திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3865 | இராமாநுச நூற்றந்தாதி || 89 | போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே | பதவுரை Show / Hideபோற்ற அரு சீலத்து, Poattr Aru Seelaththu - புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே; நின் புகழ், Nin Pugazh - தேவரீருடைய திருக் குணங்களை தெரிந்து சாற்றுவனேல், Therinthu Sattruvanel - உணர்ந்து பேசுவேனாகில் அது, Adhu - (நீசனாகிய நான் ) பேசுகிறவது தாழ்வு, Thazhvu - (தேவரீருக்கு) அவத்யமாம்; அது தீரில், Adhu Theeril - அப்படி நான் பேசுவது தவிர்த்தல் உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம், Un Seer Thanakku Or Aetram - தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும் என்றே கொண்டு இருக்கிலும், Endrae Kondu Irukkilum - என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும் என் மனம், En Manam - எனது நெஞ்சானது எத்தி அன்றி, Ethi Andri - (தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாது; இதற்கு, Idharku - இவ் விஷயத்திலே என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன், En Ninaivai Endrittu Anjuvan - தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன். |