Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 475 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
475திருப்பாவை || 2
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
வையத்து, Vaiyathu - இப் பூமண்டலத்தில்
வாழ்வீர்காள், Vaazhveerkal - வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே
நாமும், Naamum - (எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும்
உய்யும் ஆறு எண்ணி, Uyyum Aaru Enni - உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து
பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி, Paal Kadalul Paiya Thuyindra Paraman Adi Paadi - திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, Aiyamum Pichaiyum Aandhanaiyum Kai Kaatti - (ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும் (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
உகந்து, Ugandhu - மகிழ்ந்து
ஈம் பாவைக்கு செய்யும், Eem Paavaikku Seiyum - நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய
கிரிசைகள், Kirisaikal - க்ரியைகளை
கேளீர், Keleer - காது கொடுத்துக் கேளுங்கள்
நாம், Naam - நோன்பு நோற்கத் தொடங்கின நாம்
நெய் உண்ணோம், Nei Unnom - நெய் உண்ணக் கடவோமல்லோம்
பால் உண்ணோம், Paal Unnom - பாலை உண்ணக் கடவோமல்லோம்
நாட்காலே நீர் ஆடி, Naatkaale Neer Aadi - விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு
மை இட்டு எழுதோம், Mai Ittu Ezhudhom - (கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம்
மலர் இட்டு முடியோம், Malar Ittu Mudiyom - (குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்
செய்யாதன, Seiyaadhana - (மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யோம், Seyyom - செய்யக் கடவோமல்லோம்
தீ குறளை, Thee Kuralai - கொடிய கோட் சொற்களை
சென்று ஓதோம், Sendru Othom - (எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்
ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavay - ஏல் ஓர் எம்பாவாய்