| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 474 | திருப்பாவை || 1 | மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் | சீர் மல்கும், Seer Malgum - செல்வம் நிறைந்துள்ள ஆய்ப்பாடி, Aaypadi - திருவாய்ப்பாடியில் செல்வம் சிறுமீர்காள், Selvam Sirumeerkaal - கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் நேர் இழையீர், Ner Izhaiyeer - விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே மார்கழி திங்கள், Maargazhi Thingal - (மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் மதி நிறைந்த நல் நாள், Mathi Niraindha Nal Naal - பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.) கூர் வேல், Koor Vel - கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும் கொடு தொழிலன், Kodu Thozhilan - (கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான நந்தகோபன், Nandhagopan - நந்தகோபனுக்கு குமரன், Kumaran - பிள்ளையாய்ப் பிறந்தவனும் ஏர் ஆர்ந்த கண்ணி, Aer Aarndha Kanni - அழகு நிறைந்த கண்களை யுடையளான அசோதை, Yasodhai - யசோதைப் பிராட்டிக்கு இள சிங்கம், Ila Singam - சிங்கக் குட்டி போலிருப்பவனும் கார் மேனி, Kaar Meni - காளமேகத்தோடொத்த திருமேனியையும் செம் கண், Sem Kan - செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் கதிர் மதியம் போல் முகத்தான், Kathir Mathiyam Pol Mugathaan - ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான நாராயணணே, Naaraayanane - ஸ்ரீமந் நாராயணன் தானே நமக்கே, Namakkae - (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறை, Parai - பறையை தருவான், Tharuvaan - கொடுக்குமவனாயிற் நின்றான் ஆல், Aal - ஆதலால் பாரோர், Paaror - இவ் வுலகத்தவர்கள் புகழ, Pugazha - கொண்டாடும்படி படிந்து, Padindhu - (இந்நோன்பிலே)ஊன்றி நீர் ஆட போதுவீர், Neer Aada Podhuveer - நீராட வர விருப்பமுடையீர்களே ! போதுமின், Podhumin - வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavaai - ஏல் ஓர் எம்பாவாய். |