Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: திருப்பாவை (33 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருப்பாவை- தனியன் || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த நமஸ்காரமானது காலம் உள்ளவரை ஆகவேண்டும். 9
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||
Neelaathunga sthanagirithati suptham, நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் - நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலைச்சாரலில் கண்வளர்ந்தருளுமவனை
Svochishtaayaam, ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் களையப்பட்ட
Sraji, ஸ்ரஜி - மாலையிலே
Nigalitham, நிகளிதம் - விலங்கிடப்பட்டவனுமான
Krishnam, க்ருஷ்ணம் - கண்ணபிரானை
Udhpodhya, உத்போத்ய - திருப்பள்ளி யுணர்த்தி
Sruthi satha siras sitham, ஸ்ருதி சத சிரஸ் சித்தம் - பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்த ஸித்தமான)
Svam, ஸ்வம் - தன்னுடையதான
Paararthyam, பாரார்த்யம் - பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை)
Adyaapayanthi, அத்யாபயந்தீ - அறிவியா நின்றவளாய்
Yaa palaathkruthya, யா பலாத்க்ருத்ய - எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை
Pungthe, புங்க்தே - (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ
Godha thasyai, கோதா தஸ்யை - அப்படிப்பட்ட பெருமையை யுடையளான ஆண்டாளின்பொருட்டு
Booyo Booya Eava, பூயோபூய ஏவ - காலதத்துவ முள்ளதனையும்
Idham idham Nama, இதம் இதம் நம: - இந்த இந்த நமஸ்காரமானது
Asthu, அஸ்து - ஆயிடுக
0திருப்பாவை- தனியன் || அன்னங்கள் உலாவும் வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதை இனிய இசையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய பாமாலையாக ஸமர்ப்பித்தாள். பூக்களால் ஆன மாலையையும் தான் முதலில் சூடி பின்பு அந்த எம்பெருமானுக்கு அதை ஸமர்ப்பித்தாள். அப்படிப்பட்ட பெருமையை உடைய ஆண்டாள் நாச்சியாரைப் பாடு 10
அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
Annam vayal, அன்னம் வயல் - ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களையுடைய
Pudhuvai, புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த)
Andal, ஆண்டாள் - ஆண்டாள்' என்னுந் திருநாமத்தை யுடையளும்
Pannu, பன்னு - ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட
Thirupavai pal pathiyam, திருப்பாவை பல் பதியம் - திருப்பாவையென்னும் பல பாசுரங்களை
In isaiyaal, இன் இசையால் - இனிய இசையுடன்
Paadi, பாடி - பாடி (அவற்றை)
Arangarku, அரங்கற்கு - ஸ்ரீரங்கநாதனுக்கு
Nal paa maalai, நல் பா மாலை - விலக்ஷணமான பாமாலையாக
Koduthaal, கொடுத்தாள் - ஸமர்ப்பித்தவளும்
Poomaalai, பூமாலை - (செண்பகம் முதலிய) பூக்களினாலாகிய மாலையை
Soodi, சூடி - (தான் முந்துறக் குழலிற்) சூடி
Koduthaalai, கொடுத்தாளை - (பிறகு ரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை
Sol, சொல் - அநுஸந்திக்கக் கடவை
0திருப்பாவை- தனியன் || பூக்களால் ஆன மாலையைத் தான் சூடிப் பின்பு எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த ஒளி விடும் கொடியைப் போன்றவளே! பலகாலமாக அனுஷ்டிக்கப்படும் பாவை நோன்பைத் திருப்பாவை மூலமாக அருளிச்செய்த, திருக்கைகளில் வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனைக் குறித்து “என்னைத் திருவேங்கடமுடையானுக்கு ஆட்படுத்த வேண்டும்” என்று கூறியதை, நாங்கள் அவனிடத்திலே கூற வேண்டாதபடி நீயே எங்களுக்கு அருள்புரிவாயாக. 11
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
Soodik kodutha, சூடிக் கொடுத்த - (பூமாலையைத் திருக்குழலிற்)சூடி (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த
Sudar kodiye, சுடர் கொடியே - தேஜோ மயமான கொடிபோன்றவளே!
Thol paavai, தொல் பாவை - அநாதி ஆசார ஸித்தமான நோன்பை
Paadi, பாடி - (திருப்பாவை முகமாகக்) கூறி
Arula valla, அருள வல்ல - (அடியார்திறத்துக்) கருணைபுரிய வல்லவளும்
Pal valaiyaai, பல் வளையாய் - பல வளைகளை அணிந்துள்ளவளுமான கோதாய்!
Nee, நீ - நீ
Naadi, நாடி - (மன்மதனை) நாடி
Ennai Vengadavar ku vidhi endra I maatram, என்னை வேங்கடவற்கு விதி என்ற இ மாற்றம் - ("காமதேவா! நீ என்னைத் திருவேங்கடமுடையானுக்கு வாழ்க்கைப் படுத்தவேணும்'' )என்று (காமனைக் குறித்துக்) கூறிய கூற்றை
Naam kadavaa vannam, நாம் கடவா வண்ணம் - யாம் மீறாதொழியுமாறு
Nalku, நல்கு - அருள்புரிவாயாக
474திருப்பாவை || 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
சீர் மல்கும், Seer Malgum - செல்வம் நிறைந்துள்ள
ஆய்ப்பாடி, Aaypadi - திருவாய்ப்பாடியில்
செல்வம் சிறுமீர்காள், Selvam Sirumeerkaal - கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள்
நேர் இழையீர், Ner Izhaiyeer - விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே
மார்கழி திங்கள், Maargazhi Thingal - (மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும்
மதி நிறைந்த நல் நாள், Mathi Niraindha Nal Naal - பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.)
