திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3875 | இராமாநுச நூற்றந்தாதி || 99 | தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே | பதவுரை Show / Hideதற்கம் சமணரும், Tharkam Samanarum - தர்க்கம் பண்ணுகிற சமணர்களும் பேய், Pei - பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற சாக்கியர்களும், Saakkiyargalum - பௌத்தர்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும், Thaal Sadayoon Sol Katra Sombarum - ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும் சூனிய வாதரும், Sooniya Vadharum - சூந்நியவாதிகளும் நால் மறையும் நிற்க, Naal Maraiyum Nirka - நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே குறும்பு செய் நீசரும், Kurumbu Sei Neesarum - (அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும் மாண்டனர், Mandanar - ஒழிந்தார்கள்; பொன் கற்பகம் எம் இராமாநுச முனி, Pon Karppagam Em Ramanuja Muni - சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார் நீள் நிலத்தே போந்த பின், Neel Nilatthae Pontha Pin - விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு. |