| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 476 | திருப்பாவை || 3 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். | ஓங்கி, Oongi - (மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து உலகு, Ulagu - (மூன்று) லோகங்களையும் அளந்த, Alandhu - (திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய பேர், Per - திருநாமங்களை நாங்கள், Naangal - (பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள் பாடி, Paadi - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி நம் பாவைக்கு சாற்றி, Nam Paavaikku Saatri - நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு நீர் ஆடினால், Neer Aadinaal - நீராடினால் நாடு எல்லாம், Naadu Ellaam - தேசமெங்கும் தீங்கு இன்றி, Theengu Indri - (அதிவிருஷ்டி அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல் திங்கள் மும்மாரி பெய்து, Thingal Mummari Peydhu - மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்) ஓங்கு பெரு செந் நெல் ஊடு, Oongu Peru Sen Nel Oodu - ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே கயல் உகள, Kayal Ugala - மீன்கள் துள்ள பூ, Poo - அழகிய குவளை போதில், Kuvalai Podhil - நெய்தல் மலரில் பொறிவண்டு, Porivandu - மிக்க புகரையுடைய வண்டுகளானவை கண் படுப்ப, Kan Paduppu - உறங்க புக்கு, Pukku - (மாட்டுத்தொழுவிற) புகுந்து தேங்காதே இருந்து, Thengaathe Irundhu - சலியாமல் பொருந்தி யிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, Seertha Mulai Patri Vaanga - (பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க வள்ளல், Vallal - (எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய பெரும் பசுக்கள், Perum Pasukkal - பெரிய பசுக்களானவை நீங்காத செல்வம் நிறைந்து, Neengaadha Selvam Niraindhu - நீங்காத ஸம்பத்து நிறையும்படி குடம் நிறைக்கும், Kudam Niraikkum - (பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும் ஏல் ஓர எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர எம் பாவாய் |