Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 480 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
480திருப்பாவை || 7
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பேய் பெண்ணே, Pey Pennae - மதி கெட்ட பெண்ணே!
எங்கும், Engum - எல்லா விடங்களிலும்
ஆனைச் சாத்தன், Aanaich Sathan - பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து, Kalandhu - (ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து
கீசுகீசு என்று, Keesukeesu Endru - கீச்சு கீச்சு என்று
பேசின, Pesina - பேசிய
பேச்சு அரவம், Pechu Aravam - பேச்சினுடைய ஆரவாரத்தை
கேட்டிலையோ, Keatilaiyo - (இன்னும் நீ) கேட்கவில்லையோ?
வாசம், Vaasam - பரிமள வஸ்துக்களினால்
நறு, Naru - மணம் கமழா நின்றுள்ள
குழல், Kuzhal - கூந்தலை யுடைய
ஆய்ச்சியர், Aaychiyar - இடைப் பெண்கள்
காசும், Kaasum - (கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும்
பிறப்பும், Pirappum - ஆமைத் தாலியும்
கலகலப்பு, Kalakalappu - கலகலவென்று சப்திக்கும் படியாக
கைபேர்த்து, Kaiperthu - கைகளை அசைத்து
மத்தினால், Maththinaal - மத்தாலே
ஓசை படுத்த, Osai Padutha - ஓசை படுத்தின
தயிர் அரவம், Thayir Aravam - தயிரின் ஒலியையும்
கேட்டிலையோ, Keatilaiyo - கேட்க வில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய், Nayakap Pen Pillai - பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே
நாராயணன் மூர்த்தி கேசவனை, Naaraayanan Moorthi Kesavanai - ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை
பாடவும், Paadavum - (நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும்
நீ, Nee - நீ
கேட்டே, Keate - (அப் பாட்டைக்) கேட்டு வைத்தும்
கிடத்தியோ, Kitathiyo - (இங்ஙனே) உறங்குவாயோ?
தேசம் உடையாய், Desam Udayaay - மிக்க தேஜஸ்ஸை யுடையவளே!
திற, Thira - (நீயே எழுந்து வந்து கதவைத்) திற
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!