திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 481 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
481திருப்பாவை || எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ண பிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபை யாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது. இங்ஙனே இத்தனை ஆய்ப் பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்தவதற்கு அடி – இவள் கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருக்குமஃதேயாமென்பது கோதுகலமுடை பாவாய் என்ற விளியாற்போதருமென்க. கோதுகலம் – கௌதூஹலம் என்ற வடசொல் விகாரம்; ஆசை என்பது அதன் பொருள்; கண்ணபிரானுடைய ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள என்றபடி. 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பதவுரை Show / Hide
கோதுகலம் உடைய பாவாய், Kodhukalam Udaya Paavay - கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம், Keezh Vaanam - கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது
வெள்ளென்று, Vellendru - வெளுத்தது (அன்றியும்)
எருமை, Erumai - எருமைகளானவை
மேய்வான், Maeyvaan - (பனிப் புல்) மேய்கைக்காக
சிறுவீடு, Siruveedu - சிறு தோட்டங்களில்
பரந்தன, Paranadhan - சென்று புக்கன
போவான் போகின்றார், Povaan Pogindraar - (திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற
மிக்குள்ள பிள்ளைகளும், Mikkulla Pillaigalum - மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து, Pogaamal Kaathu - போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான், Unnai Koovuvaan - உன்னை அழைத்தர் பொருட்டு
வந்து நின்றோம், Vandhu Nindroom - உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம்
எழுந்திராய், Ezhundhirai - (எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு
பாடி, Paadi - (கண்ண பிரானுடைய குணங்களைப்) பாடி
பறை கொண்டு, Parai Kondu - (அவனிடத்துப்) பறையைப் பெற்று
மா வாய் பிளந்தானை, Maa Vaai Pilanthaanai - குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும்
மல்லரை மாட்டிய, Malarai Maattiya - மல்லர்களை மாளச் செய்தவனுமான
தேவாதி தேவனை, Thevaadhi Thevani - அத் தேவ தேவனை
நாம் சென்று சேவித்தால், Naam Sendru Sevithaal - நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்)
ஆராய்ந்து, Aaraayndhu - (நமது குறைகளை) ஆராய்ந்து
ஆ ஆ என்று அருளும், Aa Aa Endru Arulum - ஐயோ! என்று இரங்கி யருள்வன்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் !