| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 485 | திருப்பாவை || 12 | கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். | இள கன்று எருமை, ila kanru erumai - இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை கனைத்து , kanaithu - (பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு கன்றுக்கு இரங்கி,kanruku irangi - (தன்) கன்றின் மீது இரக்கமுற்று நினைத்து, ninaithu - (கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்) முலை வழியே நின்று பால் சோர, mulai vazhiye nindru paal soora - முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக(அப்பெருக்கினால்) இல்லம், Illam - வீட்டை நனைத்து, nanaithu - (முழுவதும்) ஈரமாக்கி சேறு ஆக்கும் நல் செல்வன் , seru aakkum nal selvvan - சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய தங்காய் , thangai - தங்கையானவளே! பனி, Pani - பனியானது தலை வீழ, thalai veezha - எங்கள் தலையிலே விழும்படி நின் வாசல் கடை பற்றி, nin vaasal kadai patri - உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு சினத்தினால் , sinathinaal - (பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால் தென் இலங்கை கோமானை, then Ilangai komanai - தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை செற்ற - கொன்றொழித்தவனும் மனத்துக்கு இனியானை - சிந்தனை இனியனுமான இராம பிரானை பாடவும், padavum - நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும் நீ, Ni - நீ வாய் திறவாய், Vaai thiravai - வாய்திறந்து பேசுகிறாயில்லை இனித் தான், iniththaan - எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும் எழுந்திராய், Ezhundhirai - எழுந்திரு ஈது என்ன பேர் உறக்கம், Eedhu enna Per Urakkam - இஃது என்ன ஓயாத தூக்கம்? அனைத்து இல்லத்தாரும் , anaitthu illathaarum - (இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும் அறிந்து, arindhu - (நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று |