கூர் வேல், Koor Vel - கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும்
கொடு தொழிலன், Kodu Thozhilan - (கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான
நந்தகோபன், Nandhagopan - நந்தகோபனுக்கு
குமரன், Kumaran - பிள்ளையாய்ப் பிறந்தவனும்
ஏர் ஆர்ந்த கண்ணி, Aer Aarndha Kanni - அழகு நிறைந்த கண்களை யுடையளான
அசோதை, Yasodhai - யசோதைப் பிராட்டிக்கு
இள சிங்கம், Ila Singam - சிங்கக் குட்டி போலிருப்பவனும்
கார் மேனி, Kaar Meni - காளமேகத்தோடொத்த திருமேனியையும்
செம் கண், Sem Kan - செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும்
கதிர் மதியம் போல் முகத்தான், Kathir Mathiyam Pol Mugathaan - ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான
நாராயணணே, Naaraayanane - ஸ்ரீமந் நாராயணன் தானே
நமக்கே, Namakkae - (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே
பறை, Parai - பறையை
தருவான், Tharuvaan - கொடுக்குமவனாயிற் நின்றான்
ஆல், Aal - ஆதலால்
பாரோர், Paaror - இவ் வுலகத்தவர்கள்
புகழ, Pugazha - கொண்டாடும்படி
படிந்து, Padindhu - (இந்நோன்பிலே)ஊன்றி
நீர் ஆட போதுவீர், Neer Aada Podhuveer - நீராட வர விருப்பமுடையீர்களே !
போதுமின், Podhumin - வாருங்கள்
ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavaai - ஏல் ஓர் எம்பாவாய்.
475திருப்பாவை || 2
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
வையத்து, Vaiyathu - இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள், Vaazhveerkal - வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே
நாமும், Naamum - (எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி, Uyyum Aaru Enni - உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி, Paal Kadalul Paiya Thuyindra Paraman Adi Paadi - திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, Aiyamum Pichaiyum Aandhanaiyum Kai Kaatti - (ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும் (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து, Ugandhu - மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும், Eem Paavaikku Seiyum - நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள், Kirisaikal - க்ரியைகளை
கேளீர், Keleer - காது கொடுத்துக் கேளுங்கள்
நாம், Naam - நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம், Nei Unnom - நெய் உண்ணக் கடவோமல்லோம்
பால் உண்ணோம், Paal Unnom - பாலை உண்ணக் கடவோமல்லோம்
நாட்காலே நீர் ஆடி, Naatkaale Neer Aadi - விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம், Mai Ittu Ezhudhom - (கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்
மலர் இட்டு முடியோம், Malar Ittu Mudiyom - (குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்
செய்யாதன, Seiyaadhana - (மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம், Seyyom - செய்யக் கடவோமல்லோம்
தீ குறளை, Thee Kuralai - கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம், Sendru Othom - (எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்
ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavay - ஏல் ஓர் எம்பாவாய்
476திருப்பாவை || 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
ஓங்கி, Oongi - (மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து
உலகு, Ulagu - (மூன்று) லோகங்களையும்
அளந்த, Alandhu - (திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட
உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய
பேர், Per - திருநாமங்களை
நாங்கள், Naangal - (பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள்
பாடி, Paadi - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி
நம் பாவைக்கு சாற்றி, Nam Paavaikku Saatri - நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு
நீர் ஆடினால், Neer Aadinaal - நீராடினால்
நாடு எல்லாம், Naadu Ellaam - தேசமெங்கும்
தீங்கு இன்றி, Theengu Indri - (அதிவிருஷ்டி அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல்
திங்கள் மும்மாரி பெய்து, Thingal Mummari Peydhu - மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்)
ஓங்கு பெரு செந் நெல் ஊடு, Oongu Peru Sen Nel Oodu - ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே
கயல் உகள, Kayal Ugala - மீன்கள் துள்ள
பூ, Poo - அழகிய
குவளை போதில், Kuvalai Podhil - நெய்தல் மலரில்
பொறிவண்டு, Porivandu - மிக்க புகரையுடைய வண்டுகளானவை
கண் படுப்ப, Kan Paduppu - உறங்க
புக்கு, Pukku - (மாட்டுத்தொழுவிற) புகுந்து
தேங்காதே இருந்து, Thengaathe Irundhu - சலியாமல் பொருந்தி யிருந்து
சீர்த்த முலை பற்றி வாங்க, Seertha Mulai Patri Vaanga - (பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க
வள்ளல், Vallal - (எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய
பெரும் பசுக்கள், Perum Pasukkal - பெரிய பசுக்களானவை
நீங்காத செல்வம் நிறைந்து, Neengaadha Selvam Niraindhu - நீங்காத ஸம்பத்து நிறையும்படி
குடம் நிறைக்கும், Kudam Niraikkum - (பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும்
ஏல் ஓர எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர எம் பாவாய்
477திருப்பாவை || 4
ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆழி மழை கண்ணா, Aazhi Mazhai Kanna - மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே!
நீ, Nee - நீ
கை, Kai - (உன்னுடைய) கொடையில்
ஒன்றும், Ondrum - ஒன்றையும்
கரவேல், Karavel - ஒளியா தொழியவேணும் (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு, Aazhiyul Pukku - கடலினுட் புகுந்து
முகந்து கொடு, Mugandhu Kodu - (அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து, Aarthu - கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி, Eri - (ஆகாயத்தே) ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து, Oozhi Mudhalvan Uruvam Pol Mei Karuthu - காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று

பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில், Paazi Am Thol Udai Parpanaban Kaiyil - பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும்
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)

ஆழி போல் மின்னி, Aazhi Pol Minni - திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி
வலம்புரி போல் நின்று அதிர்ந்து, Valampuri Pol Nindru Adhirndhu - (இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி
சார்ங்கம் உதைத்த, Saarngam Udaitha - ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட
சரம் மழை போல், Saram Mazhai Pol - பாண வர்ஷம் போல்
வாழ, Vaazha - (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும், Naangalum - கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து, Magizhndhu - ஸந்தோஷித்து
மார்கழி நீராட, Maargazhi Neeraada - மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில், Ulaginil - இல் வுலகத்தில்
தாழாதே, Thaalaathe - தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய், Peydidaay - மழை பொழியக் கடவை
ஏல் ஓர் எம் பாவாய் !, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் !
