திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 4 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
4திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --ஏடு இத்யாதி – கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர் ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக் கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில் முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம் என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் – பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும் பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும் அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார் பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில் பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும் அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது 4
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
பதவுரை Show / Hide
ஏடு, Aedu - பொல்லாங்கான
நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில்
இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன்
வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து
எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே
புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து
கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில்
வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து
ஒல்லை, Ollai - விரைவாக
கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள்
நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும்
நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும்
நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி
நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய
மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள
பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில்
வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள்