திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3872 | இராமாநுச நூற்றந்தாதி || 96 | வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்
குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே | பதவுரை Show / Hideவளரும் பிணி கொண்டவல் வினையால், Valarum Pini Konda Val Vinaiyal - அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது, Mikka Nal Vinaiyil Kilarum Thunivu Kidait Thariyadu - மஹா விச்வாஸம் கிடைக்காததனால் முடை தலை ஊன் தளரும் அளவும், Mudai Thalai Oon Thalarum Alavum - கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில் தரித்தும் விழுந்தும், Thariththum Vizhundhum - ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும் தனி திரிவேற்கு, Thani Thiriverku - துணை யின்றித் திரிகிற எனக்கு இறைவர், Iraivar - ஸவாமிகள் (யாரென்றால், எம் இராமாநுசன் தன்னை உற்றவர், Em Iramanuchan Thannai Utravar - நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள் உளர், Ular - இருக்கிறார்கள். |