478திருப்பாவை || 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
மாயனை, Maayanai - மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை, Mannu Vadamadurai Maindhanai - (பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்
தூய பெரு நீர், Thooya Peru Neer - பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை, Yamunai Thuravani - யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்
ஆயர் குலத்தினில் தோன்றும், Aayar Kulathinil Thondrum - இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை, Aani Vilakkai - மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த, Thai Kudal Vilakkanjeydha - தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
தாமோதரனை, Dhamodharanai - கண்ண பிரானை
நாம், Naam - (அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து, Thuyoam Aay Vandhu - பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய், Thoo Malarkal Thoo - நல்ல மலர்களைத் தூவி
தொழுது, Thozhudhu - வணங்கி
வாயினால் பாடி, Vaayinaal Paadi - வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க, Manathinaal Sindikka - நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும், Poya Pizhaiyum - (சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்
புகு தருவான் நின்றனவும், Pugu Tharuvaan Nindranavum - பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும், Theeyinil Doosu Aagum - நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம் (ஆன பின்பு)
செப்பு, Seppu - அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!
479திருப்பாவை || 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
புள்ளும், Pullum - பறவைகளும்
சிலம்பின காண், Silambina Kaan - (இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண்
புள் அரையன், Pul Araiyan - பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ, Ko - ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
இல்லில், Illil - ஸந்நிதியிலே
வெள்ளை, Vellai - வெண்மை நிறமுடையதும்
விளி, Vili - (அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின், Sangin - சங்கினுடைய
பேர் அரவம், Paer Aravam - பேரொலியையும்
கேட்டிலையோ, Keatilaiyo - செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய், Pillai - (பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய், Ezhundhirai - (சடக்கென) எழுந்திரு
பேய் முலை நஞ்சு, Pey Mulai Nanchu - பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு, Undu - (அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம், Kallam Sagadam - வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய, Kalakku Azhiya - கட்டுக் குலையும்படி
கால், Kaal - திருவடியை
ஒச்சி, Ochi - ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து, Vellathu - திருப்பாற்கடலில்
அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த, Thuyil Amarndha - திருக்கண் வளர்ந்தருளின
வித்தினை, Vithinai - ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும், Munivargalum - மநந சீலரான ரிஷிகளும்
யோகிகளும், Yogigalum - யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு, Ullathu Kondu - (தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து, Mella Ezhundhu - (ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற , Ari Endra - ‘ஹரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்,Paer Aravam - பேரொலியானது
உள்ளம் புகுந்து, Ullam Pugundhu - (எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து, Kulirndhu - குளிர்ந்தது
ஏல் ஓர் எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர் எம் பாவாய்
480திருப்பாவை || 7
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பேய் பெண்ணே, Pey Pennae - மதி கெட்ட பெண்ணே!
எங்கும், Engum - எல்லா விடங்களிலும்
ஆனைச் சாத்தன், Aanaich Sathan - பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து, Kalandhu - (ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து
கீசுகீசு என்று, Keesukeesu Endru - கீச்சு கீச்சு என்று
பேசின, Pesina - பேசிய
பேச்சு அரவம், Pechu Aravam - பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ, Keatilaiyo - (இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம், Vaasam - பரிமள வஸ்துக்களினால்
நறு, Naru - மணம் கமழா நின்றுள்ள
குழல், Kuzhal - கூந்தலை யுடைய
ஆய்ச்சியர், Aaychiyar - இடைப் பெண்கள்
காசும், Kaasum - (கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும்
பிறப்பும், Pirappum - ஆமைத் தாலியும்
கலகலப்பு, Kalakalappu - கலகலவென்று சப்திக்கும் படியாக
கைபேர்த்து, Kaiperthu - கைகளை அசைத்து
மத்தினால், Maththinaal - மத்தாலே
ஓசை படுத்த, Osai Padutha - ஓசை படுத்தின
தயிர் அரவம், Thayir Aravam - தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ, Keatilaiyo - கேட்க வில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய், Nayakap Pen Pillai - பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை, Naaraayanan Moorthi Kesavanai - ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை
பாடவும், Paadavum - (நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ, Nee - நீ
கேட்டே, Keate - (அப் பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ, Kitathiyo - (இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய், Desam Udayaay - மிக்க தேஜஸ்ஸை யுடையவளே!
திற, Thira - (நீயே எழுந்து வந்து கதவைத்) திற
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!
481திருப்பாவை || 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
கோதுகலம் உடைய பாவாய், Kodhukalam Udaya Paavay - கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம், Keezh Vaanam - கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று, Vellendru - வெளுத்தது (அன்றியும்)
எருமை, Erumai - எருமைகளானவை
மேய்வான், Maeyvaan - (பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு, Siruveedu - சிறு தோட்டங்களில்
பரந்தன, Paranadhan - சென்று புக்கன
போவான் போகின்றார், Povaan Pogindraar - (திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும், Mikkulla Pillaigalum - மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து, Pogaamal Kaathu - போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான், Unnai Koovuvaan - உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம், Vandhu Nindroom - உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்
எழுந்திராய், Ezhundhirai - (எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு
பாடி, Paadi - (கண்ண பிரானுடைய குணங்களைப்) பாடி
பறை கொண்டு, Parai Kondu - (அவனிடத்துப்) பறையைப் பெற்று
மா வாய் பிளந்தானை, Maa Vaai Pilanthaanai - குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய, Malarai Maattiya - மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை, Thevaadhi Thevani - அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால், Naam Sendru Sevithaal - நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்)
ஆராய்ந்து, Aaraayndhu - (நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும், Aa Aa Endru Arulum - ஐயோ! என்று இரங்கி யருள்வன்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் !
