திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3864 | இராமாநுச நூற்றந்தாதி || 88 | கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே | பதவுரை Show / Hideகலி மிக்க, Kali Mikka - நிலவளம் மிகுந்த செந்நெல் கழனி, Sennel Kazhani - செந்நெல் கழனிகளை யுடைய குறையல், Kuraiyal - திருக் குறையலூரில் அவதரித்தவராய் கலை பெருமான், Kalai Perumaan - சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய மிக்க ஒலி பாடலை, Mikka Oli Paadalai - அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை உண்டு, Undu - அநுபவித்து தன் உள்ளம் தடித்து, Than Ullam Thadithu - தமது திருவுள்ளம் அதனால் வலி மிக்கம், Adhanal Vali Mikkam - அத்தால் மிடுக்கு அதிகரித்த சீயம், Seeyam - சிங்கம் போன்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார், மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை, Marai Vadhiyaram Puli Mikkadhu Endru Ip Bhuvanathil Vandhamai - வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை போற்றுவன், Poattruvan - புகழ்ந்திடக் கடவேன். |