Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 486 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
486திருப்பாவை || 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
புள்ளின் வாய் கீண்டானை , pullin vaai keenndaanai - பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை , pollaa arakkanai killi kalainthaanai - கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய

கீர்த்திமை பாடி போய், keerthimai paadi poi - லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும், pillaigal ellaarum - எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார், paavai kalam pukaar - நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்
வெள்ளி எழுந்து, velli ezundhu - சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று, viyaazham urangitru - ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான்(அன்றியும்)
புள்ளும், pullum - பறவைகளும்
சிலம்பின, silambina - (இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன
போது அரி கண்ணினாய், podhu ari kanninaai - புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே
பாவாய், paavaai - பதுமை போன்றவளே!
நீ, nee - நீ
நல் நாள், nal naal - கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து, kallam thavirndhu - (கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து, kalanthu - எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே, kullak kullira kudaindhu neer aadaadhe - உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தி யோ, palli kidathiyo - படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல், aal - ஆச்சரியம்!