482திருப்பாவை || 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
தூ மணி மாடத்து, Thoo Mani Maadathu - பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும், Sutrum - நாற் புறமும்
விளக்கு எரிய, Vilakku Eriya - விளக்குகள் எரியவும்
தூபம் கமழ, Thoopam Kamazha - (அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்
துயில் அணை மேல் கண் வளரும், Thuyil Anai Mel Kan Valarum - மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற
மாமான் மகளே, Maamaan Magale - அம்மான் பெண்ணே!
முணி கதவம், Muni Kadhavam - மாணிக்கக் கதவினுடைய
தாள், Thaal - தாழ்ப்பாளை
திறவாய், Thiravaay - திறந்திடுவாயாக
மாமீர், Maameer - அம்மாமீ!
அவளை, Avalai - (உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ, Ezhuppiro - எழுப்ப மாட்டீரோ?
உன் மகள், Un Magal - உன் மகளானவள்
ஊமையோ, Oomaiyo - வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி, Andri - அல்லாமற் போனால்
செவிடோ, Sevido - செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ, Ananthalo - பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில், Peru Thuyil - பெரிய படுக்கையில்
ஏமப்பட்டாளோ, Emapattalo - காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம்பட்டாளோ, Manthirampattalo - மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன், Maa Maayan - அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!
மாதவன், Maadhavan - திருமகள் கேழ்வனே!
வைகுந்தன், Vaigundhan - ஸ்ரீ வைகுண்டநாதனே!
என்று என்று, Endru Endru - என்று பலகால் சொல்லி
நாமம் பலவும், Naamam Palavum - (எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று, Navindru - (வாயாரக்) கற்றோம்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!
483திருப்பாவை || 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
நோற்று, Nottru - நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற, Suwarkkam Pugukindra - ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய், Ammaanai - அம்மே!
வாசல் திறவாதார், Vaasal Thiravaadhaar - வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ, Maatramum Thaararo - ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி, Naatrat Thuzhaay Mudi - நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன், Naaraayanan - நாராயணனும்
நம்மால் போற்ற பறை தரும், Nammaal Potra Parai Tharum - நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால், Punnianaal - தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த, Kootratthin Vaai Veezhndha - யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும், Kumbakaranum - கும்பகர்ணனும்
தோற்று, thottru - தோல்வி யடைந்து
பெருந்துயில், perunthuyil - (தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ, unakke thaan thandhaano - உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய், aatra anandhal udaiyaay - மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே, arum kalame - பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற, thettram aay vandhu thira - தெளிந்து வந்து (கதவைத்) திறந்திடு
ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய்
484திருப்பாவை || 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
கன்று கறவை, kanru karavai - கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள், pala kanangal - பல திரள்களை
கறந்து, karandhu - கறப்பவர்களும்
செற்றார், setraar - சத்துருக்களினுடைய
திறல் அழிய, thiral azhiya - வலி அழியும்படி
சென்று, sendru - (தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும், seru seyyum - போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத, kutrram ondru illaadha - ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம், kovalar tham - கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே, pon kodiyae - பொன் கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புனமயிலே, putru aravu al kul punamayile - புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில் (இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி, selvam pendatti - செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
போதராய், podharaayo - (எழுந்து) வருவாயாக
சுற்றத்து தோழிமார் எல்லாரும், sutratthu thozhimaar ellaarum - பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும்
வந்து, vandhu - (திரண்டு) வந்து
நின் முற்றம் புகுந்து, ninn mutram pogundhu - உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து
முகில் வண்ணன் பேர் பாட, mugil vannan paer paada - கார் மேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும்
நீ , nee - (பேருறக்கமுடைய) நீ
சிற்றாது, sirtradhu - சலியாமலும்
பேசாது, pesadhu - (ஒன்றும்) பேசாமலும்
உறங்கும் பொருள் எற்றுற்கு, urangum porul etrurku - உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)
ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய்
485திருப்பாவை || 12
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
இள கன்று எருமை, ila kanru erumai - இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து , kanaithu - (பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி,kanruku irangi - (தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து, ninaithu - (கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர, mulai vazhiye nindru paal soora - முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக(அப்பெருக்கினால்)
இல்லம், Illam - வீட்டை
நனைத்து, nanaithu - (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன் , seru aakkum nal selvvan - சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய் , thangai - தங்கையானவளே!
பனி, Pani - பனியானது
தலை வீழ, thalai veezha - எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி, nin vaasal kadai patri - உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு
சினத்தினால் , sinathinaal - (பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை, then Ilangai komanai - தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற - கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை - சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும், padavum - நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ, Ni - நீ
வாய் திறவாய், Vaai thiravai - வாய்திறந்து பேசுகிறாயில்லை
இனித் தான், iniththaan - எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய், Ezhundhirai - எழுந்திரு
ஈது என்ன பேர் உறக்கம், Eedhu enna Per Urakkam - இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் , anaitthu illathaarum - (இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து, arindhu - (நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று
486திருப்பாவை || 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
புள்ளின் வாய் கீண்டானை , pullin vaai keenndaanai - பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை , pollaa arakkanai killi kalainthaanai - கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய

கீர்த்திமை பாடி போய், keerthimai paadi poi - லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும், pillaigal ellaarum - எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார், paavai kalam pukaar - நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்
வெள்ளி எழுந்து, velli ezundhu - சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று, viyaazham urangitru - ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான்(அன்றியும்)
புள்ளும், pullum - பறவைகளும்
சிலம்பின, silambina - (இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன
போது அரி கண்ணினாய், podhu ari kanninaai - புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே
பாவாய், paavaai - பதுமை போன்றவளே!
