| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 484 | திருப்பாவை || 11 | கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். | கன்று கறவை, kanru karavai - கன்றாகிய பசுக்களின்னுடைய பல கணங்கள், pala kanangal - பல திரள்களை கறந்து, karandhu - கறப்பவர்களும் செற்றார், setraar - சத்துருக்களினுடைய திறல் அழிய, thiral azhiya - வலி அழியும்படி சென்று, sendru - (தாமே படையெடுத்துச்)சென்று செரு செய்யும், seru seyyum - போர் செய்யுமவர்களும் குற்றம் ஒன்று இல்லாத, kutrram ondru illaadha - ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான கோவலர் தம், kovalar tham - கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த) பொன் கொடியே, pon kodiyae - பொன் கொடி போன்றவளே! புற்று அரவு அல் குல் புனமயிலே, putru aravu al kul punamayile - புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில் (இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே! செல்வம் பெண்டாட்டி, selvam pendatti - செல்வமுள்ள பெண் பிள்ளாய்! போதராய், podharaayo - (எழுந்து) வருவாயாக சுற்றத்து தோழிமார் எல்லாரும், sutratthu thozhimaar ellaarum - பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும் வந்து, vandhu - (திரண்டு) வந்து நின் முற்றம் புகுந்து, ninn mutram pogundhu - உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட, mugil vannan paer paada - கார் மேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும் நீ , nee - (பேருறக்கமுடைய) நீ சிற்றாது, sirtradhu - சலியாமலும் பேசாது, pesadhu - (ஒன்றும்) பேசாமலும் உறங்கும் பொருள் எற்றுற்கு, urangum porul etrurku - உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்) ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய் |