கருதும் உள்ளம் பெற்றார் யவர், Karudum Ullam Pettraar Yavar - அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ, அவர், Avar - அந்த மஹான்களே எம்மை, Emmai - நம்மை நின்று ஆளும் பெரியவர், Ninru Aalum Periyavar - சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள். ஒள்ளிய நூல், Olliya Nool - “சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும். |