நீ, nee - நீ
நல் நாள், nal naal - கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து, kallam thavirndhu - (கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து, kalanthu - எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே, kullak kullira kudaindhu neer aadaadhe - உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தி யோ, palli kidathiyo - படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல், aal - ஆச்சரியம்!
487திருப்பாவை || 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள், ungal puzhaikkadai toattathu vaaviyul - உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர், seng kazhuneer - செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து, vaai nekizhndhu - விகஸிக்க
ஆம்பல் வாய் கூம்பின, aambal vaai koompina - ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின (அன்றியும்)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர், sengal podi koorai ven pal thavaththavar - காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான், thangal thiruk koyil sangu iduvaan - தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார், pogindraar - போகா நின்றனர்
எங்களை, engalai - எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய், munnam ezuppvaan vaai pesum nangaai - முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய், naanaadhaay - (‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய், na udaiyaay - (இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன், sangodu chakkaram aendhum thada kaiyan - சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை, pangayak kannanai - தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட, Paada - பாடுகைக்கு
எழுந்திராய், ezunthiraai - எழுந்திரு
ஏல் ஓர் எம் பாவாய்!, ael oar em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்!
488திருப்பாவை || 15
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
இளம் கிளியே, Ilam kiliye - இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே, Elle - (இஃது) என்னே!
இன்னம், Innam - இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும்
உறங்குதியோ, Urangudhiyo - தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர், Nangaimeer - பெண்காள்!
போதர்கின்றேன், Podhargindrein - (இதோ) புறப்பட்டு வருகிறேன்
சில் என்று அழையேல்மின், Sil endru azhaiyelmin - சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள் (என்று உறங்குகிறவள் விடைசொல்ல) இளங்கிளியே !
வல்லை, Vallai - (நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்
உன் கட்டுரைகள், Un katturaigal - உனது கடுமையான சொற்களையும்
உன் வாய், Un vai - உன் வாயையும்
பண்டே, Pandae - நெடு நாளாகவே
அறிதும், Arithum - நாங்கள் அறிவோம் (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல)
நீங்கள் வல்லீர்கள், Neengal vallirkal - இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்(அன்றேல்)
நானே தான் ஆயிடுக, Naane thaan aiduga - (நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன் (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க
நீ, Nee - நீ
ஒல்லை, Ollai - சீக்கிரமாக
போதாய், Podhay - எழுந்து வா
உனக்கு, Unakku - (தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை, Veru enna udaiyai - (நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க
எல்லாரும், Ellarum - (வர வேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ, Pontharo - வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார், Pondhar - (எல்லோரும்) வந்தனர்
போந்து எண்ணிக்கை கொள், Pondhu ennikai kol - (நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக் கொள் (என்று உணர்த்த வந்தவர்கள் கூற)(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க)
வல் ஆனை, Val aanai - (குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றானை, Konraanai - கொன்றொழித்தவனும்
மாற்றாரை, Maatraarai - சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை, Maatru azhikka vallaanai - மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை, Maayanai - அற்புதனுமான கண்ணபிரானை
பாட, Paada - பாடுகைக்காக(ஒல்லை நீ போதாய் என்றழைக்கிறார்கள்)
ஏல் ஓர் எம்பாவாய், El or empavaay - ஏல் ஓர் எம்பாவாய்
489திருப்பாவை || 16
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
நாயகன் ஆய் கின்ற, Naayagan ai kindra - (எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய, Nandhagopanudaiya - நந்தகோபருடைய
கோயில், Koyil - திரு மாளிகையை
காப்பானே, Kaappaane - காக்குமவனே!
கொடி, Kodi - த்வஜபடங்கள்
தோன்றும், Thondrum - விளங்கா நிற்கப்பெற்ற
தோரணம் வாசல், Thoranam vaasal - தோரண வாசலை
காப்பானே, Kaappaane - காக்குமவனே!
மணி, Mani - அழகிய
கதவம், Kadavam - கதவினுடைய
தாள், Thaal - தாழ்ப்பாளை
திறவாய், Thiravai - திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு, Aayar sirumi yaro mukku - இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன், Maayan - ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே, Nennale - நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான, Arai parai vaai nerndhaana - ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ, Thuyil ezha - (அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான், Paaduvaan - பாடுகைக்காக
தூயோம் ஆய், Thuyom ai - பரிசுத்தைகளாய்
வந்தோம், Vandom - (அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா, Amma - ஸ்வாமி!
முன்னம்முன்னம், Munnammunnam - முதல் முதலிலே
வாயால், vaayaal - (உமது) வாயினால்
மாற்றாதே, maattraadhe - மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம், nesam nilai kadhavam - கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையையுடைய கதவை
நீ, nee - நீயே
நீக்கு, neekku - நீக்க வேணும்
490திருப்பாவை || 17
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்
அம்பரமே, ambaramae - வஸ்த்ரங்களையே
தண்ணீரே, thanneerae - தீர்த்தத்தையே
சோறே, soarae - சோற்றையே
அறம் செய்யும், aram seyyum - தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா, emberumaan Nandhagopaalaa - எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம், kombu anaarkku ellaam - வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே, kozhundhe - முதன்மை யானவளே!
