| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 487 | திருப்பாவை || 14 | உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். | உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள், ungal puzhaikkadai toattathu vaaviyul - உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள செங் கழுநீர், seng kazhuneer - செங்கழுநீர்ப் பூக்களானவை வாய் நெகிழ்ந்து, vaai nekizhndhu - விகஸிக்க ஆம்பல் வாய் கூம்பின, aambal vaai koompina - ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின (அன்றியும்) செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர், sengal podi koorai ven pal thavaththavar - காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள் தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான், thangal thiruk koyil sangu iduvaan - தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக போகின்றார், pogindraar - போகா நின்றனர் எங்களை, engalai - எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய், munnam ezuppvaan vaai pesum nangaai - முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே! நாணாதாய், naanaadhaay - (‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே நா உடையாய், na udaiyaay - (இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே! சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன், sangodu chakkaram aendhum thada kaiyan - சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும் பங்கயக் கண்ணனை, pangayak kannanai - தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை பாட, Paada - பாடுகைக்கு எழுந்திராய், ezunthiraai - எழுந்திரு ஏல் ஓர் எம் பாவாய்!, ael oar em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்! |