| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 477 | திருப்பாவை || 4 | ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். | ஆழி மழை கண்ணா, Aazhi Mazhai Kanna - மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே! நீ, Nee - நீ கை, Kai - (உன்னுடைய) கொடையில் ஒன்றும், Ondrum - ஒன்றையும் கரவேல், Karavel - ஒளியா தொழியவேணும் (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்) ஆழியுள் புக்கு, Aazhiyul Pukku - கடலினுட் புகுந்து முகந்து கொடு, Mugandhu Kodu - (அங்குள்ள நீரை) மொண்டு கொடு ஆர்த்து, Aarthu - கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து) ஏறி, Eri - (ஆகாயத்தே) ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து, Oozhi Mudhalvan Uruvam Pol Mei Karuthu - காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில், Paazi Am Thol Udai Parpanaban Kaiyil - பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும் நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள) ஆழி போல் மின்னி, Aazhi Pol Minni - திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி வலம்புரி போல் நின்று அதிர்ந்து, Valampuri Pol Nindru Adhirndhu - (இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி சார்ங்கம் உதைத்த, Saarngam Udaitha - ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட சரம் மழை போல், Saram Mazhai Pol - பாண வர்ஷம் போல் வாழ, Vaazha - (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும் நாங்களும், Naangalum - கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும் மகிழ்ந்து, Magizhndhu - ஸந்தோஷித்து மார்கழி நீராட, Maargazhi Neeraada - மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும் உலகினில், Ulaginil - இல் வுலகத்தில் தாழாதே, Thaalaathe - தாமதம் செய்யாமல் (சடக்கென) பெய்திடாய், Peydidaay - மழை பொழியக் கடவை ஏல் ஓர் எம் பாவாய் !, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் ! |