| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 482 | திருப்பாவை || 9 | தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். | தூ மணி மாடத்து, Thoo Mani Maadathu - பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில் சுற்றும், Sutrum - நாற் புறமும் விளக்கு எரிய, Vilakku Eriya - விளக்குகள் எரியவும் தூபம் கமழ, Thoopam Kamazha - (அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும் துயில் அணை மேல் கண் வளரும், Thuyil Anai Mel Kan Valarum - மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற மாமான் மகளே, Maamaan Magale - அம்மான் பெண்ணே! முணி கதவம், Muni Kadhavam - மாணிக்கக் கதவினுடைய தாள், Thaal - தாழ்ப்பாளை திறவாய், Thiravaay - திறந்திடுவாயாக மாமீர், Maameer - அம்மாமீ! அவளை, Avalai - (உள்ளே உறங்குகிற) உன் மகளை எழுப்பீரோ, Ezhuppiro - எழுப்ப மாட்டீரோ? உன் மகள், Un Magal - உன் மகளானவள் ஊமையோ, Oomaiyo - வாய்ப் புலன் இல்லாதவளோ? அன்றி, Andri - அல்லாமற் போனால் செவிடோ, Sevido - செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி) அனந்தலோ, Ananthalo - பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி) பெரு துயில், Peru Thuyil - பெரிய படுக்கையில் ஏமப்பட்டாளோ, Emapattalo - காவலிடப்பட்டாளோ? (அன்றி) மந்திரம்பட்டாளோ, Manthirampattalo - மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ? மா மாயன், Maa Maayan - அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே! மாதவன், Maadhavan - திருமகள் கேழ்வனே! வைகுந்தன், Vaigundhan - ஸ்ரீ வைகுண்டநாதனே! என்று என்று, Endru Endru - என்று பலகால் சொல்லி நாமம் பலவும், Naamam Palavum - (எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும் நவின்று, Navindru - (வாயாரக்) கற்றோம் ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்! |