Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 483 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
483திருப்பாவை || 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
நோற்று, Nottru - நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற, Suwarkkam Pugukindra - ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய், Ammaanai - அம்மே!
வாசல் திறவாதார், Vaasal Thiravaadhaar - வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ, Maatramum Thaararo - ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி, Naatrat Thuzhaay Mudi - நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன், Naaraayanan - நாராயணனும்
நம்மால் போற்ற பறை தரும், Nammaal Potra Parai Tharum - நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால், Punnianaal - தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த, Kootratthin Vaai Veezhndha - யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும், Kumbakaranum - கும்பகர்ணனும்
தோற்று, thottru - தோல்வி யடைந்து
பெருந்துயில், perunthuyil - (தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ, unakke thaan thandhaano - உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய், aatra anandhal udaiyaay - மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே, arum kalame - பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற, thettram aay vandhu thira - தெளிந்து வந்து (கதவைத்) திறந்திடு
ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய்