Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 478 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
478திருப்பாவை || 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
மாயனை, Maayanai - மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை, Mannu Vadamadurai Maindhanai - (பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்
தூய பெரு நீர், Thooya Peru Neer - பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை, Yamunai Thuravani - யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்
ஆயர் குலத்தினில் தோன்றும், Aayar Kulathinil Thondrum - இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை, Aani Vilakkai - மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த, Thai Kudal Vilakkanjeydha - தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
தாமோதரனை, Dhamodharanai - கண்ண பிரானை
நாம், Naam - (அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து, Thuyoam Aay Vandhu - பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய், Thoo Malarkal Thoo - நல்ல மலர்களைத் தூவி
தொழுது, Thozhudhu - வணங்கி
வாயினால் பாடி, Vaayinaal Paadi - வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க, Manathinaal Sindikka - நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும், Poya Pizhaiyum - (சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்
புகு தருவான் நின்றனவும், Pugu Tharuvaan Nindranavum - பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும், Theeyinil Doosu Aagum - நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம் (ஆன பின்பு)
செப்பு, Seppu - அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!