குலம் விளக்கே, kulam vilakkae - (இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி, emberumaatti - எமக்குத் தலைவியானவளே!
அசோதாய், yasodhaay - யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய், arivuray - உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து, ambaam oodu aruthu - ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி, oongi - உயர வளர்ந்து
உலகு அளந்த, ulagu alandha - எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர்கோமானே, umbarangomaanae - தேவாதி தேவனே!
உறங்காது, urangadhu - இனிக்) கண்வளர்ந்தருளாமல்
எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும்
செம்பொன் கழல் அடி, sempon kazhal adi - சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா, selva - சீமானே!
பலதேவா!, paladheva! - பல தேவனே!
உம்பியும் நீயும், umbiyum neeyum - உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல், urangel - உறங்காதொழிய வேணும்’
491திருப்பாவை || 18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
உந்து மத களிற்றன், undhu math kalitran - (தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன், thol valiyan - புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன், Nandhagopalan - நந்த கோபானுக்கு
மருமகளே, marumagale - மருமகளானவளே!
நப்பின்னாய், nappinnaay - ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ, kandham kamazhum kuzhali - பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய், kadai thiravaay - தாழ்ப்பாளைத் திறந்திடு
கோழி, kozhi - கோழிகளானவை
எங்கும் வந்து, engum vandhu - எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண், azhaithana kaan - கூவா நின்றனகாண்’ (அன்றியும்)
மாதவி பந்தல் மேல், maadhavi pandhal mel - குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள், kuyil inangal - குயிற் கூட்டங்கள்
பல்கால், palkaal - பல தடவை
கூவின காண், koovina kaan - கூவா நின்றன காண்’
ஓடாத, odaadha - (போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி, pandhu aarvirali - பந்து பொருந்திய விரலை யுடையவளே!(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட, un maiththunan per paada - உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து, seer aar valai olippa vandhu - சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால், sendhaamarai kaiyaal - செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய், magizhndhu thiravaay - (எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத் திறந்திடு’)
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்
492திருப்பாவை || 19
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
குத்து விளக்கு, kuthu vilakku - நிலை விளக்குளானவை
எரிய, eriya - (நாற்புரமும்) எரியா நிற்க
கோடு கால் கட்டில் மேல், kodu kaal kattil mel - யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற, methendru - மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி, panja sayanathin mel aeri - (அழகு குளிர்த்தி மென்மை பரிமளம் வெண்மை என்னும்) ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல், kothu alar poo kuzhal - கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை, nappinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை, kongai - திருமுலைத் தடங்களை
மேல் வைத்து, mel vaithu - தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த, kidandha - பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா, malar maarbaa - அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வாய் திறவாய், vaai thiravaay - வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மை தட கண்ணினாய், mai thada kanninaay - மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ, nee - நீ
உன் மணாளனை, un manaalanai - உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும், eththanai podhum - ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய், thuyil ezh odaay - படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும், eththanaiyaelum - க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய், pirivu aattra killaay - (அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல், aal - ஆ! ஆ!!.
தகவு அன்று, thagavu andru - நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம், thathuvam - (இஃது) உண்மை
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்
493திருப்பாவை || 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
முப்பத்து மூவர் அமரர்க்கு, muppathu moovar amararkku - முப்பத்து முக் கோடி தேவர்கட்கு
முன் சென்று, mun sendru - (துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி
கப்பம், kappam - (அவர்களுடைய) நடுக்கத்தை
தவிர்க்கும், tharikkum - நீக்கி யருள வல்ல
கலியே, kaliyae - மிடுக்கை யுடைய கண்ண பிரானே!
வெப்பம், veppam - (பயமாகிற) ஜ்வரத்தை
கொடுக்கும், kodukkum - கொடுக்க வல்ல
விமலா, vimalaa - பரி சுத்த ஸ்வபாவனே!
துயில் எழாய், thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள்
’செப்பு அன்ன, 'seppu anna - பொற் கலசம் போன்ற
மென் முலை, men mulai - விரஹம் பொறாத முலைகளையும்
செம் வாய், sem vaai - சிவந்த வாயையும்
சிறு மருங்குல், siru marungul - நுண்ணிதான இடையையுமுடைய
நப்பின்னை நங்காய், nappinnai nangaay - நப்பின்னைப் பிராட்டியே!
திருவே, thiruvae - ஸ்ரீ மஹா லக்ஷ்மியே!
’துயில் எழாய், 'thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள்
செப்பம் உடையாய், seppam udaiyaay - (ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே
திறல் உடையாய், thiral udaiyaay - பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே!
செற்றார்க்கு, serrarkku - சத்துருக்களுக்கு (துயிலெழுந்த பின்பு.)
உக்கமும், ukkamum - (நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்)
தட்டொளியும், tattoliyum - கண்ணாடியையும்
உன் மணாளனை, un manaalanai - உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்
தந்து, tandhu - கொடுத்து
எம்மை, emmai - (விரஹத்தால் மெலிந்த) எங்களை
இப்போதே, ippodae - இந்த க்ஷணத்திலேயே
நீராட்டு, neeraattu - நீராட்டக் கடவாய்’
ஏல் ஓர் எம்பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
494திருப்பாவை || 21
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஏற்ற கலங்கள், etra kalangal - (கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி, edhir pongi - எதிரே பொங்கி
மீது அளிப்ப, meedhu alippa - மேலே வழியும்படியாக
மாற்றாத, maatradha - இடை விடாமல்
பால் சொரியும், paal soriyum - பாலைச் சுரக்கின்ற
வள்ளல், vallal - (பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள், peru pasukkal - பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான், aatra padaithaan - விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய், arivuray - திருப் பள்ளி யுணர வேணும்’
ஊற்றம் உடையாய், ootram udaiyaay - அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே!
