திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3866 | இராமாநுச நூற்றந்தாதி || 90 | நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே | பதவுரை Show / Hideபிறவியை நீக்கும் பிரானை, Piraviyai Neekum Piraanai - ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும் இ நீள் நிலத்தே, I Neel Nilatthae - இப்பெரிய பூமியிலே எனை ஆள, Enai Aala - என்னை அடிமை கொள்வதற்கே வந்த, Vanda - அவதரித்தவராயுமுள்ள இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை நினையார், Ninaiyaar - சிந்தியா தவர்களாயும், இரு கவிகள் புனையார், Iru Kavigal Punaipaar - (அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும் புனையும் பெரியவர் தாள்களில், Punaikum Periyavar Thaalgalil - (ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில் பூ தொடையல்வனை யார், Poo Thodaiyalvani Yaar - புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள மாந்தர், Maanthar - மனிசர்கள் மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று பிறப்பில் வருந்துவர், Pirappil Varundhuvar - ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள். |