திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3881 | இராமாநுச நூற்றந்தாதி || 105 | செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே | பதவுரை Show / Hideசெழு திரை பால் கடல், Sezhu Thirai Paal Kadal - அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில் கண் துயில், Kan Thuyil - பள்ளி கொண்டிராநின்ற மாயன், Maayan - ஸர்வேச்வரனாடைய திரு அடி கீழ், Thiru Adi Keezh - திருவடிகளின் கீழே விழுந்து இருப்பார், Vizhundu Iruppaar - விழுந்து கிடக்கும் மஹான்களுடைய நெஞ்சில் மேவும், Nenjiil Mevum - ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற நல் ஞானி, Nal Nyaani - சிறந்த ஞானியாயும் நல்வேதியர்கள் தொழும் திரு பாதன், Nalvedhiyargal Thozhum Thiru Paadhan - நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை தொழும், Thozhum - ஸேவிக்கின்ற பெரியோர், Periyor - மஹாத்மாக்கள் எழுந்து இரைத்து ஆடும் இடம், Ezunthu Iraithu Aaduum Idam - உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம் அடியேனுக்கு இருப்பு இடம், Adiyenukku Iruppu Idam - அடியேன் வஸிக்குமிடமாகும். |