பெரியாய், periyaai - பெருமை பொருந்தியவனே!
உலகினில், ulaginil - (இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற, thoatram aay ninra - ஆவிர்பவித்த
சுடரே, sudarae - தேஜோ ரூபியானவனே! துயில் எழாய்
மாற்றார், maatraar - சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து, unakku vali tholaindhu - உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)
உன் வாசல் கண், un vaasal kan - உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து, aattraadhu vandhu - கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே, un adi paniyum aa polae - உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம், yaam - நாங்கள்
புகழ்ந்து, pugazhndhu - (உன்னைத்) துதித்து
போற்றி, potri - (உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வந்தோம், vandhom - (உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
495திருப்பாவை || 22
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
அம் கண் மா ஞாலத்து அரசர், am kan maa nyaalathu arasar - அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து, abimaana pangam aay vandhu - (தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே, nin pallik kattil keezhe - உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல், sangam iruppaar pol - திரள் திரளாக இருப்பது போலே
வந்து, vandhu - நாங்களும் உன் இருப்பிடத்தேற விடை கொண்டு
தலைப் பெய்தோம், thalai petrom - கிட்டினோம்
கிங்கிணி வாய்ச் செய்த, kingini vaai seidha - கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
தாமரைப் பூ போலே, thaamarai poo polae - செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண், sem kan - சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது, siru siridhu - கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல், em mel - எங்கள் மேலே
விழியாவோ, vizhiyaavo - விழிக்க மாட்டாவோ?
திங்களும், thingalum - சந்திரனும்
ஆதித்யனும், aadityanum - ஸுர்யனும்
எழுந்தால் போல், ezhundhaal pol - உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு, am kan irandum kondu - அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல், engal mel nokkudhiyael - எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம், engal mel saabam - எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து, izhindhu - கழிந்துவிடும்
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
496திருப்பாவை || 23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலே நீ பூவைப்பூ வண்ணா
உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
மாரி, maari - மழைகாலத்தில்
மலை முழஞ்சில், malai muzhanjil - மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து, manni kidandhu - (பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும், urangum - உறங்கா நின்ற
சீரிய சிங்கம், seeriya singam - (வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று, arivurru - உணர்ந்தெழுந்து
தீ விழித்து, thee vizhithu - நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர், vaeri mayir - (ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க, ponga - சிலும்பும்படி
எப்பாடும், epaadum - நாற் புறங்களிலும்
பேர்ந்து, perndhu - புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி, udhari - (சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து, moori nimirthu - சோம்பல் முறித்து
முழங்கி, muzhangi - கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே, purappattu podharum aa polae - வெளிப் புறப்பட்டு வருவது போல
பூவை பூ வண்ணா, poovai poo vanna - காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ, nee - நீ
உன் கோயில் நின்று, un koyil ninru - உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி, ingganae poandharuli - இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று, un koyil ninru - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
கோப்பு உடைய, koppu udaiya - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய, seeriya - லோகோத்தரமான
சிங்காசனத்து, singaasanathu - எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம், yaam vandha kaariyam - நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து, aaraaindhu - விசாரித்து
அருள், arul - கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
497திருப்பாவை || 24
அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
அன்று, anru - (இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் நலிவு பட்ட) அன்று அக்காலத்தில்
இவ்உலகம், ivulagam - இந்த லோகங்களை
அளந்தாய், alandhaay - (இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி, adi - (உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி, potri - பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
அங்கு, angu - பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று, kanru - கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை)
குணிலா, gunila - எறிதடியா(க்கொண்டு)
எறிந்தாய், erindhaay - (கபித்தாஸுரன் மீது) எறிந்தருளினவனே
கழல், kazhal - (உன்னுடைய) திருவடிகள் போற்றி!
குன்று, kunru - கோவர்த்தன கிரியை
குடையா, kudaiyaa - குடையாக
எடுத்தாய், eduthaay - தூக்கினவனே;
குணம், kunam - (உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள் போற்றி!
வென்று, vendru - (பகைவரை) ஜபித்து
பகை, pagai - த்வேஷத்தை
சென்று, sendru - எழுந்தருளி
தென் இலங்கை, then ilangai - (அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய், serrai - அழித்தருளினவனே!
திறல், thiral - (உன்னுடைய) மிடுக்கு
போற்றி, potri - பல்லாண்டு வாழ்க
சகடம் பொன்ற, sagadam pondru - சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய், udhaithaay - (அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ், pugazh - (உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!
கெடுக்கும், kedukkum - அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி, nin kaiyil vael potri - உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று, endru endru - என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே, un saevagamae - உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி, aeththi - புகழ்ந்து கொண்டு
யாம், yaam - அடியோம்
இன்று, indru - இப்போது
பறை கொள்வான் வந்தோம், parai kolvaan vandhom - பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு, irangu - கிருபை பண்ணி யருள்
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
498திருப்பாவை || 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
ஒருத்தி, oruththi - தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய், magan aay - பிள்ளையாய்
பிறந்து, pirandhu - அவதரித்து
ஓர் இரவில், oru iravil - (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து)
ஒருத்தி, oruththi - யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய், magan aay - பிள்ளையாக
ஒளித்து வளர, oli thuu valar - ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான், thaan - தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி, tharikkilaan aagi - (அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த, theengu ninaindh - (இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன், kanjan - கம்ஸனுடைய
கருத்தை, karuthai - எண்ணத்தை
பிழைப்பித்து, pizhaippithu - வீணாக்கி
வயிற்றில், vayitril - (அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற, neruppu enna nindra - ‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே, nedu maale - ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை, unnai - உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம், arutthithu vandhom - (புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில், parai taruthi aagil - எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும் , thiru thakka selvamum - பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும், sevakamum - வீர்யத்தையும்
யாம் பாடி , yaam paadi - நாங்கள் பாடி
, வருத்தமும் தீர்ந்து, varuthamum theerndhu - உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய்
499திருப்பாவை || 26
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
மாலே, maale - (அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா, maṇivanna - நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய், aalin ilaiyaay - (ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான், maargazhi neeraduvanaan - மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார், melaaiyaar - உத்தம புருஷர்கள்
செய்வனகள், seyvangaḷ - அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன, venduvana - வேண்டியவற்றை
கேட்டி ஏல், ketti ael - கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம், nyaalathai ellaam - பூமியடங்கலும்
நடுங்க, nadunga - நடுங்கும்படி
முரல்வன, muralvana - ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன, paal anna vaṇṇathu unpaanja sanniyame poalvana - பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள், sangangal - சங்கங்களையும்
போய் பாடு உடையன, poi paadu udaiyana - மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு, saalap peru - மிகவும் பெரியனவுமான
பறை, parai - பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார், pallandu isaippar - திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு, kolam vilakku - மங்கள தீபங்களையும்
கொடி, kodi - த்வஜங்களையும்
விதானம், vidaanam - மேற்கட்டிகளையும்
அருள், arul - ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்
500திருப்பாவை || 27
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
கூடாரை, koodaarai - தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர், vellum seer - வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே!
உன் தன்னை, un thannai - உன்னை
பாடி, paadi - (வாயாரப்)பாடி
பறை கொண்டு, parai kondhu - (உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம், yaam peru sammaanam - (பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால், naadu pugazhum parisinaal - நாட்டார் புகழும்படியாக
சூடகம், soodagam - (கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை, thol valai - தோள்வளைகளும்
தோடு, thodu - (காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ, sevi poo - கர்ணப் பூவும்
பாடகம், paadagam - பாதகடகமும்
என்றனையப் பல் கலனும், endranaiya pal kalenum - என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும் (உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட) யாம் நன்றாக அணிவோம்
ஆடை, aadai - சேலைகளை
உடுப்போம், uduppom - (நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே, adhan pinne - அதற்குப் பின்பு
பால் சோறு, paal soru - பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட, mooda - மறையும் படியாக
நெய் பெய்து, nei peythu - நெய் பரிமாறி
முழங்கை வழி, muzhangai vazhi - முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி, koodi - (நீயும் நாங்களுமாகக்) கூடியிருந்து
குளிர்ந்து, kulirndhu - குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய்
501திருப்பாவை || 28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா
உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!, kuraiyu ondruum illaadha govindhaa! - உனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும்
யாம், yaam - நாங்கள்
கறவைகள் பின் சென்று, karavaigal pin sendru - பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து, gaanam sendhu - காடு சேர்ந்து
உண்போம், unbom - சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்
அறிவு ஒன்றும் இல்லாத, arivu ondruum illaadha - சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து, aan kulathu - இடைக் குலத்தில்
உன் தன்னை, un thannai - உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம், piravi perumthannai punniyam udaiyom - (ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா, iraiva - ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோகி உறவு, un thannogi uravu - உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது, ingu thamakku ozhikka ozhiyadhu - இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம், ariyadha pillai kaalom - (லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை, un thannai - உன்னை
அன்பினால், anbinal - ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும், siru per azhaithanavum - சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ, nee - (ஆச்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே, seeri arulaadhe - கோபித்தருளாமல்
பறை தாராய், parai thaaraay - பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய், el or em paavai - எல் ஓர் எம்பாவாய்
502திருப்பாவை || 29
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும்
உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை, sitram sirukalai - விடி காலத்திலே
வந்து, vandhu - (இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து, unnai sevithu - உன்னைத் தண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள், un pon thaamarai adi potrum porul - உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய், kelaay - கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, perum meydhu unnum kulathil pirandha nee - பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை, engalai - எங்களிடத்தில்
குற்றேவல், kutraeval - அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது, kollaamal pogadhu - திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண், itrai parai kolvaan andru kaan - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும், ettraikum - காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், ez ez piravigkum - (உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு, un thannodu - உன்னோடு
உற்றோமே ஆவோம், utrome aavom - உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே, unakke - உனக்கு மாத்திரமே
நாம், naam - நாங்கள்
ஆள் செய்வோம், aal seyvom - அடிமை செய்யக் கடவோம்;
எம், em - எங்களுடைய
மற்றை காமங்கள், matrai kaamangal - இதர விஷய விருப்பங்களை
மாற்று, maartru - தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்
503திருப்பாவை || 30
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை
அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
வங்கம் கடல், vangam kadal - கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த, kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை, kaesavanai - கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார், thingal thiru mukathu se izhaiyaar - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று, sendru - அடைந்து
இறைஞ்சி, iraainji - வணங்கி
அங்கு, angu - அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை, paraikonda aa aatrai - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை, aṇi pudhuvai - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான், pai kamalam thaṇ theriyal pattar piraan - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை, ko̱thai - ஆண்டாள்
சொன்ன, sonna - அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும், saṅkam tamizh mālai muppathum - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே, thappaame - தப்பாமல்
இங்கு, ingu - இந் நிலத்தில்
இ பரிசு, i parisu - இவ் வண்ணமே
உரைப்பார், uraippaar - ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள், eer irandu maal varai thol - பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்
செம்கண் திருமுகத்து, semkan tirumugathu - சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம், selvam - ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால், thirumaalaal - ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும், engum - எவ்விடத்தும்
திருஅருள் பெற்று, thiruarul petru - (அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர், inpurvar - ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய்